சனி, 31 அக்டோபர், 2009

கல்பாக்கம் அணுமின் நிலையம் எதிரே ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் கைது



கல்பாக்கம் அணுமின் நிலையம் மற்றும் அது சார்ந்த துறைகளில் சிறுபான்மையினருக்கும், 16 கி.மீ சுற்று வட்டார மண்ணின் மைந்தர்களுக்கும் உரிய அளவில் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் போன்றவற்றில் இடஒதுக்கீடு கேட்டு மனிதயே மக்கள் கட்சியின் சார்பில் இன்று காலை 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





அணுமின் நிலைய வளாகத்தின் முக்கிய வாயில்கள் மூடப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு போராட்டத்திற்கும் காவல்துறை தடை விதித்தது.



இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது தலைமையில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தடையை மீறி அங்கு கூடினர்.



தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், ம.ம.க பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, மதிமுக தலைமைக் கழக பிரதிநிதி வந்திய வேந்தன், டாக்டர். புகழேந்தி, புரட்சி பாரதம் மாவட்டச் செயலாளர் சங்கர் உட்பட பங்கேற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு காவல்துறை வாகனங்களில் பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

புதன், 28 அக்டோபர், 2009

துபாய் முமுக அலுவலகத்தில் சொற்பொழிவு

செவ்வாய், 27 அக்டோபர், 2009

பொள்ளாச்சியில் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு


பொள்ளாச்சியில் கடந்த அக்டோபர் 23 அன்று தமுமுகவின் 75வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் அர்ப்பணித்து சிறப்புரையாற்றினார்.
ம.ம.க துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி. தமுமுக மற்றும் ம.ம.க மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு பொதுக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

திங்கள், 26 அக்டோபர், 2009

தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு!!

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக தலைமைச் செயலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, முகமது சிப்லி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விவரம்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தின்போது ஆண்டுதோறும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. மசூதிகள் அதிகம் உள்ள பாதையில் விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதால்தான் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்கின்றன; எனவே, மாற்றுப் பாதையில் ஊர்வலத்தை நடத்த வேண்டும் என்று கோரி வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “மனுதாரர் தெரிவிக்கும் மாற்றுப் பாதை யோசனையை உரிய முக்கியத்துவம் கொடுத்து பரிசீலிக்க வேண்டும்’ என்று மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது.

“முத்துப்பேட்டையில் உள்ள முஸ்லிம்களின் சொத்துகளையும், உயிர்களையும் பாதுகாப்பது வருவாய்த் துறை மற்றும் போலீஸôரின் கடமை’ என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக நடைபெற்ற அமைதிக் கூட்டத்தில் பெரும்பாலான இந்துக்கள் ஒப்புக்கொண்ட பிறகும், நாங்கள் தெரிவித்த மாற்றுப்பாதை யோசனையை மாவட்ட ஆட்சியர் ஏற்கவில்லை.

இந்து முன்னணியின் தலைவர் ராம. கோபாலன் தலையீட்டிற்குப் பிறகு பழைய பாதையிலேயே விநாயகர் ஊர்வலம் நடைபெறும் என்று அறிவித்தனர். விநாயகர் ஊர்வலம் 02.09.09-ல் நடைபெற்றது. அப்போது, ஊர்வலப் பாதையில் இருந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியும், மசூதி மற்றும் கடைகளும் தாக்கப்பட்டன. உயர் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாததாலேயே விநாயகர் ஊர்வலத்தில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. எனவே, தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன், மாவட்ட எஸ்.பி. பிரவீண் குமார் அபினவ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. நீதிபதி ரவிராஜபாண்டியன், நீதிபதி எம். எம். சுந்தரேஷ் ஆகியோர் கொண்ட டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் இந்த மனு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் எஸ். பிரபாகரன், வி. காசிநாதபாரதி ஆகியோர் ஆஜராயினர். இதுதொடர்பாக அரசின் கருத்தை அறிந்து, நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது
Last Updated :

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

கோட்டக்குப்பத்தில் தீயினால் பாதிக்கப் பட்டோருக்கு உதவி


விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் ரஹ்மத் நகர் ஐயனார்கோயில்மேட்டில் கடந்த 4.10.2009 அன்று நடந்த தீ விபத்தில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி 16.10.2009 அன்று தமுமுக மற்றும் ம.ம.க.வின் சார்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தமுமுக நகர தலைவர் ஜே. சம்சுதீன் தலைமை தாங்கினார். மமக நகர செயலாளர் ஏ. தாஜுதீன் முன்னிலை வகித்தார். அமீர் அம்ஜா ராபீயாபீ, ஜெய்னுல் ஆபிதீன் சௌதாகனி மற்றும் மஸ்ஜிதே முத்தகீன் பள்ளி முத்தவல்லி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 40,000 மதிப்பிலான பொருட்கள் வழங்கப்பட்டன. தமுமுக மற்றும் ம.ம.க. மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் ஏராளமானோர் இதில் கலந்துகொண்டனர்.

சனி, 24 அக்டோபர், 2009

ஓச்சிரா வழக்கு: அப்துன் நாஸர் மாதனி விடுதலை



1992ல் ஐ.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக அப்துன் நாஸர் மாதனி இருந்த போது அவர் மீது காவல்துறை போட்ட ஒரு வழக்கில் தற்போது அவர் விடுதலை ஆகியுள்ளார்.

1992ல் உ.பி. மாநிலம் பைசாபாத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2, 1992ல் கேரளாவில் முழு அடைப்பிற்கு இஸ்லாமிக் சேவக் சங் (ஐ.எஸ்.எஸ்.) அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. முழு அடைப்பின் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அடைப்பின் போது ஏற்பட்ட கலவரத்தில் பல காவலர்கள் காயமடைந்தனர். முழு அடைப்பின் போது ஒச்சராவில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்த அப்துன் நாஸர் மாதனி தான் வன்முறையை துண்டினார் என்று அவர் மீது காவல்துறை வழக்கு பதிவுச் செய்தது. முழு அடைப்பின் போது காவல்துறை வாகனங்களுக்கும், அரசு பேரூந்துகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன என்றும் காவல்துறை கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை கூட பயன்படுத்தவில்லை என்றும் வானத்தை நோக்கி மட்டும் சுட்;டதாகவும் காவல் தரப்பில் வாதிக்கப்பட்டது.


கொல்லம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சரியான சாட்சியங்களை காவல்துறை சமர்பிக்கவில்லை என்றும் சாட்சிகளால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்ட இயலவில்லை என்று கூறி அப்துன் நாசர் மாதனி உட்பட அனைவரையும் நீதிபதி இ.பைஜுவிடுதலைச் செய்தார். இவ்வழக்கில் இருந்து விடுதலை ஆனது குறித்து அப்துன் நாஸர் மாதனி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

