சனி, 31 ஜூலை, 2010

அல்-அய்னில் இரத்த தான முகாம் - கடல் கடந்த தமுமுக வின் அரும்பணி

கடல் கடந்து வாழ்ந்த போதிலும் என் கடன் பணி செய்து கிடப்பதே.. என்று சத்திய மார்கத்தின் வழிகாட்டுதலில் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கும் தமுமுக ஊழியர்கள்,தமிழகத்திற்கு வெளியேயும் வெளிநாடுகளிளும் ஆற்றி வரும் மக்கள் நலப் பணிகள் எண்ணிலங்காதவை.. வட்டியில்லாக் கடனுதவித் திட்டத்தில் சிறந்த சேவையாற்றி வரும் அல்-அய்ன் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,தற்போது இரத்த தான சேவையைத் தொடங்கியுள்ளது. கடந்த 29.07.2010 வியாழனன்று மாலை 5 மணி தொடங்கி அல்-அய்ன் மண்டல இரத்த வங்கியை நோக்கி தமுமுக தொண்டர்கள் அணிவகுக்கத் தொடங்கினர். இரத்த சேமிப்பு கொள்ளளவை கருத்தில் கொண்டு குறைந்த அளவில் மட்டும் இப்போதைக்கு வழங்கினால் போதுமென்று அதிகாரிகள் கேட்டுக் கொண்டதால், 24 சகோதரர்கள் தங்தளது இரத்தத்தை தானமாக வழங்க முன் வந்தனர்.

மாலை 5 மணி தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெற்ற முகாமை அமீரக மு.மு.க வின் துணை செயலாளர் டாக்டர் அப்துல் காதர் தொடங்கி வைத்தார்.அமீரக மு.மு.க செயலாளர் சகோதரர் யாஸீன் நூருல்லாஹ்வின் ஆலோசனையின் பேரில் மண்டல தலைவர் கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி,மண்டல செயலாளர் மண்னை ஹாஜா மைதீன்,மண்டல துணைச் செயலாளர் அதிரை அப்துல் ரஹ்மான்,மண்டல இணைச் செயலாளர்கள் களப்பால் சையது யூசுப் ,விழுப்புரம் முஜிபுர்ரஹ்மான்,மண்டல நிர்வாகக் குழு உறுப்பினர் காட்டுமன்னார்குடி அஸ்கர் அலி ஆகியோர் முகாமை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்தனர்.
இரத்த வங்கியில் உதவியாளராக பணிபுரியும் தமிழக இளைஞர் மருதன்,தமிழர்கள் ஒன்று திரண்டு இரத்த தானம் செய்வது பாராட்டுக்குரியது என்று கூறிய அவர்..உண்மையில் நல்லதோர்இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்று நெகிழ்ச்சியுடன் குநிப்பிட்டார்.இனி தொடர்ந்து இரத்த தான முகாம்கள நடத்தப் போவதாக மண்டல நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
புகழனைத்தும் இறைவனுக்கே..!
நன்றி:கொள்ளுமேடு பை.மு.ரிஃபாயிஅல்-அய்ன்

வியாழன், 29 ஜூலை, 2010

நாகையில் இறைவன் நாடினால்.....


புதன், 28 ஜூலை, 2010

ஹிஜாப் தரும் சுதந்திரம்!


என்ன பார்க்கிறாய்?
என்னைப் பார்க்கும்போது
என்னில் என்ன பார்க்கிறாய்?

நான் சுதந்திரப் பறவையா?
கட்டுக்கோப்புக்குள் அடங்கியவளா?
இயந்திர உலகில் மாட்டியவளா?

கண்ணால் ஊடுருவி முகம் சுளிக்கிறாய்
கண்ணாடியாக என் மேனி தெரியாததாலோ?
கட்டுக்கோப்புடன் நானிருப்பதாலோ?

நாகரீகம் அறியாதவளாக
பிணைக்கப்பட்ட கைதியாக
நான் தெரிகிறேனோ உனக்கு?

எனக்கென்று சொந்தக் குரல்
எனக்கென்று சுயசிந்தனை இல்லை என்கிறாய்
வேண்டாவெறுப்பாக மூடிக்கொள்கிறேன் என்கிறாய்

மூடி மறைத்தால் - கூண்டு கிளியா?
முடியை மறைத்தால் - அநாகரீகமா?
காட்ட மறுத்தால் - திணிப்பா?

