ஞாயிறு, 3 ஜூலை, 2011

முத்துப்பேட்டையில் டீசல் விலை உயர்வை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் டீசல் , சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணய் விலை உயர்வை கண்டித்து 02-07-2011 அன்று மனிதநேய மக்கள் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.


ஆர்ப்பாட்டத்திற்கு ம.ம.க மாவட்ட துணை செயலாளர் சகோதரர். முஹம்மது அலீம் அவர்கள் தலைமை வகிக்க தமுமுக ஒன்றிய செயலாளர் செய்யது முபாரக்,தமுமுக மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞ்சர் தீன் முகம்மது, திருத்திறைப்பூண்டி ஒன்றிய செயலாளர் ராவுத்தர் அப்பா, முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் எம்.நெய்னா முகம்மது, தமுமுக நகர செயலாளர் எஸ்.முகம்மது தாவுது, நகர பொருளாளர் எஸ்.ஜெஹபர் சாதிக், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் நாச்சிகுளம் M.தாஜுதீன் அவர்களும் மாவட்டச் செலாளர் எஸ்.முஹம்மது மாலிக் அவர்களும் கண்டன உரையாற்றினர்.


ஆர்ப்பாட்டத்தில்…


நம்பாதே நம்பாதே

மன்மோகன்சிங்கை நம்பாதே

ஏற்றாதே ஏற்றாதே

விலைவாசியை ஏற்றாதே

சொல்லாதே சொல்லாதே

காரணங்களை சொல்லாதே

ஏமாற்றாதே ஏமாற்றாதே

இந்திய மக்களை ஏமாற்றாதே


டீசல் விலை உயர்வால்

லாரி வாடகை உயருமே

லாரி வாடகை உயர்வால்

விலைவாசி ஏறுமே


எரிவாயு விலை உயர்வால்

சமையல் செலவு உயருமே

சமையல் செலவு உயர்வால்

ஏழை வயிறு காயுமே


மண்ணெண்ணெய் விலை உயர்வால்

குடிசை வீடு இருளுமே

குடிசை வீடு இருண்டால்

ஏழைகளின் வாழுவு இருளுமே


நியாயம்தானா? நியாயம்தானா?

ஆட்சியாளர்களே நியாயம்தானா?


ரத்து செய் ரத்து செய்

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை

சமையல் எரிவாயு விலை உயர்வை

ரத்து செய் ரத்து செய்


என மத்திய அரசுக்கு எதிராக கோசங்கள் எழுப்பபட்டன.
முடிவில் மமக நகர செயலாளர் சகோ.முஹம்மது யாசீன் நன்றி கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் தமுமுக மற்றும் மமகவின் கத்தார் பொருப்பாளர் சகோதரர் நிஜாம் அவர்களும் ஆசாத் நகர் பகுதி பொருப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.-- புகைப்படம் மற்றும் செய்தி வழக்கறிஞ்சர் தீன் முகம்மது.