வெள்ளி, 23 அக்டோபர், 2009

மாலேகான் ஜாமிஆ மஸ்ஜித் இமாம் அபார வெற்றி மாலேகான் மத்திய தொகுதியில் காங்கிரஸ் படுதோல்வி !
மராட்டிய மாநில சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் மாலேகான் மத்திய சட்டமன்றத் தொகுதியில் ஜாமிஆ பள்ளிவாசலின் இமாம் மவ்லவி ஹாபிஸ் முப்தி முஹம்மது இஸ்மாயில் காங்கரஸ் வேட்பாளரை தோற்கடித்து அபார வெற்றிப் பெற்றுள்ளார். மராட்டிய சட்டமன்றத்திற்குள் நுழையும் முதல் மவ்லவி என்ற சிறப்பையும் இவர் பெறுகிறார்.
வட மராட்டியத்தில் நாசிக் அருகில் உள்ள நெசவு;நகரம் மாலேகான் ஆகும். இந்த நகரத்தில் 2006 மற்றும் 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் நாட்டையே உலுக்கின. முதலில் 2006ல் இந்நகரில் உள்ள பள்ளிவாசல் வளாகத்தில் செப்டம்பர் 8 அன்று ஜும்ஆ தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 38 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மீண்டும் இதே நகரில் ஈகைத் திருநாளுக்கு சில தினங்களுக்கு முன்பு செப்டம்பர் 28 அன்று குண்டு வெடித்து ஐந்து முஸ்லிம்கள் பலியானார்கள்.2006ல் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்காக அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் கைதுச் செய்யப்பட்டார்கள். காவல்துறையின் இந்த போக்கு மாலேகான் முஸ்லிம்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் மீது அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். இந்த கோபத்தின் காரணமாக 2007ல் நடைபெற்ற மாலேகான் மாநகராட்சி தேர்தலில் முப்தி முஹம்மது இஸ்மாயில் தலைமையிலான ஜன் சூரிய சக்தி கட்சி காங்கிரசை தோற்கடித்து பெரும் வெற்றிப் பெற்றது. 2008ல் நடைபெற்ற குண்டுவெடிப்பிற்கு காரணம் பிரகய சிங் தாகூர், கர்னல் புரோகித் போன்ற சங் பயங்கரவாதிகள் தான் என்று மறைந்த ஹேமந்த் கர்கரே தலைமையிலான பயங்கரவாத எதிர்ப்பு படை கண்டுபிடித்திருந்தாலும் அந்த விசாரணை தொடர்ந்து சரிவர நடைபெறவில்லை என்ற கோபம் மாலேகான் முஸ்லிம்களுக்கு இருந்து வந்தது. இரண்டாவது குண்டுவெடிப்பிற்காக கைதுச் செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது விதிக்கப்பட்ட மோகா என்னும் தடுப்புச் சட்டமும் நீதிமன்றத்தில் நீக்கப்பட்டது ஆளும் காங்கிரஸ் மீது இன்னும் கோபத்தை மாலேகான் மக்களுக்கு ஏற்படுத்தியது.மராட்டியத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி பெரும் வெற்றிப் பெற்று மூன்றாம் முறையாக ஆட்சியை பிடித்தப் போதினும் மாலேகான் மத்திய தொகுதியில் அந்த கூட்டணி படுதோல்வி அடைந்தது. மாலேகான் மத்திய தொகுதியில் 2,38,684 வாக்களார்கள் உள்ளனர். இவர்களில் 90 சதவிகிதத்தினர் முஸ்லிம்கள் ஆவர். மராட்டியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் முஸ்லிம்கள் வசிக்கும் தொகுதியாக மாலேகான் அமைந்துள்ளது.அக்டோபர் 13 அன்று மாலேகான் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் 63.8 சதவிகிதம் வாக்குகள் (1,51,269) பதிவாகின. இதில் ஏறத்தாழ பாதிக்கு சற்று குறைவான வாக்குகளை (71,157) முப்தி முஹம்மது இஸ்மாயில் ; பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 53,238 வாக்குகளைப் பெற்றார். 17,919 வாக்குகள் வித்தியாசத்தில் முப்தி இஸ்மாயில் வெற்றிப் பெற்றார். தோல்வி அடைந்த காங்கிரஸ் வேட்பாளர் ஷேக் ரஷீத் 1999 முதல் இத்தொகுதியில் வெற்றி பெற்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.மாலேகான் தொகுதியில் காங்கிரசுக்கு கிடைத்த தோல்வி அக்கட்சிக்கு ஒரு நல்ல பாடமாகும். சிறுபான்மை மக்களின் உள்ளக்குமுறல்களுக்கு செவி சாய்க்காவிட்டால் அக்கட்சிக்கு என்ன நேரிடும் என்பதற்கு இது ஒரு எடுத்துக் காட்டாகும். மாலேகான் தொகுதி முஸ்லிம் வாக்காளர்களும் தமது நலனுக்காக பாடுபடும் சமுதாய கட்சியின் வேட்பாளரை ஒத்துமொத்தமாக ஆதரித்து வெற்றிப் பெற வைத்துள்ளார்கள். நாட்டில் வாழும் பிற முஸ்லிம்களுக்கு இது நல்ல முன்னுதாரமாக விளங்குகின்றது.

வியாழன், 22 அக்டோபர், 2009


ஒபாமாவிற்கு நோபல் பரிசு கொடுத்தது சரியா? தமுமுக தலைவர்




(இந்த செய்தியை படிப்பதற்கு படத்தை க்ளிக் )
கல்கி
வார இதழில் அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு நோபல் பரிசளித்திருப்பது பற்றி தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி

புதன், 21 அக்டோபர், 2009

வாலிகண்டபுரம்: அடக்கஸ்தலத்தில் புதைக்க உரிமை மறுப்பு!தமுமுக முயற்சியால் முறியடிப்பு!!
பெரம்பலூருக்கு அருகே சென்னை செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது வாலிகண்டபுரம் கிராமம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமத்தில் 2 பள்ளிவாசல்கள் உள்ளன. மேலும் 2 ஏக்கர் 70 சென்ட் பரப்பளவுடைய முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் ஒன்றும் உள்ளது. ஆனால் முஸ்லிம்களின் கபரஸ்தான் நிலத்தை ஆக்கிரமித்த சிலர் கபரஸ்தான் நிலத்துக்கு உரிமை கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.

1981ல் முன்சீப் கோர்ட், 1987 மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 1991ல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும், 'நிலம் முஸ்லிம்களுக்கே சொந்தம்' என தீர்ப்பளித்தன. எனினும் அதிகார வர்க்கத்தை கையில் போட்டுக் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்து வந்தனர்.

இந்நிலையில் 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்து கபரஸ்தானில் அடக்கம் செய்ய அனுமதி கோரினர். உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது. எனினும் 2 முறை ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முயன்றபோதும் ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறையினரைத் தூண்டிவிட்டு அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர் ஆக்கிரமிப்பாளர்கள்.அதிகாரிகளும் 'பீஸ் மீட்டிங்' என்ற பெயரில் முஸ்லிம்களின் உரிமையைத் தொடர்ந்து மறுத்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த 11.10.09 அன்று இறந்த ஒருவரது உடலை அடக்கம் செய்ய சென்றபோது ஆக்கிரமிப்பு சக்திகளின் அடிவருடிகளான ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து முஸ்லிம்களை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் ஜமாத்தினர் தமுமுக மாவட்டத்தலைவர் மீரான் மைதீனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தமுமுக நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். எனினும் வெளியூர்காரர்கள் என்று தமுமுக நிர்வாகிகளுக்கு பீஸ் மீட்டிங்கில் அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் இந்த ஒரு தடவை இங்கு அடக்கம் செய்யாதீர்கள், அடுத்த தடவை நாங்கள் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் சமரசம் பேசினர் அதிகாரிகள். எனினும் தமுமுகவினர் உஷார்படுத்தியதால் ஜமாத்தினர் இந்த சூழ்ச்சிக்கு அடிபணியவில்லை.மாவட்ட நிர்வாகிகள் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பொதுச் செயலாளர், தொலைபேசி மூலம் ஆர்.டி.ஓ.விடம் பேசினார். எனினும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவுவதிலேயே உறுதியாக நின்றனர் அதிகாரிகள்.

இதையடுத்து பொதுச் செயலாளரின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து தமுமுகவினர் குவிய ஆரம்பித்தனர். இப்பிரச்சினைக்கு இறுதி முடிவைக் காணவும், முஸ்லிம்களின் உரிமையினை மீட்டெடுக்கவும் தமுமுக தலைமை முடிவெடுத்தது. திருச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்ட தமுமுகவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் பெரம்பலூர் நோக்கி கிளம்ப ஆயத்தமாயினர். பொதுச் செயலாளரும் நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகிறேன் என்று சென்னையிலிருந்து புறப்பட, செய்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்றது. அவர் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. இல்லாததால், அரியலூர் மாவட்ட எஸ்.பி. நஜ்முல் ஹுதாவை, பிரச்சினையை சமாளிக்கக் கோரினார். போலீஸ் படையும் குவிக்கப்பட்டது.

தமுமுக மாவட்டத் தலைவர் மீரான் மைதீன், மாவட்டச் செயலாளர் தாஹிர் பாஷா, ம.ம.க. மாவட்ட செயலாளர் சுல்தான் மைதீன் தலைமையில் தமுமுக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டிருந்தனர். பல்வேறு சமுதாய அமைப்பின் நிர்வாகிகளும் வந்திருந்தனர். எனினும் முஸ்லிம் தரப்பு ஆவணங்களையும், உயர்நீதிமன்றத்தின் ஆணையையும் பார்த்த எஸ்.பி. நஜ்முல் ஹுதா, முஸ்லிம்கள் அந்த இடத்திலேயே அடக்கம் செய்து கொள்ள அனுமதி அளித்தார். இதனால் ஜனாஸா, முஸ்லிம்களின் கபரஸ்தானிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

முஸ்லிம்களின் ஒற்றுமையையும், தமுமுகவினரின் போராட்டக் குணத்தை யும் பார்த்த அதிகாரிகளும், ஆக்கிரமிப்பு சக்திகளும் திகைத்து நின்றனர்.பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்த மகிழ்ச்சியில் ஜமாத்தினர் தமுமுகவினருக்கும், தமுமுக தலைமைக்கும் நன்றி கூறினர்.

மேலும் எதிர்வர இருக்கும் மாவட்ட ஆட்சியருடனான சந்திப்பின் போதும், பிரச்சினைகளின் போதும் அனைத்து சமுதாய அமைப்புகளும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.













செவ்வாய், 20 அக்டோபர், 2009

தமிழகத்தை கலவரக் காடாக்கத் துடிக்கும் குமுதம் ரிப்போர்ட்டர்
ஒருவனுக்கு சொல் புத்தி இருக்க வேண்டும். அல்லது சுயபுத்தி இருக்க வேண்டும். இரண்டும் இல்லாதவன் அறிவிலும், ஆற்றலிலும் நியாயத்தை எடைபோடும் விஷயத்திலும் இரண்டும் கெட்டானாகவேகருதப்படுவான். அதற்கு உடனடி உதாரணம் குமுதம் ரிப்போர்ட்டரில் 'செல்வா' என்பவரின் பெயரில் எழுதப்பட்டிருக்கும் இளம் பெண்களைக் குறிவைக்கும் 'லவ் ஜிகாத்' மிரண்டு கிடக்கும் பெற்றோர் என்ற தலைப்பில் வெளியான செய்தியைக் கூறலாம்.
வடமாநிலங்களிலும், கர்நாடகாவிலும் பரப்பிய மதவெறித் தீயைப் போல கேரள மாநிலத்தில் வழிபாட்டுத்தலம் தொடர்பான சர்ச்சைகளை வைத்து அரசியல் செய்ய முடியாது என்பதை சங்பரிவார் அனுபவப்பூர்வமாக உணர்ந்து பலமுறை படுதோல்விகளை பரிசாகப் பெற்றதால் கச்சிதமாக திட்டமிட்டு கேரள மாநிலத்தில் கரையேறலாம் என்பதற்காக சங்பரிவார் நச்சு சிந்தனைகளின் தலைமைப்பீடம் கண்டுபிடித்த 'அவதூறு கற்பிதம்'தான் லவ் ஜிஹாத் என்ற திரிபுவாதமாகும்.
இந்த விவகாரத்தின் வீரியம் அறியாது தனது பெயரையும், இதழியல் அறத்தையும் தொலைத்துவிட்டு தரம் தாழ்ந்தது குமுதம் ரிப்போர்ட்டர்.
'லவ் ஜிஹாத்' என்ற குதர்க்கமான பிரச்சார வாசகத்தை வைத்து நாட்டையே கலவரக்காடாக்க சங்பரிவார் திட்டமிட்டிருப்பதும் அதற்கு நாட்டின் அதிமுக்கிய துறைகளில் உள்ள பொறுப்பு வாய்ந்த பெரிய மனிதர்களும், சில நச்சு சிந்தனை கொண்ட ஊடகங்களும் துணை போகும் கொடுமையை விலாவாரியாக விவரிக்கத் தொடங்கினால் நெஞ்சம் கொதித்துப் போகும்.
சமீபத்தில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள், இரண்டு முஸ்லிம் இளைஞர்களைக் காதலித்து பின்னர் இஸ்லாமிய நெறியை ஏற்றுக்கொண்டு திருமணமும் முடித்துக் கொண்டனர். இரண்டு பெண்களில் ஒருவர் கேரள மாநில பாரதீய ஜனதா தலைவர் ஒருவரின் மகள். மற்றொருவர் கேரள மாநில போலீஸ் உயர் அதிகாரியின் மகள். (இந்த விவரங்களை குமுதம் ரிப்போர்ட்டர் சாமர்த்தியமாக மறைத்துவிட்டது).
இந்த இரண்டு இளம்பெண்களும் இஸ்லாத்தைப் பற்றி அறிந்துகொள்ள மதரஸா என்னும் மார்க்க கல்விக்கூடத்தில் சேர்ந்து இஸ்லாமியக் கல்வி கற்றனர்.
இந்த நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இரண்டு பெண்களின் அப்பாக்க ளும் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் என்று அழைக்கப்படும் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இளம்பெண்கள் இருவரும் ஹிஜாபுடன் நீதிமன்றத் தில் ஆஜர் ஆனார்கள். ஹிஜாபுடன் வந்த ஹிந்து பெண்கள் என ஒரு பதட்டப்பிரச்சாரத்தை மீடியாக்கள் பரப்பின. இரண்டு இளம் பெண்களின் தகப்பன்மார்களும் தங்கள் பெண்களை வற்புறுத்தி மிரட்டி மதம் மாறச் செய்தனர் என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
ஆனால், அது அவதூறு நிறைந்த பொய்ப் புகார் என்பதை நீதிமன்றத்திற்கு வந்த இரண்டு இளம் பெண்களும் நிரூபித்தனர். கட்டாயப்படுத்தி மதம் மாற்றியிருந்தால் அவர்கள் ஏன் ஹிஜா புடன் நீதிமன்றத்திற்கு வரவேண்டும் என்ற கேள்வி அனைவரின் உள்ளங்களிலும் எழுந்தது. ஆனால் இரண்டு இளம் பெண்களும்.... ஹிஜாபுடன் நீதிமன்றம் வந்த தகவலை வெளியிட்ட குமுதம் ரிப்போர்ட்டர் இதழ் கட்டாயப் படுத்தி மதம் மாற்றப்பட்டனர் என்று வெளியிட்டது. தன்னையறியாமல் உண்மையைக் கூறியதோடு உளறியும் கொட்டியது.
இரண்டு முஸ்­லிம் இளைஞர்களுக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டதால் இரண்டு இளைஞர்களும் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் நீதிபதி முஸ்­ம் இளைஞர்களின் கோரிக்கையை தள்ளுபடி செய்ததோடு, லவ் ஜிஹாத் குறித்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என உள்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.
லவ் ஜிஹாத் என்ற சொல் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. உள்ளிட்ட தீவிர மதவெறி அமைப்புகள் திட்டமிட்டு பரப்பிய பொய் வாதமாகும். லவ் ஜிஹாத் குறித்து மதவெறி அமைப்புகள் பொதுக்கூட்டங்கள், துண்டுப் பிரசுரங் களை வெளியிட்டு கேரளாவை பதட்டத் தின் பிடியில் ஆழ்த்தின. மதவெறி பிற்போக்கு சக்திகள் பயன் படுத்திய அதே வார்த்தையை மாண்புமிகு நீதிபதி பயன்படுத்தி, தான் எங்கிருந்து தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தியிருப்பதாகவே படுகிறது.
காத­லிப்பதும், காதலுக்காக மதம் மாறு வதும், தொன்று தொட்டு நடை பெற்று வரும் ஒன்று தான். முஸ்லி­ம் இளைஞர்களை பிற சமூகப் பெண்கள் காத­லிப்பதும் மதம் மாறுவதும் பரவலாக இருக்கலாம். அல்லது இல்லாமலும் இருக்கலாம் ஆனால் இதனை உள்நோக்கத்தோடு பாசிஷ சக்திகள் பரப்புவது அவர்களது பிறவிக் குணம். ஆனால் நீதித்துறையில் உள்ள சிலரும், குமுதம் ரிப் போட்டர் போன்ற ஊடகங்களிலும் விஷவைரஸ்கள் புகுந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. நாட்டில் வீண் பதட்டத்தையும், வன்முறையையும் விதைத்து அதை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கிறோம்.

திங்கள், 19 அக்டோபர், 2009

முதுப்பேட்டையைச் சேர்ந்த இரண்டு வாலிபர் மினி லாரி மோதி விபத்திள் மரணம்
அஸ்ஸலாமு அலைக்கும்..(வரஹ்)
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை குண்டாங்குலத் தெருவை சேர்ந்த நிஜாம் அவர்கலின் மகனார் பிரோஸ்கான் அவர்கலும்,ஆசாத் நகாரைச் சேர்ந்த மரைக்கான் அவர்கலும் நம் ஊரில் இருந்து அதிராம்பட்டினத்திற்க்கு இருச்சகர வாகனத்தில் செல்லும் வழியில் கருங்குலம் என்னும் கிராமத்தில் மினி லாரி ஒன்று மோதி விபத்துக்கு பலியாணார்கல்,(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிர்ராஜிஊன்)
இச்சம்பவம் சுமார் 5.45 மணி அளவில் நடைப்பெற்றது இதில் சம்பவ இடத்திலேயே பிரோஸ்கான் உடல் நசுங்கி உயிர் இழந்தார்,மற்றவர் சிகிச்சைக்கா பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிர் பிறிந்தது,இச் சம்பவம் குறித்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். பிரோஸ்கானின் உடல் பிரேத பரிசோதனைக்கா அதிரை அரசு மருத்துவமனையி வைக்கப்பட்டு இருக்கிறது.மற்றவரின் உடல் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்படு இருக்கிறது. இச்சம்பவத்தினால் முத்துப்பேட்டையே சோகத்தில் காட்சி அளிக்கிறது.
தமிழ்நாடு முஸ்லி­ம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது காலமானார்.(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிர்ராஜிஊன்)
தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் சென்ற சனிக்கிழமை (அக்டோபர் 17) அன்று பிற்பகல் சென்னையில் காலமானார்கள். அவருக்கு வயது 78 ஆகும்.தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பிறந்த ஹெச். அப்துஸ் ஸமது அவர்கள் ஒரு பொறியாளர் ஆவார். பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற அவர் பொறியியல் கல்லுரிகளில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான என்ஜினீயர் அப்துஸ் ஸமது சாஹிப் அவர்கள் அமைப்பின் முதல் பொதுச் செயலாளராக ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் துடிப்புடன் செயலாற்றினார். பின்னர் உடல்நலக் குறைவின் காரணமாக அப்பதவியில் இருந்து விலகினார். சமுதாய மற்றும் மார்க்கப்பணியில் அதிக நாட்டம் உடையவராக விளங்கிய இஞ்சினியர் அப்துஸ் ஸமது அவர்கள் தமது கடைசி மூச்சு வரை அப்பணிகளை ஆற்றிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பல மார்க்க நூல்களை எழுதியும், மொழிபெயர்த்தும் உள்ளார். இந்தியன் இஸ்லாமிக் மிஷனின் அறங்காவலர்களில் ஒருவராகவும் அவர் விளங்கினார்.அவரது மரணச் செய்தி அறிந்த உடன் சென்னை கீழ்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பொதுச்செயலாளர் எஸ். ஹைதர் அ­லி, பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ், துணைப் பொதுச்செயலாளர ஜே.எஸ். ரிஃபாயி, மாநிலச் செயலாளர்கள் பி.எஸ். ஹமீது மற்றும் ஜிப்ரி காசிம் மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப. அப்துஸ் ஸமது சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.மறுநாள் அக்டோபர் 18 அன்று காலை சென்னை அமைந்தக்கரை பள்ளிவாச­ல் ஜனாசா தொழுகை நடைபெற்று பிறகு அங்குள்ள அடக்கத்தலத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது ஜனாசா தொழுகையில் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட ஏராளமான மக்கள் பங்குக் கொண்டார்கள்.இறைவன் அன்னாருக்கு மறுமையின் நற்பேறுகளை அளப்பரிய அளவில் வழங்க பிராரத்தனைச் செய்வோமாக.
தடாவில் கைதுச் செய்யப்பட்ட அப்பாவிகளை விடுதலைச் செய்ய வேண்டும் என்றும் நாகூரில் அத்துமீறி செயல்பட்ட காவல்துறையினர மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஆகஸ்ட் 25, 1995ல் சென்னை கோட்டை நோக்கி நடைபெற்ற பேரணி தான் தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டவுடன் நடைபெற்ற முதல் போராட்டம் ஆகும். பேரணியின் இறுதியில் தலைமைச் செயலகத்திற்கு சென்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கோரிக்கை மனு அளிக்க சென்றவர்கள் (இடமிருந்து: அன்றைய தமுமுக பொருளாளர் சைய்யது நிசார் அஹ்மது, துணைத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ், பொதுச் செயலாளர் ஹெச். நிசார் அஹ்மது தலைமை நிலையச் செயலாளர் எஸ். ஹைதர் அ­லி, துணைப் பொதுச் செயலாளர் ஏ.எஸ். அலாவுத்தீன்

சனி, 17 அக்டோபர், 2009

வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம்கள் நீக்கம்

ஹாக்கி விளையாட்டில் ஒலிம்பிக் பதக்கம் பெற்று பின் அரசியல்வாதியான அஸ்லம் ஷேர்கான் சமீபத்தில் பத்திரிக்கை பேட்டியின் போது தான் எம்பி யாக தேர்வு செய்யப்பட்ட மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பா.ஜ.கட்சி வாக்காளர் பட்டியலிலிருந்து முஸ்லிம் பெயர்களை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டினார்.அடுத்த மாதம் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்கு முன்பாக முஸ்லிம் வாக்காளர்களை பட்டியலிலிருந்து நீக்கும் முயற்சியில் பா.ஜ. அரசு ஈடுபட்டு வருவதாக பகிரங்க குற்றம் சாட்டிய அவர், தனது குற்றச்சாட்டிற்கு ஆதாரமாக போபால் நகரத்தில் 20வது வார்டு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 1260 வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இந்த முஸ்லிம் வாக்காளர்கள் நிச்சயமாக பா.ஜ.கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் என பி.ஜே.பி நம்புவதால் இத்தகய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் கூறினார்.இந்தூர், உஜ்ஜைன் பகுதிகளிலும் இதே முறை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.நியாயமான முறையில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்றும், மத்திய பிரதேசத்தை குஜராத்தாக மற்றும் எந்த வேலையிலும் பி.ஜே.பி. ஈடுபடக்கூடாது என்றும் அவர் கூறினார்.காங்கிரஸ் தலைவர்களிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் தான் மத்திய பிரதேசத்தில் கடந்த முறை பி.ஜே.பி. வெற்றி பெற்றது என்றும் இம்முறையும் அவ்வாறு நடந்துவிடக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேற்கத்திய ஊடகச் சொல்லாடல்களில்இஸ்லாமிய அடிப்படைவாதம்-1
அண்மைக் காலங்களில் மேற்கத்திய கல்வி வட்டத்திலும் வெகு மக்கள் தொடர்பு ஊடகங்களிலும் அமெரிக்க ஐரோப்பிய செய்தி முகவர் வட்டத்திலும் ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற சொல்லாடல் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குறிப்பாக செப்.11 க்குப்பிறகு இஸ்லாமிய அடிப்படைவாதம், இஸ்லாமிய பயங்கரவாதம், இஸ்லாமிய தீவிரவாதம் என்ற சொல்லாடலகள் மிக அதிகமாகவே புழக்கத்திற்கு வந்தன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னால் லெபனான், போஸ்னியா மீதான ஆயுத ஆக்கிரமிப்பு இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில்தான் நடந்தேறியது. ஐந்தாண்டுகளுக்கு முன்னர் அல்ஜீரியாவில் நடைபெற்ற சுதந்திர தேர்தல்களின் மூலம் பெறப்பட்ட பெறுபேறுகளை மூடி மறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் எகிப்தில் இஸ்லாமிய இயக்கங்களின் மீது நிறைவேற்றப்பட்ட மரண தணடனைகளும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பெயரில்தான்.
இப்போது குவாண்டனமாவில் சிறை வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான போராளிகள் மீதும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற சொல்லாடல்தான் பெரிதும் பிரயோகிக்கப்படுகிறது. இது தவிர மேற்கு ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா என்பவற்றில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியவாதிகள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் சோதனைகளை எதிர்கொள்ளவும் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பதே குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.
மேற்கு ஊடகங்களிலும் மேற்கத்திய புலமைத்துவ வட்டாரங்களிலும் இவ்வாறான சொல்லாடல்கள் எப்போது நடைமுறைக்கு வந்தது? இச்சொல்லாடலகளை கண்டுபிடித்தவர்கள் யார்? அது பயங்கரவாதமாகவும் தீவிரவாதமாகவும் ஏன் கட்டமைக்கப்பட்டது? அடிப்படைவாதம் குறித்து நமக்குள் எழும் அடிப்படையான வினாக்கள் இவை.
மேற்கத்திய ஊடக வட்டத்தில் 1970களுக்குப் பின்னரே இச்சொல்லாடல்கள் முதன்முறையாக பயன்பாட்டிற்கு வந்தன. குறிப்பாக ஈரானில் நடைபெற்ற இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர்தான் இஸ்லாமிய அடிப்படைவாதம் என்ற பதம் முஸ்லிம் உலகு பற்றி எழுதப்பட்ட மேற்கத்தியர்களின் கட்டுரைகளிலும் ஆய்வுக்குறிப்புகளிலும் பரவலாக இடம்பெறலானது. [Links International Journal of Socialist Review Nov-Sep-Dec 2003, P.10] இதனைப் பயன்படுத்துவோர் அதன் மூலம் எத்தகைய அரசியல் நோக்கை அடைவதற்கு முயல்கின்றனர் என்பதையும் கவனமாக ஆராய வேண்டும்.
வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கையில் கி.பி 7ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட இஸ்லாத்தின் எழுச்சியும், வளர்ச்சியும் மேற்குலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இடைக்காலத்தில் நடைபெற்ற சிலுவைப்போர் ஐரோப்பிய மனப்பான்மையில் முஸ்லிம்களுக்கெதிரான பகைமையையும், காழ்ப்பையுமே தூண்டியது. இஸ்லாம் மிகப்பெரும் சக்தியாகவும் செல்வாக்கு மிக்க அரசியல் காரணியாகவும் 13ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டின் முதல் அரைக்கூறுகள் வரை விளங்கியது. அப்போதும் இஸ்லாத்தின் அரசியல், பொருளாதார, அறிவியல் முன்னேற்றங்களை கண்டு மேற்குலகு குலைநடுக்கம் கொண்டது. குறிப்பாக இக்காலப் பகுதியில் முஸ்லிம் உலகு அடைந்திருந்த தரச்சிறப்பும் செழுமையுமிக்க நாகரிக வளர்ச்சியும் அறிவியல்துறை விருத்தியும் இஸ்லாமிய சமூகத்தின் மீது மேற்குலகு குரோதம் கொள்ளக் காரணங்களாய் அமைந்தன.


