வியாழன், 26 ஜூலை, 2012

புனிதமிகு ரமளான் மாதத்தில் இறைவனிடம் இறைஞ்சுவோம் சொந்தங்களுக்காக....!

புனிதமிகு ரமளான் மாதத்தில் இறைவனிடம் இறைஞ்சுவோம் சொந்தங்களுக்காக....!


அன்புச் சகோதரர்களே துஆக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இந்த புனிதமிகு ரமளான் மாதத்தில் பல்வேறு இடங்களிலே தாக்குதலுக்கள்ளாக்கப்பட்டு உடமைகளை இழந்து, சொந்தங்களை இழந்து ஏழ்மைநிலையில் வாடும் அப்பாவி முஸ்லிம்கள் வாழ்வில் விடிவு பெற, உண்ண உணவு இல்லாமல் நோன்பு வைத்து உண்ண உணவு இல்லாமல் நோன்பு திறக்கும் அளவிற்கு வறுமைநிலையில் வாடும் சோமாலியா மக்களுக்கு பசியை போக்கும் உணவு வகைகளும் பொருளாதார செழிப்பயும் ஏறபடுத்துவாயாக யா அல்லாஹ். நமக்கு அருகில் விதவிதமான உணவுகள் இருக்கின்றது. எல்லா சகல வசதிகளையும் அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி தந்திருக்கிறான். ஆனால் பல பகுதிகளிலே இன்னும் வறுமை வாட்டுகிறது. பல பகுதிகளில் முஸ்லிம்களின் உயிர்கள் சூறையாடப்பட்டு கொண்டிருக்கிறது. இவைகள் அனைத்திலிருந்தும் முஸ்லிம்கள் விடுபட்டு அமைதி பெறவும் வழிவகுப்பாயாக யாஅல்லாஹ். உன்னுடைய அருளை அவர்கள் மீது இறக்கி வைப்பாயாக யாஅல்லாஹ் என இருகரம் ஏந்துவோம்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
மனிதநேய மக்கள் கட்சி
மாணவர் இந்தியா
முத்துப்பேட்டை நகரம், திருவாரூர் மாவட்டம்.