சிறு வட்டத்தில் அடைப்பட்டவளென்று எண்ணி
பரிதாபத்தோடும், எரிச்சலோடும் பார்க்கின்றாய்
'சுதந்திரத்தின்' பொருள் அறியாமலேயே

கவலையும், துயரமும்
கோபமும், வேதனையும் எனக்கு
கண்களின் ஓரம் கண்ணீரும் இருக்கு

கண்ணீரின் காரணம்
நீ என்னை ஒதுக்குவதாலும்
உன் கேலிக் கூத்தாலும் அல்ல

நீ உனையே ஒதுக்குவதால்
உனை நீயே ஏமாற்றிக் கொள்வதால்
இறுதி நாளில் பாவியாக நிற்கப் போவதால்

அடுத்தவர் கண்களுக்கு நான் அழகாக
காட்சிப் பொருளாக
வடிவமான சிலையாக இல்லாமலிருக்கலாம்

இஸ்லாம் எனக்களித்த சட்டத்தை மதிக்க விரும்புகிறேன்
அக அழகே முக அழகு என்னில் சொல்கிறேன்
ஆதிக்கம் இல்லாமல் என்னையே ஆள்கிறேன்

அமைதியில் என் அழகும்
பொறுமையில் என் மென்மையும்
ஒழுக்கத்தில் என் பெண்மையும் காணலாம்

மன வலிமை
சரியான முடிவெடுக்கும் திறன்
சிந்திப்பதை செயல்படுத்தும் பக்குவம் உண்டு

வாழ வழியில்லாமல் வறுமை விரட்டும்போதும்
உழைப்புக்கு ஊதியம் மறுக்கும் போதும்
குட்டைப் பாவாடையும், இறுக்கும் மேலாடையும்
கைகொடுக்கும் என்றாலும் வேண்டாம் என்பேன்

கிடைப்பது எனக்கு மதிப்பும், மரியாதையும்
கீழ்த்தர பார்வை என் மீது பட்டதில்லை
அந்நிய கைகள் எனைத் தொட நினைத்ததில்லை


அந்நிய மோகத்திற்கு அடிமைப்படவுமில்லை
ஆண்களின் உணர்வை சீண்டவுமில்லை
கண்களால் கற்பழிப்பவன் என் கண்ணில் பட்டதில்லை


உண்மையில் நானே சுதந்திரப் பறவை
விண்ணில் பறக்கும் என் சிறகே 'ஹிஜாப்'
அபயத்தை அளிக்கும் கவசமே 'அபாயா'
அணிந்துக் கொண்டு பறப்போம் சுதந்திரமாக!!நன்றி: திருமதி. ஜெஸிலா, துபாய்
தொழுகையின் அவசியம்

உங்களுக்குத் தொழ வைக்கமுன் நீங்கள் தொழுதுகொள்ளுங்கள். ஆம்! முஸ்லிம்களின் மிகமிக முக்கிய வணக்க வழிபாடுகளில், உன்னத ஐம்பெரும் கடமைகளில் ஒரு கடமையானது தொழுகை. நம்மை படைத்த இறைவனுக்காக தினந்தோறும் நிறைவேற்றும் (சொர்க்கத்தின் திறவுகோலான) இறைவணக்கமான தொழுகையை முறையாக குறிப்பிட்ட சமயத்தில் நிறைவேற்றுவது நமது கடமையாகும்.

திருக்குர்ஆனிலும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்களிலும் தொழுகை எனும் இறைவணக்கம் முஃமின்கள் மீது மிக வலியுறுத்தப்பட்ட கட்டாயக்கடமை என்பதை அறியமுடிகிறது. இதனை தவறாது நிலைநிறுத்துவதற்கு இறைவிசுவாசிகள் அனைவரும் கடமைபட்டுள்ளார்கள். இத்தொழுகை எனும் இறைவணக்கம் அல்லாஹ்வினால் ஏற்றுக்கொள்ள படவேண்டும் என்றால் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த, காண்பித்து கொடுத்துள்ள முறையில் நிறைவேற்ற வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் கட்டளை ‘என்னை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே நீங்களும் தொழுங்கள்’ என கூறியுள்ளார்கள். அறிவிப்பாளர் – மாலிக் இப்னு அல் ஹுவைரிஸ் (ரலி) நூல்கள் : புகாரி, அஹ்மத்.


அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் அறிவிப்பு இப்படியிருக்க, நமது சமுதாயத்தினர் பல்வேறு பகுதிகளில் பல முறைகளில் இப்படித்தான் தொழவேண்டும் இதுவே சரியான முறை என எண்ணி தொழுதுவருகின்றனர். இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்த முறை நம்மில் பலர் சரியாக அறியாமலிருப்பதுதான். நபி வழிக்கு மாற்றமாக தொழுதால் அது தொழுகையே அல்ல என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.தொழுகை குறித்து பல இடங்களில் அல்லாஹ் தனது திருமறையில் எச்சரித்து குறிப்பிட்டுள்னான்.…முறைப்படி தொழுது கொள்ளுங்கள் – ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பட்டுள்ளது’. (அல் குர்ஆன் 4:103).


இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர். அவர்கள் பிறருக்குக் காண்பிக்கவே தான் தொழு)கிறார்கள். (அல் குர்ஆன் 107:4,5,6).

தொழுகையையும் நிலை நிறுத்துங்கள்… (அல் குர்ஆன் 30:31).
...இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்… (அல் குர்ஆன் 29:45).


மற்றும் ஏராளமான ஹதீஸ்களில் இத்தொழுகையை குறித்து வலியுறுத்திக்கூறப்பட்டுள்ளது.
மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்தே இருக்கும்.
தொழுகை சுவர்க்கத்தின் திறவுகோல்.


முஃமினுக்கும் காஃபிருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதில் உள்ளது. என்றெல்லாம் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல்கள் – நஸயீ, அபூதாவுத், முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்.)
இனி அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) தொழுது காண்பித்த தொழுகை முறை குறித்து விரிவாக பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.


ஜமாஅத் தொழுகையின் முக்கியத்துவம் :-

சந்தர்ப்பவாதிகளுக்கு மிகப்பாரமான (கஷ்டமான) தொழுகை இஷாவும் ஃபஜ்ருமாகும். இவ்விரண்டிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிந்து கொள்வார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
தொழுகை நிலைநாட்டப்பட நான் கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரை மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறி பிறகு என் வாலிப நேயர்களிடம் விரகுக் கட்டடைகளை சேகரிக்கும்படி செய்து அவர்களுடன் சென்று ஜமாஅத்துக்கு வராதவர்களை அவர்களின் வீட்டோடு தீயீட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் . அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா (ரலி) நூல்- புகாரி (657), முஸ்லிம்.

கண் பார்வையற்ற ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! என்னைப் பள்ளிக்கு அழைத்து வருபவர் யாருமில்லை, எனவே வீட்டிலேயே தொழுவதற்கு அனுமதிக்குமாறு வேண்டினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி வழங்கி அவர் சென்று கொண்டிருக்கும்போது அவரை அவர்கள் அழைத்து தொழுகைக்காக பாங்கு சொல்லப்படுவதை நீர் கேட்கிறீரா? என்றனர். அதற்கவர் ‘ஆம்’ என்றதும் அந்த அழைப்புக்கு நீ (ஜமாஅத்துக்கு வருவதன் மூலம்) பதிலளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) நூல் – முஸ்லிம்.
நாளை மறுமையில் தாம் முஸ்லிமான நிலையில் இறைவனைச் சந்திக்க விரும்புவோர் இத்தொழுகைகளை அவற்றிற்காக பாங்கு சொல்லப்படும் இடத்தில் (பள்ளிவாசலில்) முறையாகப் பேணி (தொழுது) கொள்வாராக! திண்ணமாக அல்லாஹ் உங்களுடைய நபிக்கு நேரிய வழிமுறைகளை மார்க்கமாக்கியுள்ளான். பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழும் இத்தொழுகைகளும் நேரிய வழிகளில் ஒன்றாகும்.ஜமாஅத்தில் கலந்து கொள்ளாது தன் வீட்டில் தொழுபவரைப்போல நீங்களும் உங்கள் வீடுகளில் தொழுவீர்களானால் உங்கள் நபியின் வழிமுறையை கைவிட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் கை விட்டீர்களானால் நிச்சயம் நீங்கள் வழிதவறிப் போவீர்கள். எவர் ஒளூச் செய்து-அதை நல்ல முறையில் செய்து இப்பள்ளிகளில் ஏதேனும் ஒன்றை நாடி வருகிறாரோ அல்லாஹ் அவருக்கு – அவர் எடுத்து வைக்கம் ஒவ்வொரு எட்டுக்கும் பதிலாக ஒரு நன்மையை எழுதி, ஒரு பதவியை உயர்த்துகிறான். மேலும் ஒரு தீமையை அவரை விட்டும் அகற்றுகிறான். எங்களிடையே நான் பார்த்திருக்கின்றேன் பகிரங்கமான சந்தர்ப்பவாதியைத் தவிர வேறெவரும் ஜமாஅத்துக்கு வராமல் இருக்கமாட்டார். திண்ணமாக இயலாதவரைக்கூட இரண்டுபேர் கைத்தாங்கலாக அழைத்து வந்து வரிசையில் நிறுத்தப்படும் என்று இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்-முஸ்லிம்.


பயன்கள்:1-ஜமாஅத்துடன் தொழுவது ஆண்களுக்குக் கடமையாகும்.2-ஜமாஅத்துக்கு வராமலிருப்பது நயவஞ்சகர்களின் (முனாஃபிக்) அடையாளங்களில் ஒன்றாகும்.


ஜமாஅத் தொழுகையின் சிறப்பு :-

ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது தன்னுடைய வீட்டில் தொழுவதை விடவும், கடைவீதியில் தொழுவதை விடவும் 25 மடங்கு அல்லது அதைவிட அதிகம் சிறந்ததாகும். ஒருவர் அழகிய முறையில் உளூச் செய்து தொழுகைக்காகவே பள்ளியை நோக்கிச் செல்வாரானால் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் மன்னிக்கப்படுகின்றது.
அவர் தொழுது முடித்துவிட்டு அவ்விடத்திலேயே இருக்கும்வரை வானவர்கள், இறைவா! இவருக்கு நீ அருள் புரிவாயாக! என்று பிராத்தித்துக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்) தொழுகையை எதிர்பார்த்து (தொழும் இடத்திலேயே இருந்து) கொண்டிருப்பவர் தொழுகையிலேயே இருப்பார் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 647, முஸ்லிம்.
ஏதேனும் ஒரு ஊரிலோ அல்லது காட்டுப் பகுதியிலோ மூன்று பேர்கள் இருந்து அவர்களிடையே (ஜமாஅத்தாக) தொழுகை நிறைவேற்றப்படாவிட்டால் அவர்கள் மீது ஷைத்தான் ஆதிக்கம் கொள்கிறான். எனவே ஜமாஅத்துடன் தொழுவதைக் கடைபிடியுங்கள், ஏனெனில் தனிமையில் மேயும் ஆட்டைத்தான் ஓநாய் கபலிகரம் செய்கின்றது என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபுத்தர்தா (ரலி) நூல்:அபூதாவூது.

தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பாளர்-இப்னு உமர் (ரலி) நூல்:புகாரி 645, முஸ்லிம்.பயன்கள்:
ஜமாத்துடன் தொழுவதற்கு சிறப்புகள் அதிகமுள்ளன.ஒருவர் தனித்துத் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது மிகச்சிறந்தது.ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவதை விட்டுவிடுவது ஷைத்தான் அவர் மீது ஆதிக்கம் கொள்வதற்குக் காரணமாகின்றது.பள்ளிக்கு வரும் முறை :-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் இகாமத் சொல்வதைச் செவியுற்றால் தொழுகைக்குச் செல்லுங்கள். அப்போது அமைதியான முறையிலும் கண்ண்pயமாகவும் செல்லுங்கள். அவசரமாகச் செல்லாதீர்கள். உங்களுக்கு கிடைத்த ரக்அத்துகளை (ஜமாஅத்துடன்) தொழுங்கள், உங்களுக்குத் தவறிப்போனதைப் பூர்த்தி செய்யுங்கள் - நூல்:புகாரி 636, முஸ்லிம், திர்மிதி 326.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம் அப்போது சிலர் வேகமாக வரும் சப்தத்தை அவர்கள் செவியுற்றனர், தொழுகையை முடித்ததும் உங்களுக்கு என்ன நேர்ந்தது, (இவ்வளவு வேகமாக வந்தீர்கள்) என்று கேட்டார்கள், அதற்குத்தோழர்கள், நாங்கள் தொழுகைக்காக விரைந்து வந்தோம் என்றனர். அவ்வாறு செய்யாதீர்கள், தொழுகைக்கு வரும்போது அமைதியாக வாருங்கள்! உங்களுக்குக் கிடைத்ததைத் தொழுது கொள்ளுங்கள், தவறியதை நிறைவு செய்து கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூகதாதா (ரலி) நூல் – புகாரி 635, முஸ்லிம்.
பயன்கள்:
தொழுகைக்காக கம்பீரத்துடன் அமைதியாக வருமாறு (நபியின் மூலம்) ஏவப்பட்டுள்ளது.தொழுகைக்காக வேகமாக நடந்து வருவது தடை செய்யப்பட்டுள்ளது. ருகூவை அடைந்து கொள்வதற்காயினும் சரியே.
தொழுகைக்கு முற்கூட்டியே வந்து காத்திருப்பதன் சிறப்பு :-


ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடைவீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது 25 மடங்கு சிறந்ததாகும். அதாவது ஒருவர் உளூச்செய்து, அதை அழகாகவும் செய்து தொழுகைக்காகவே பள்ளிவாசலுக்குச் செல்வாராயின் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு பதவி உயர்த்தப்பட்டு ஒரு பாவம் அழிக்கப்படுகின்றது. அவர் தொழுது முடித்து விட்டு தொழுமிடத்திலேயே இருக்கும் வரை வானவர்கள், இறைவா இவருக்கு நீ அருள் புரிவாயாக என்று பிரார்த்திக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் ஒருவர் (ஜமாஅத்து) தொழுகையை எதிர்பார்த்து (தொழுமிடத்தில்) இருக்கும்போதெல்லாம் தொழுகையிலேயே இருக்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் – அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 647, முஸ்லிம்.


பாங்கு சொல்வதிலும் தொழுகையின் முதல் பரிசையிலும் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களாயின் அதற்காகப் போட்டிப்போட்டுக் கொண்டு முந்தி வருவர். பின்னர் அதன் விளைவாக அவர்களிடையில் சீட்டுக் குலுக்கி எடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். மேலும் தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் அதற்காக முந்திச் செல்வர். சுபுஹுத் தொழுகையிலும் இஷாத் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவர்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்துவிடுவார்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளார்- அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 615, முஸ்லிம்.
பயன்கள்:
தொழுகைக்காக சீக்கிரம் செல்வதில் சிறப்பு (போனஸ்) உண்டு.தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பதில் அதிக நன்மை இருக்கிறது.
காணிக்கைத் தொழுகை :-


உங்களில் எவரேனும் பள்ளியில் நுழைந்தால் அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்துகள் தொழட்டும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பாளர்-அபூஹுரைரா (ரலி) நூல்:புகாரி 444, முஸ்லிம், திர்மிதி 315.ஜும்ஆ தினத்தில் நபி (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது சுலைக் அல் கத்பானி என்பவர் வந்து உட்கார்ந்து விட்டார். சுலைக்! எழுந்து இரண்டு ரக்அத்துகள்
சுருக்கமாகத் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது யாரேனும் வந்தால் சுருக்கமாக இரண்டு ரக்அத்துகள் தொழட்டும் எனவும் குறிப்பிட்டார்கள். அறிவிப்பாளர்- ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம், புகாரி 1166.


பயன்கள்:
பள்ளியில் நுழையும் போது அங்கு அமர விரும்புபவர் இரு ரக்அத்துகள் தொழுவது விரும்பத்தக்கது.ஜும்ஆ நாளில் இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் அதை நிறைவேற்றுவது விரும்பத்தக்கதாகும்.
தொழுகையை வலியுறுத்தும் எண்ணற்ற திருமறை வசனங்களில் ஒரு சில :-

29 : 45. (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக் இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக் நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும் அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.


5 : 58. இன்னும் நீங்கள் தொழுகைக்கு அழைத்தால், – அதனை அவர்கள் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம் அவர்கள் அறிவில்லாத மக்களாக இருப்பதேயாம்.


24 : 56. முஃமின்களே! நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலைநிறுத்துங்கள். இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள். மேலும், அல்லாஹ்வின் தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்.


2 : 149. ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை.


2 : 43. தொழுகையைக் கடைப் பிடியுங்கள் ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்.


2 : 153. நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.


4 : 103. நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டால், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களின் மீது (படுத்திருக்கும்) நிலையிலும் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள். பின்னர் நீங்கள் (ஆபத்தினின்று விடுபட்டு) அமைதியான நிலைக்கு வந்ததும், முறைப்படி தொழுது கொள்ளுங்கள் – ஏனெனில், நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழுகையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக்கப் பெற்றுள்ளது.


20 : 132. (நபியே!) உம் குடும்பத்தினரைத் தொழுது வருமாறு நீர் ஏவுவீராக! (தொழுகையின் மீது) நீர் பொறுமையும், உறுதியும் கொண்டிருப்பீராக! நாம் உம்மிடம் உணவு கேட்கவில்லை ஆனால் உமக்கு உணவை நாம் கொடுக்கிறோம் இறுதியாகச் சிறந்த நிலை பயபக்தி(யுடையோரு)க்குத் தான்.


31 : 17. ”என் அருமை மகனே! நீ தொழுகையை நிலை நாட்டுவாயாக் நன்மையை ஏவி, தீமையை விட்டும் (மனிதர்களை) விலக்குவாயாக் உனக்கு ஏற்படும் கஷ்டங்களைப் பொறுத்துக் கொள்வாயாக் நிச்சயமாக இதுவே வீரமுள்ள செயல்களில் உள்ளதாகும்.


107 : 4,5. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
இணையம் மூலம் தமிழில் இஸ்லாமிய பாடத்திட்டம்! www.islahme.com

இன்னும் இருவாரங்களில் ஆரம்பமாகவுள்ள ரமழான் மாதத்தை முன்னிட்டு இஸ்லாஹ் என்ற அமைப்பு எதிர்வரும் புனித றமழான் மாதத்தில் முஸ்லிம் மக்களது நன்மை கருதி இணையம் மூலம் பாடத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
முதலாவது நோன்புடன் ஆரம்பமாகும் இக் கற்கை நெறி 24 நாட்களுக்கு 12 பாடங்களைக் கொண்டதாக இருக்குமென அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ‘அல்குர்ஆனை அணுகும் முறை' என்ற இப்பாடத்திட்டத்திற்கான வழிகாட்டல்களை ஜாமியா நளீமியாவின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷேக் ஏ.ஸீ.அகார்முஹம்மத் (நளீமி) நெறிப்படுத்துவார். பாடநெறி முடிவில் சித்தியடைந்தவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களை www.islahme.com என்ற இணையத்தளதில் பெறலாம்.

செவ்வாய், 27 ஜூலை, 2010

ஏர்வாடி தமுமுகவினர் மீது பொய் வழக்கு: பொதுமக்கள் கடும் கண்டனம்

நெல்லை ஏர்வாடி மெயின் ரோட்டில் 6வது தெருவில் உள்ளது மெர்ஸி நர்ஸிங்ஹோம். இங்கு தங்கும் ஒரு நர்சுடன் வெளியூரைச் சேர்ந்த (நான்குநேரி) வக்கீல் கண்ணன் என்பவருக்கு முறையற்ற உறவு இருந்துள்ளது. தினமும் இரவு அந்த வெளியூர் நபர் வருவதும் கள்ளத் தொடர்பை தொடர்வதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.குடும்பத்துப் பெண்கள் தங்கள் பணியின் நிமித்தம் தங்கி இருக்கும் இடத்தில் ஒரு முறையற்ற உறவு தொடர்வது மற்ற நர்சுகளுக்கு வேதனையை ஏற்படுத்தியதால் இவர்களில் சிலர் அக்கம்பக்கத்து வீட்டினர்களிடம்ஷ இதனை குமுறலுடன் கூறியுள்ளனர்.

ஏர்வாடிகாவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

அநீதியை தட்டிக் கேட்பதில் என்றும் சளைக்காத துடிப்புமிக்க இயக்கமாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களிடம் இந்த அநியாயம் குறித்த பொதுமக்கள் முறையிட்டனர்.12.07.2010 அன்று வழக்கம் போல்கள்ளத் தொடர்புக்கு வலுசேர்க்கும் விதமாக சர்ச்சைக்குரிய பேர்வழி கண்ணன் வந்தபோது இதனைஎதிர்பார்த்து காத்து இருந்தபொதுமக்கள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். நம்ம பகுதியை கேவலப்படுத்தி விட்டானே என்ற ஆத்திரம் பொது மக்களிடையே வெடித்தது. கோபத்தோடு கூடியிருக்கும் மக்கள் தனிநபரான கண்ணனைசரமாரியாக தாக்கினால் அவர் உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என எண்ணிய தமுமுக தலைவர் பக்ருதீன் கண்ணனை மருத்துவமனையில் ஒரு அறையில் வைத்துப் பூட்டினார். அத்தோடு ஆத்திரம் அடைந்த மக்களையும் அமைதிப்படுத்தினார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்த சில நர்சுகள் கண்ணனை தப்பிக்க வைத்து விடுகின்றனர்.
பிடிபட்ட பேர்வழி தப்பியதை அறிந்து பொதுமக்களின் ஆத்திரம் மேலும் அதிகரித்தது. கோபத்துடன் பொதுமக்கள் நாலாபுறமும் தேடத் தொடங்கினர். தப்பி ஓடி நான்குநேரி சென்றகண்ணன் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஏர்வாடி பொதுமக்களும், தமுமுகவினரும் தாக்கியதால்தான் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தமுமுக நிர்வாகிகள் மீது நான்குநேரி காவல்துறை பொய் வழக்கு (இபிகோ பிரிவு 308) போட்டது.13.07.2010 அன்று பக்ருதீன், அம்ஜத், முகைதீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தகவல்அறிந்த தமுமுக நிர்வாகிகள் தமுமுக அலுவலகத்தில் திரண்டனர்.அலுவலகத்தில் இருந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். தமுமுகவினரின் மீது பொய் வழக்கு போட்ட காவல்துறையைக் கண்டித்து கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டன. காவல் துறையினர் நியாயமற்ற முறையில் உள்நோக்கத்தோடு நடந்து கொண்டனர். மமக நகர செயலாளர் மாகின் ஊனமுற்ற சகோதரர் ஆவார். இவருக்கும் சம்பவத்திற்கும் தொடர்பு இல்லை எனக் குற்றம் சாட்டப்பட்ட நர்ஸ்கூறியும் கூட காவல்துறை உதவி ஆய்வாளர் அந்தோனி அம்மா உனக்கும் தொடர்பு எனக் கூறி அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்றிருக்கிறார்.இதைப்போல வஷீமீளியூர் காவல்நிலையத்தில் தமுமுகவினரைகைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டதோடு அவர்களை பார்க்க வந்த மாவட்ட நிர்வாகிகளை வள்ளியூர் காவல்நிலைய ஆய்வாளர் சுந்தரேசன் பார்க்கவே அனுமதிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஏர்வாடி அருகில் உள்ள சூரங்குடியில் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தசமையல் மாஸ்டர் அசன்ரபிக் சில சமூக விரோதிகளால் கொலை செய்யப்பட்டார். ஆனால் கொலையை தற்கொலை என மூடிமறைத்த காவல்துறை தற்போது தமுமுகவினர் மீது பொய் வழக்கு போட்டுள்ளதை காவல்துறையைக் கண்டித்து மாபெரும் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமுமுக மாநில செயலாளர் பி.எஸ். ஹமீது தலைமை வகித்து கண்டன உரையாற்றினார்.மாநில துணைச் செயலாளர் எஸ்.காதர் மைதீன் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், செயலாளர் உஸ்மான் கான், பொருளாளர் புளியங்குடி செய்யது அலி,மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் மைதீன் சேட்கான்,பொருளாளர் ரசூல் மைதீன்துணை செயலாளர் நயினார் முகம்மது, சுல்தான், துணை தலைவர் சர்தார் அலிகான்மற்றும் மில்லத் இஸ்மாயில் ஆகியோர் உரையாற்றினர்.
- களத்தொகுப்பு எஸ்.ஒ.எஸ் -
பா.ஜ.க. குண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்ட திருத்துறைப்பூண்டி தமுமுக ஆம்புலென்ஸ்.

இரு நாடுகளுக்கிடையே போர் நடக்கும்போது கூட ஆம்புலன்ஸ் சேவைகளுக்குஇடையூறு செய்யக் கூடாது என்பது சர்வதேச விதியாகும்.ஆனால், கற்ப்பிணிகளின்வயிற்றைக் கிழித்து, அதில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மதவெறி பயங்கரவாதிகளுக்கு இதெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தமிழகத்தில் தங்களது இருப்பைவெளிகாட்டுவதற்காக சமீபகாலமாக, இந்து மாணவர்களுக்குகல்வி உதவித் தொகை வேண்டும் என்று தவறான அடிப்படையில் பாஜக போராட்டங்கள் நடத்தி வருகிறது.கடந்த ஜுலை 24 அன்றுதிருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பாஜகவினர் இதேகோரிக்கைக்காக மாநில தலைவர்பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.அப்போது தமுமுகவின்ஆம்புலன்ஸுக்கு, பிரபல ஹனீபா மருத்துவமனையிலிருந்துஒரு இந்து சமுதாயத்தை சேர்ந்தகுடும்பத்தினரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.ஒரு நோயாளியை தஞ்சாவூருக்கு எடுத்து செல்ல வேண்டும்என்றும், வேகமாக வருமாறுஅதில் வேண்டியதால், தமுமுகவின் ஆம்புலன்ஸ் டிரைவர்தாஜுதீன் வேகமாக ஹனீபாமருத்துவமனையை நோக்கி திருப்பினார்.
வரும் வழியில், பாஜகவினர்ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்ததால், அவர் வண்டியைமெல்ல இரண்டாவது கியரில் நகர்த்தியிருக்கிறார்.அப்போது காவல்துறையும் கூட்டத்தைவிலக்கி, ஆம்புலன்ஸ்செல்ல வழி ஏற்படுத்தியுள்ளனர். பாஜகதலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தனதுª த £ண்ட ர் களிட ம்ஆம்புலன்ஸுக்கு வழிவிடுமாறு அறிவித்திருக்கிறார்.எந்த விதி மீறலும்யாருக்கும் இடையூறுஇல்லாமலும் ஹனீபாமருத்துவமனையை நோக்கி ஆம்புலன்ஸ் எடுத்துச் சென்றுவிட்டார்.மருத்துவமனை வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு நோயாளியை பார்க்க டிரைவர் சென்றுவிட்டார்.
அதற்குள் சுமார் 30 பேர் கொண்டபாஜக கும்பல் ஓடிவந்த வேகத்தில்,ஆம்புலன்ஸை கட்டைகளால்உடைத்து, டிரைவரை கொலைவெறியுடன் தேடி உள்ளனர்.டிரைவர் கிடைக்காததால், ஆம்புலன்ஸை புரட்டி பெட்ரோல்டேங்கை உடைத்து, வண்டியைதுவம்சம் செய்ய, இதைப் பார்த்தபொதுமக்கள் சப்தம் போட,அதற்குள் ஓடிவந்த காவல்துறையினர் பாஜகவினர் மீதுதடியடி நடத்தியதும், வன்முறைகும்பல் ஓடத் தொடங்கியது.அதற்குள் பாஜகவினர் தங்களின்அயோக்கியத்தனத்தை மறைக்க,ஆம்புலன்ஸ் எங்கள் மீது மோதும்விதமாக வந்தது என வதந்திகளைபரப்பினர்.ஏற்கனவே அங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்முகாமிட்டு இருந்ததால், அவர்தலைமையிலான போலிசார்நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். அதற்குள் பாஜகவினர் போலிஸ் வாகனங்களையும் உடைத்தனர்.போலிசார் துரத்த தொடங்கியதும் பாஜகவினர் கொடிகளைபோட்டுவிட்டு, வேனில் கட்டியிருந்த கொடிகளை அவிழ்த்து விட்டு ஓடத் தொடங்கினர்.
தமுமுக ஆம்புலன்ஸ் உடைக்கப்பட்ட செய்தி அறிந்ததும் திருத்துறைப்பூண்டி நகர தமுமுகவினர்சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.மாவட்ட தலைவர் தாஜுதீன்,ஒன்றிய செயலாளர் கலிபுல்லாஹ்,யூசுப் உள்ளிட்டோர் தலைமையில்சாலை மறியலில் தமுமுகவினர்இறங்க, பிறகு வழக்கு தொடுத்துவிட்டு அடுத்தகட்டமாக போராட்டம் நடத்தலாம் என முடிவுசெய்யப்பட்டது.செய் தியறிந்து திருவாரூர்மாவட்ட தமுமுகவினர் திருத்துறைப்பூண்டி நோக்கி விரைந் தனர்.
திருத்துறைப் பூண்டி நகரெங்கும்பாஜகவினரை பொதுமக்கள் காரிதுப்பாத குறையாக திட்டிக்கொண்டிருந்தனர்.இதே, ஆம்புலன்ஸை பலமுறைபாஜகவினர் அவசரத்துக்கு பயன்படுத்தியது திருத்துறைப் பூண்டிமக்களுக்கு நன்கு தெரியும்.அப்போது கூட ஒரு இந்து சமுதாயகுடும்பத்துக்குத்தான் உதவ அந்தஆம்புலன்ஸ் சென்றதும். திருத்துறைப்பூண்டி மக்களால் மூலைக்குமூலை பேசப்பட்டது.காவல்துறை பாஜகவினரைபிடிக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பிலிருந்தே அழுத்தங்களும அதிகரிக்க, அனைத்துக்கட்சியினரும் இந்த அராஜகத்தைகண்டித்து, தமுமுகவினருக்குஆறுதலையும் ஆதரவையும் தெரிவித்தனர்.
அடுத்த நாள் மமக துணைப்பொதுச் செயலாளர் எம். தமிமுன்அன்சாரி, திருத்துறைப்பூண்டிக்குவந்து நிலைமைகளை நேரில் விசாரித்தார்.குற்றவாளிகள் பிடிக்கப்படாததை கண்டித்து திருவாரூரில் காவல் கண்காணிப்பாளர்அலுவலகம் நோக்கி கருப்புக்கொடிஊர்வலம் நடத்தப்படும் எனஅறிவிக்கப்பட்டது.டி.ஐ.ஜி. அவர்களும் பொதுச்செயலாளர் ஹைதர் அலியிடமும்,மற்ற அதிகாரிகள் மமக துணைப்பொதுச்செயலாளர் எம். தமிமுன்அன்சாரியிடமும் பேசினார்கள். முதல்வர் கருணாநிதி திருவாரூக்குவரும் தினத்தில் கருப்புக் கொடிஊர்வலம் நடத்தாதீர்கள் என்றும்,ஜுலை 30க்குள் குற்றவாளிகளைபிடிக்கிறோம் என்று கூறியதால்,ஜுலை 31 அன்று கருப்புக் கொடிஊர்வலம் ஒத்திவைக்கப்பட்டது.
ஈவு, இரக்கமற்ற பாஜகவன்முறை கும்பலின் செயல்பொதுமக்களையே கோபப்படுத்தியது எனில், தமுமுகவினரைதமிழகமெங்கும் கொந்தளிக்கவைத்துள்ளது.தமுமுகவினர் இதுவரை ஜனநாயகத்தை மீறவில்லை. காவல்துறைதனது கடமையை வாக்களித்தப்படிசெய்யாவிடில், அதன் பின் விளைவுகளுக்கு காவல்துறைதான்பொறுப்பேற்க வேண்டும்.
காரணம், எங்களின் ஒவ்வொரு ஆம்புலன்ஸும் எங்களது ரத்த வியர்வையினால் ஓடிக் கொண்டிருக்கிறது. ஆம்புலன்ஸின் மீதுவிழுந்த தாக்குதல், எங்களின் நெஞ்சங்களின் மீது விழுந்த தாக்குதல்களாகும்.

வியாழன், 22 ஜூலை, 2010

அலையாத்திகாடுகள் நிறைந்து சுற்றுலாதளமாக காட்சிதரும் முத்துப்பேட்டைக்கு வருகைதாருங்கள். இதோ அங்கே இருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....
ஞாயிறு, 4 ஜூலை, 2010

இளையான்குடியில் விடுதலை முழக்கப் பொதுக்கூட்டம்

சிவகங்கை மாவட்டம் 26.06.2010 இளையான்குடியில் விடுதலை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு நகரச் செயலாளர் முகம்மது சைபுல்லாஹ் தலைமை தாங்கினார்.

தலைமை நிர்வாகக் குழு உறுப்பனிர் குணங்குடி ஹனிபா, மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, தமுமுக மாநிலச் செயலாளர் எம். மௌலா நாசர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சிக்கு மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்தப் பொதுக் கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.