வியாழன், 15 அக்டோபர், 2009

பாபர் மசூதியை இடித்த இந்து, முஸ்லீமாக மாறிய விநோதம்

1992 டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அத்வானி தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்களின் வழிகாட்டுதலோடு ஒரு பட்டப் பகலில் ஆயிரக்கணக்கான காவிக் கூட்டத்தினர் 450 ஆண்டுகால வரலாறு படைத்த முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமான பாபர் மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இந்தியா மட்டுமல்ல, உலகமே அதிர்ந்தது. 17 ஆண்டுகள் பறந்தோடிய நிலையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை என்பது வெட்கக்கேடு.
இதில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு. அன்று பாபர் மசூதியின் நடுக் கோபுரத்தை கடப்பாரையால் இடித்துக் கூத்தாடிய இரு இளைஞர்கள் சிவசேனா அமைப்பினைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சிவசேனா பறக்கும் படையின் துணைத் தலைவர் பல்பீர் சிங், மற்றொருவர் யோகேந்திரபால்.
சரி, அவர்களுக்கு இப்பொழுது என்ன வந்தது? ஒரு சுவையான திருப்பம் இதில் ஏற்பட்டுள்ளது. அந்த இரு இளைஞர்களும் இப்பொழுது முசுலிம்களாக மாறிவிட்டனர் என்பதுதான் அந்தச் சுவையான திருப்பம் மிகுந்த செய்தியாகும்.
பாபர் மசூதி கோபுரத்தின்மீது ஏறி, இரு இளைஞர்கள் யானையின் மத்தகத்தைப் பிளப்பதுபோல செயல்பட்டார்களே ஏடுகளில் அந்தப் படங்களெல்லாம்கூட வெளியானதே சாட்சாத் அந்த இரு இந்து இளைஞர்கள், சிவசேனாவின் சிப்பாய்கள்தான், இப்பொழுது முகம்மது ஆபிராகவும், முகம்மது உமர் ஆகவும் மாறிவிட்டனர்.
இளைஞர்கள் மூளையில் சாயம் ஏற்றி ஏற்றி, வெறித்தனமான போதனைகளை ஊட்டி ஊட்டி, வெறியாட்ட வன்முறைப் பயிற்சிகளைக் கற்றுக்கொடுத்துக் கொடுத்து, மாற்று மதக்காரர்கள்மீது வெறுப்பினைக் கூர்மைப்படுத்தி கூர்மைப்படுத்தி, ஒரு கட்டத்தில் அவர்களை வேட்டை நாய்களாக ஏவிவிடுவார்கள். அவ்வாறு ஏவிவிடப்பட்டு இடிக்கப்பட்டதுதான் பாபர் மசூதி.
காலம் கடந்து இப்பொழுது உண்மையை உணர்ந்து, தாம் செய்த குற்றத்துக்குப் பிராயச்சித்தமாக எந்த மதத்துக்கு விரோதமாக வெறியாட்டம் போட்டார்களோ, அந்த மதத்தோடேயே அய்க்கியமாகும் நிலை ஏற்பட்டுவிட்டது!

புதன், 14 அக்டோபர், 2009

சுவனத்தில் நுழையச் செய்யும் ஈமான்
ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்)செயலை எனக்குக் கூறுங்கள்! என்று (அவசரமாகக்) கேட்டார். அப்போது மக்கள், இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது? என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், அவருக்கு ஏதேனும் (அவசரத்) தேவை இருக்கலாம்! என்று (மக்களை நோக்கிச்) கூறி விட்டு, (அந்த மனிதரை நோக்கி) அல்லாஹ்வுக்கு எதனையும் இணையாக்காதவராக அவனை மட்டுமே நீர் வணங்க வேண்டும்! தொழுகையை நிலை நாட்டவேண்டும்! ஜகாத்தை நிறைவேற்ற வேண்டும்! உறவைப் பேணிக் கொள்ளவேண்டும்! என்று கூறி விட்டு, உமது வாகனத்தில் புறப்படுவீராக! என்றார்கள். அம்மனிதர் (அப்போது)தமது வாகனத்தில் அமர்ந்திருந்தார் போலும்!
(அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல்அன்சாரி(ரலி), நூல்கள்: புகாரி 5983, முஸ்லிம் 14-15)

ஜனநாயக தூண்களே சற்று சிந்திப்பீர்

நம் இந்திய ஜனநாயகத்தை தாங்கி நிற்பது நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், நீதித்துறை மற்றும் ஊடகத்துறை ஆகிய நான்கு தூண்களே என நாம் கேள்விப்பட்டிருப்போம்.ஒவ்வொரு துறையும் தத்தமது கடமைகளை சரிவர செய்திருக்குமேயானால் இந்தியா அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக மாறி இருக்காது. உலகின் தலைசிறந்த நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக விளங்கியிருக்கும். ஆனால் ஒவ்வொரு துறையும் தமது கடமைகளிலிருந்து ஒதுங்கி நிற்கின்றன என்றும் சொல்லலாம் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் சொல்லலாம்.நாடாளுமன்றம்:நாடாளுமன்றம் என்று சொல்லுவதைவிட மக்கள் பிரதிநிதிகள்(?) கூடிக் களையும் இடம் என்றுதான் சொல்ல வேண்டும். அதுவும் தற்போது மிகவும் அற்பமாகவே காணப்படுகிறது. சட்டங்கள் இயற்றுவது முதல் கொள்கை முடிவுகள் எடுப்பது வரை ஏறக்குறைய அனைத்து அரசு முடிவுகளும் நாடாளூமன்றத்திற்கு வெளியிலேயே தீர்மானிக்கப்பட்டுவிடுகிறது. அதிலும் குறிப்பாக குற்றவாளிகளையும், இஸ்லாமியர்களுக்கு எதிராக ஆயுதமேந்திய இந்துத்துவ பயங்கரவாதிகளையும் தண்டிப்பதில் நாடாளுமன்றம் எந்தவிதத்திலும் பணியாற்றவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது வருமானத்தினை சட்டப்பூர்வமாக பெருவதற்கே பெரிதும் துணை நிற்கிறது. இதன் மீது நாம் கேள்விகள் தொடுப்பது பலனளிக்காது என்பது கடந்த கால அனுபவம்.அரசு நிர்வாகம்:இதில் மிகப்பெரிய வேடிக்கைதான் அரங்கேறுகிறது. மத்திய அரசு அதிகாரம் வாய்ந்ததா? இல்லை மாநில அரசுகள் அதிகாரம் வாய்ந்ததா? என்று கேள்விக்கு விடை தெரியாமல் அரசுகளூம் குழம்புகின்றன மக்களையும் குழப்புகின்றன. இருவருக்கும் உள்ள மிகபெரிய உடன்படிக்கையானது மத்திய அரசின் முஸ்லிம் விரோத போக்கினை மாநில அரசுகள் கண்டுக்கொள்ளக்கூடாது ஆர்.எஸ்.எஸ்ஸின் ஆயுதப்பயிற்சியை தடுக்க மறுப்பது உட்பட அதுபோல் மாநில அரசுகளின் முஸ்லிம் விரோத போக்கினை மத்திய அரசு அலுவல்ரீதியாக கேள்விக்கேட்கக்கூடாது மாநில அரசுகள் அரங்கேற்றும் போலி என்கெளன்டர்கள் உட்பட.இந்த அதிகாரபூர்வமற்ற உடன்படிக்கையை இரு அரசுகளும் தீவிரமாக கடைப்பிடிப்பதை நாம் காணலாம். இஸ்லாமிய பெண்களின் கற்பினை சூரையாடுவதையும், இஸ்லாமிய பச்சிளங்குழந்தைகளின் இரத்ததினை உறுஞ்சுவதையுமே தங்களது அரசின் கொள்கைகளாக கடைப்பிடித்துவரும் அமெரிக்காவிற்கும் அதன் கள்ளக்குழந்தை இஸ்ரேலிற்கு காவடி தூக்கும் மத்திய அரசின் இஸ்லாமிய விரோத வெளியுறவுக்கொள்கை குறித்து எந்த மாநில அரசுகளும் கேள்வி எழுப்புவதில்லை. அதுபோல் உலக வரலாறு கண்டிராத கொடூரமான இஸ்லாமியர்களுக்கெதிரான படுகொலையையின் போதும் அதனை அரங்கேற்றியது நரவேட்டை நரேந்திர மோடி தலைமையிலான கும்பல்களே என பல விசாரனை அறிக்கைகள் வெளிச்சம் போட்டு காட்டிய போதும் கண்டுக்கொள்ளாதது போல் இருப்பதற்கும் அதிகாரபூர்வமற்ற இவ்வுடன் படிக்கையே காரணமாக இருக்கிறது. இதன் மீதும் கேள்விகள் தொடுப்பது பயனளிக்காது.ஊடகத்துறை: வருமானம், மேலும் வருமானம், மேலும் மேலும் வருமானம் இதுவே தற்போதைய ஊடகத்துறையின் தாரக மந்திரம். சமுதாய நலன், சத்தியம், நேர்மை போன்ற ஊடகத்துறைக்கு தேவையான முக்கிய காரணிகளை ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் மறந்துவிட்டன. மறுத்துவிட்டன. விறுவிறுப்புகளையும், சாதாரண மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வேதைனைகளை வியாபாரமாக்குவது, நடிகைகளைப்பற்றி ஆல அமர விவாதிப்பது, பத்திரிக்கைச் சுதந்திரம் என்ற போர்வையில் இஸ்லாமியர்களூகெதிராக அவதூறுகளை பரப்புவது இவையே நவீன கால ஊடகங்களின் அடையாளங்கள்.
இஸ்லாமியர்களுக்கெதிராக உலகில், இந்திய நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை மூடிமறைப்பதுதான் தங்களின் தலையாய கடமை என்று தங்களது எஜமான அமெரிக்காவும் அதன் சார்ந்த ஊடகங்களும் தங்களுக்கு கற்றுத்தந்த பாடம் என்றே ஊடகங்கள் செயல்படுகின்றன. உலகில் நடக்கும் பயங்கரவாத செயல்கள் பலவற்றுக்கும் ஊடகத்துறையே ஒருவகையில் காரணமாக இருப்பதனை யாரும் மறுக்க இயலாது. சுய சிந்தனை, ஆழமான விசாராணை, நிடுநிலைமை போன்றவற்றில் ஊடகத்துறையினர் உறுதியாக இருந்திருப்பார்களேயானால் இந்திய ஜனநாயகம் செழித்திருக்கும். ஆயிரக்கணக்கான பிரச்சனைகளும், குழப்பங்களும் ஒரு முடிவுக்கு வந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.தங்களின் மண்ணிற்காக போராடும் காஷ்மீர், இராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன் மக்களை இஸ்லாமிய தீவிரவாதிகள் என்று அழைத்தும், தன் சொந்த மக்களையே கொன்று குவித்த விடுதலைப்புலிகள் இயக்கத்தினரை புலிகள் என்று கூறியும் தங்களின் பாசிச சிந்தனையை பரைச்சாற்றுவதனை இனிவரும் காலங்களிலாவது நிறுத்திக்கொள்வார்களேயானால் இந்திய ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்று வலுவோடு இருக்கும். மேற்கத்திய ஊடகங்கள் செய்திகளையும், தகவல்களையும் அப்படி வாந்தி எடுக்கும் இவர்களிடம் நியாயம், நீதி தொடர்பாக கேள்வி எழுப்புவதும், எழுப்பாமல் இருப்பதும் சமமே.நீதித்துறை: மற்ற மூன்று துறைகளை ஒப்பிடுகையில் நீதித்துறையானது முக்கியமான் ஒன்றாக இருக்கிறது. ஆனால் துரதிஷ்டவசமாக இந்தியாவில் நீதி என்பது விலையுயர்ந்த ஒன்றாகவும், சாதாரண மற்றும் பாமர மக்களுக்கு ஒரு காட்சிப்பொருளாகவுமே மாறிவிட்டது. மற்ற மூன்று துறைகளும் எப்படி தங்களின் கடமையிலிருந்து வழிகெட்டு சென்றுவிட்டதோ அதுபோலவே நீதித்துறையானதும் தமது கடமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் வழித்தவறி சென்றுக்கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்கள் தொடர்புடைய விஷயங்களில் அலட்சியம் காட்டும் போக்கு அதிகமாகவே காணப்படுகிறது.சில நீதிபதிகள் தங்கள் கடமைகளை சரிவர நிறைவேற்ற நினைக்கும் போது மற்ற சக நீதிபதிகள், அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்புகள் இல்லாமல் போவது மிகவும் வேதனையான ஒன்று.
உண்மையிலேயே நீதித்துறை என்ற தூணிற்கு அதிகாரம் இருக்குமேயானால் ஊழல் அரசியல்வாதிகள் கோலோச்சவும் இயலாது, ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய இஸ்லாமிய விரோத இயக்கம் அரசின் நிர்வாகத்தில் ஊடுருவி இருக்கவும் முடியாது. ஒரு சாதாரண குடிமகனாகவும், நீதியையும் இந்திய நீதிமன்றங்களின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு இஸ்லாமியனாகவும் நீதித்துறை என்ற ஜனநாயகத்தினை தாங்கும் நீதித்தூணை நோக்கி சில கேள்விகளை முன்வைப்போம்.
1) பொடா என்ற கருப்பு சட்டம் அமலில் இருந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தீவிரவாதம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதை அனைத்து நீதிபதிகளும் நன்கு அறிவர். ஆனால் அந்த கருப்பு சட்டமே இல்லாமல் போனப்பிறகும் இன்னும் அந்த நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறைகளில் வதைப்படுவதில் என்ன நியாயம் இருக்கிறது?
2) பொடாவில் கைது செய்யப்பட்ட ஒருவரின் மீதுக்கூட குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லையே பிறகு ஏன் இன்னும் அவர்கள் சிறையில் வதைப்படவேண்டும்?
3) குறிப்பாக கோத்ராவில் இரயிலை எரித்ததில் இஸ்லாமியர்களுக்கு தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிருந்தவர்கள்தான் இரயில் எரிப்பிற்கு காரணம் என்று நிரூபிக்கப்பட்ட பிறகும் இரயில் எரிப்பினை காரணம்காட்டி அப்பாவி இஸ்லாமியர்கள் நூற்றுக்கணக்கில் கைதுசெய்யப்பட்டனரே அவர்களை விடுவிப்பதில் ஏன் நீதிமன்றங்கள் தலையிடமறுக்கிறது?
4) உலக சரித்திரம் கண்டிராத குஜராத் அரசின் இஸ்லாமிய விரோத இனப்படுகொலைக்கு காரணம் கோத்ரா இரயில் எரிப்பு சம்பவம்தான் என கூறப்படும்போது, அந்த இரயில் எரிப்பு சம்பவம் பற்றி ஏன் முழு விசாரனையில் ஈடுபடவில்லை? சி.பி.ஐ. விசாரனைக்கு மத்திய அரசிற்கு ஏன் அறிவுறுத்தவில்லை?
5) இரயிலை எரித்ததில் வெளியில் இருந்த இஸ்லாமியர்களூக்கு தொடர்பில்லை. மாறாக இரயிலின் உள்ளிர்ருந்தவர்களே என்று யு.சி.பானர்ஜியின் அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க முன்வர மறுப்பதேன்?
6) ஒன்றும் அறியா அப்பாவி இஸ்லாமிய பெண்கள் ஆயிரக்கணக்கில் கற்பழிக்கப்பட்டு கொன்றது பற்றியும், ஆயிரக்கணக்கில் குழந்தைகள், முதியவர்கள் என கொல்லப்பட்டது குறித்தும் முன்னின்று விசாரனை நடத்த தயங்குவது ஏன்?(கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியகள் என்ற அலட்சியத்தாலா?)
7) இனப்படுகொலையை தலைமையேற்று நடத்திய நரவேட்டை நரேந்திர மோடியை “நீரோ மன்னன்” என்று வர்ணித்ததோடு நின்றுவிடாமல் நரேந்திர மோடியை, அவரது சகாக்களையும், அவரின் குருநாதர்களையும் சட்டத்தின மூலம் தண்டனை வாங்கிதர தயங்குவது ஏன்? அதற்கு தடையாக இருப்பவர்களை உலகில் வெளிச்சம் போட்டு காட்டுவதற்கு அதிகாரம் இல்லையா?
குஜராத நரவேட்டையை நாங்கள்தான் நடத்தினோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் கற்பழித்தோம், ஆயிரக்கணக்கான பெண்களை நாங்கள்தான் விதவைகளாக்கினோம், ஒன்றுமறியா பச்சிளங்குழந்தைகளின் உயிர்களை நாங்கள்தான் பிரித்தெடுத்தோம், நூற்றுக்கணக்கான இஸ்லாமியகளின் வழிபாட்டுதளங்களை நாங்கள்தான் இடித்துத் தரைமட்டமாக்கினோம், பெண்களை பிறப்புறுப்புகளை நாங்கள்தான் கிழித்தெறிந்தோம், கற்பினி என்றுகூட பாராமல் அவளின் வயிற்றை கிழித்து அதிலிருந்த கருவினை தீயிட்டு கொழுத்தியதும் நாங்கள்தான் என்று தெஹல்கா நிருபரின் முன் வெட்கமின்றி தங்களின் குற்றத்தினை பெருமையுடன் ஒப்புக்கொண்ட நரவேட்டை நரேந்திரமோடியின் சகாக்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு உங்களுக்கு அதிகாரம் இல்லையா? இல்லை நமக்கேன் வம்பு என்று உங்கள் கடமையிலிருந்து ஒதுங்கியிருக்கிறீர்களா?
9) குற்றவாளிகளே தங்களது குற்றத்தினை ஒப்புக்கொண்ட பிறகு வேறு என்ன சாட்சி வேண்டூம் உங்களுக்கு?
10) சொராபுதீன் ஷேக் என்ற அப்பாவி இஸ்லாமியன் குஜராத் காவல்(?)துறையினரால் தீவிரவாதி பட்டம் சுமத்தி கொல்லப்பட்ட போது மெளனம் சாதித்தீர்கள். ஆனால் சொராபுதீன் ஷேக் ஒரு தீவிரவாதி அல்ல அவர் இஸ்லாமியன் என்ற காரணத்தினாலேயே திட்டமிட்டு கொல்லப்பட்டார் என்று விசாரனை அறிக்கை தெளிவுபடுத்திய போதும் குற்றவாளிகளுக்கு தண்டனை தராமல் காலம் தாழ்த்துவது சொராபுதீன் ஷேக் போன்ற சாதாரன அப்பாவி மக்களுக்கு இழைக்கும் அநீதி என்று தோன்றவில்லையா?
11) இஷ்ராத் ஜெகான் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் நரேந்திர மோடியின் காவல்(கூலி)படையினால் கொல்லப்பட்டதும் இஸ்லாமியர்கள் என்ற காரணத்தினால்தான் என்று விசாரனை அறிக்கை தெளிவாக கூறிய பின்பும் குற்றவாளிகளுக்கு கடுமையான தன்டனை வழங்காமல் காலம் தாழ்த்துவது எதனால்?
12) சொராபுதீன் ஷேக், இஷ்ராத் ஜெகான் போன்ற நூற்றுக்கணக்கான அப்பாவிகள் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட போது அவர்கள் தீவிரவாதிகள் என்று பெரிய எழுத்துகளில் செய்திகளை வெளியிட்ட பத்திரிக்கைகள், கொல்லப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்தினால்தான் கொல்லப்பட்டனர் என்று விசாரனை அறிக்கைகள் தெளிவுபடுத்தியபோது அதே பத்திரிக்கைகள் மெளனம் காப்பது பற்றி அவர்களுக்கு நல்ல அறிவுரையும், ஒரு நெறிமுறையும் வழங்கி தங்கள் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு வலுசேர்த்தாலென்ன?
13) ஆர்.எஸ்.எஸ். என்ற ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் துப்பாக்கி பயிற்சிகள் மேற்கொள்வதை பத்திக்கைகள் படம்பிடித்து காட்டுகின்றனவே (படங்களை வெளியிடுவதோடு நின்றுவிடுகின்றன. இதுவே இஸ்லாமியர்கள் செய்திருந்தால் கற்பனைகதைகள் சிறகடித்து பறந்திருக்கும்) இதன் மீது நடவடிக்கை எடுக்க அரசிற்கும், காவல்துறையினருக்கும் உத்தரவிட தயங்குவது ஏன்? இஸ்லாமியர்களை கொல்வதற்காக ஆயுதப்பயிற்சி எடுப்பதை பார்த்துவிட்டு, அந்த பயிற்சியினை பயன்படுத்தி இஸ்லாமியர்களை கொன்றபிறகு பாதிக்கப்பட்டவன் வழக்கு தொடர்ந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா?
14) இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு சங்பரிவார அமைப்புகளே காரணம் என்ற உண்மையை வெளி உலகிற்கு ஆதாரத்துடன் வெளிச்சம் போட்டுகாட்டிய குஜராத்தின் தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் ஹேமந்த் கர்கரே மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டாரே அதுபற்றி ஏன் ஆழமான விசாரனை நடத்தவில்லை?
15) கர்கரே சுட்டுக்கொல்லப்பட்ட பின்பு சங்பரிவாரத்தின் மீதான விசாரனை என்ன ஆனது. உச்ச நீதிமன்றமே முன்னின்று விசாரனை நடத்துவதில் என்ன நடைமுறை சிக்கலும், தயக்கமும் இருக்கிறது.
16) குற்றம் நிரூபிக்கப்பட்டால் விதிக்கப்படும் தண்டனையின் அளவைவிட அதிகமாகவே விசாராணை என்ற பெயரில் அனுபவித்து வரும் அப்பாவி இஸ்லாமியர்களை சிறைகளிலிருந்து விடுவிக்காதது ஏன்?இதுபோன்று ஆயிரம் ஆயிரம் கேள்விக்கனைகள் நீதித்துறையை நோக்கி அணிவகுத்து நிற்கின்றன.இது எங்கள் அதிகார வரம்பிற்குட்பட்டதல்ல என்ற அர்ப்ப காரணத்தினைக்கூறி நீதித்தூனானது தப்பித்துக்கொள்ளலாம். ஆனால் நீதித்துறை கட்டளையோ, அறிவுரையோ இடுமேயானால் அதனை தட்டிகேட்பவர்கள் எவருமில்லை. ஏனெனில் இந்தியாவில் தான் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிப்பதற்கு குடிமகனான யாருக்கும் உரிமையில்லையே.நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், ஊடகத்துறை ஆகிய மூன்று தூண்களை விட்டுவிட்டு நீதிதூணிற்கு முன்பு இந்த நியாயமான கேள்விகளை வைப்பதற்கு நீதித்துறை என்ற தூணிற்கு மட்டுமே இன்னும் உயிரும், உணர்ச்சியும் இருக்கிறது என்ற நம்பிக்கையில்தானேயொழிய வேறு காரணங்கள் இல்லை. இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களில் மூன்று தூண்களுக்கும் மக்களின் மனதில் இடமில்லாமல் போய்விட்டது. ஆனால் நீதிதூணின் மீது இன்னும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் நம்பிக்கை சிறிதளவேனும்
இருக்கத்தான் செய்கிறது.நாம் கேட்ட கேள்விகளுக்கான பதில்களை சாதாரன மாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றங்கள் வரை ஏதோ ஒன்றாவது செயலில் தராதா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும் கோடிக்கணக்கான சாதாரன மக்களில் ஒருவன்.

செவ்வாய், 13 அக்டோபர், 2009

த.மு.மு.க வின் முயற்சியால் முறையாக வழக்கு பதிவு செய்யாத துணை ஆய்வாளர் மாற்றம்‏

திருவள்ளூர் மாவட்ட காவாங்கரை திருமால் நகரில் வசிப்பவர் சாஜகான் (30) இவர் கட்டிட கட்டும் தொழில் புரிபவர் 20/09/2009 அன்று அதை ஊரை செஅர்ந்த கதிரவன் வயது (33), குணா வயது (28) ஆகியோர் சாஜகான் இடம் இங்கு கட்டிடம் கட்டினால் எங்களுக்கு பத்து ஆயிரம் ருபாய் தர வேண்டும் என அவரை கத்தி காண்பித்து மிரட்டி ஒள்ளர்கள் ,அவர் ஒடனே புழல் காவல் நிலையத்தில் சாஜகான் புகார் கொடுத்துள்ளார் , பல முறை இவர் அவர்கள் இருக்கும் இடத்தை கூறியும் , மூன்று தினம் ஆகியும் காவல் நிலையத்தில் அவர்களை பிடிக்கவில்லை.
மனம் ஒடைந்த சாஜகான் த மு மு க வை நாடினர், மாவட்ட துணை செயலாளர் ஷேக் முகமது அலி, புழல் ஒன்றிய செயலாளர் பசீர் இடம் இது சம்மந்தமாக தகவலை தெரிவித்தார் , தகவல் அறிந்ததும் உடனே ஆய்வாளரை சந்தித்து இருவரும் பேசினார் வாக்குறுதி அளித்தபடியே அன்று இரவே கதிரவனை மட்டும் பிடித்து வெறும் 75 கேசை போட்டு அனுப்பி உள்ளார் , அதன் பிறகு மாவட்ட செயலாளர் ஹரூன் ரஷீத் தலைமையில் புறநகர் காவல் துறை ஆணையாளர் ஜாங்கிட் இடம் இது சம்மந்தமாக எடுத்து வைத்தார்கள் , பிறகு அவரது உத்தரவின் பேரில் கதிரவன் , குணா மீது கொலை வழக்கு பதிவு செய்து பின்னர் திருவெற்றியூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்க பட்டனர் .
முறையாக வழக்கு பதிவு செய்யாத துணை ஆய்வாளர் தமிழ் செல்வன் உடனடியாக மவுண்ட் ஆயுத படைக்கு மாற்றப்பட்டார், ஆய்வாளரிடம் துறை ரீதியாகவிசாரணை நடக்கிறது.

குண்டு வெடிப்பு கைதிகள் இருவர் விடுதலை

கோவை: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இருவர், ஐகோர்ட் உத்தரவுப்படி நேற்று விடுவிக்கப்பட்டனர். கோவையில் 1998, பிப்., 14ல், தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. 50க்கும் அதிகமானோர் பலியாகினர்; 250க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
சி.பி.சி.ஐ.டி., சிறப்பு புலனாய்வு பிரிவினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி “அல்-உம்மா’ பாஷா, அன்சாரி உட்பட 167 பேரை கைது செய்தனர். வழக்கு விசாரணைக்குப்பின், கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உட்பட எட்டு பேர் விடுதலை செய்யப்பட்டனர். தனிக்கோர்ட் விதித்த தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதன் மீதான விசாரணை முடிந்து, சமீபத்தில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், “18 வயதுக்கு கீழ் இருந்த எங்களை போலீசார் கைது செய்து, குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்து விட்டனர்.
தனிக்கோர்ட் விதித்த தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என, ஆயுள் தண்டனை பெற்ற ஆத்துப்பாலத்தைச் சேர்ந்த முஜிபுர் ரகுமான், மேலப்பாளையத்தைச் சேர்ந்த அம்ஜத் அலி சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தனர். இம்மனுவை விசாரித்த ஐகோர்ட், கடந்த வாரம் இருவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவு நேற்று, கோவை மத்திய சிறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 11 ஆண்டுக்கு பின், இருவரும் விடுதலை செய்யப்பட்டனர்

ஈமான் என்றால் என்ன? அதன் தன்மைகள் யாவை?
நபி(ஸல்)அவர்கள் ஒரு நாள் மக்கள் மத்தியில் இருந்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் (மனிதரின் தோற்றத்தில் வந்து நபி -ஸல்-) அவர்களிடம் ஈமான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவன் தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது எனக் கூறினார்கள். இஸ்லாம் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு(எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை மட்டுமே நீர் வணங்குவதும் தொழுகையை நிலைநிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஜகாதை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதத்தில் நீர் நோன்பு நோற்பதுமாகும் என்று கூறினார்கள். இஹ்ஸான் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கவர்கள், (இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப்பார்க்கா விட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்றார்கள். அடுத்து மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்; கூறினார்கள்: அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட கேட்கப்படும் (நான்) மிக்க அறிந்தவரல்லர். எனினும் அதன் (சில)அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன். அவை: ஒரு அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல். மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல். ஜந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று கூறிவிட்டு, மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது என்ற (31:34)வசனத்தை ஓதிக் காட்டினார்கள். பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்று விட்டார். அவரை அழைத்து வாருங்கள் என்றார்கள். சென்று பார்த்த போது அவரைக் காணவில்லை. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவர் தான் ஜிப்ரீல்! மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார் என்றார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரீ 50, முஸ்லிம் 10)

திங்கள், 12 அக்டோபர், 2009

முத்துப்பேட்டை நகர தமுமுக நிர்வாகிகள்


தலைவர் –சகோ. M.R.S.அஹமது ஜலால்
9543469440


செயலாளர் –சகோ. வழக்கறிஞர்.L.தீன்முஹம்மது.BSC.,BL.,
9865557556


பொருளாளர் –சகோ. S.ஜெகபர் சாதிக்
9965812407

த.மு.மு.க வின் ஆம்புலன்ஸ் தொடர்புக்கு


சகோ. A.பாக்கர் அலி பொறுப்பாளர்
9942716666,9965812407

அல்லாஹ்வின் உதவினால் வலைதளம் வடிவமைக்கப்படுகிறது.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
முத்துப்பேட்டை தமுமுகவிற்கு புதியதாக ஒரு வலைதளம் உருவாக்கி
இருக்கிறோம். சகோதரர்கள் இந்த வலைதளத்திற்கு வருகைதருமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.