சனி, 17 அக்டோபர், 2009

வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம்கள் நீக்கம்

ஹாக்கி விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் பெற்று பின் அரசியல்வாதியான அஸ்லம் ஷேர்கான் சமீபத்தில் பத்திரிக்கை பேட்டியின் போது தான் எம்பி யாக தேர்வு செய்யப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.கட்சி வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம் பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முஸ்லிம் வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கும் முயற்சியில் பா.ஜ. அரசு ஈடுபட்டு வருவதாக பகிரங்க குற்றம் சாட்டிய அவர், தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக போபால் நகரத்தில் 20வது வார்டு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 1260 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இந்த முஸ்லிம் வாக்காளர்கள் நிச்சயமாக பா.ஜ.கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என பி.ஜே.பி நம்புவதால் இத்தகய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.இந்தூர், உஜ்ஜைன் பகுதிகளிலும் இதே முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.நியாயமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய பிரதேசத்தை குஜராத்தாக மற்றும் எந்த வேலையிலும் பி.ஜே.பி. ஈடுபடக்கூடாது என்றும் அவர் கூறினார்.காங்கிரஸ் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் தான் மத்திய பிரதேசத்தில் கடந்த முறை பி.ஜே.பி. வெற்றி பெற்றது என்றும் இம்முறையும் அவ்வாறு நடந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக