செவ்வாய், 2 நவம்பர், 2010

தமுமுக, மமக நகர புதிய அலுவலகம் திறப்பு மற்றும் நகர் முழுவதும் கொடியேற்றம் நிகழ்ச்சி!!

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மட்டும் மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை நகரத்திற்கு புதிய அலவலகம் திறப்பு விழாவும் நகர் முழுவதும் கொடியேற்றும் நிகழ்ச்சியும் கடந்த சனிக்கிழமை அன்று தமுமுக மாவட்ட துணை செயலாளர் சகோதரர் வழக்கறிஞர் L.தீன் முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தமுமுக, மமக நகர தலைவர் சகோதரர் M.நெய்னா முகம்மது அவர்கள் வந்தவர்கள் அனைவரையும் வரவேற்க, தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோதரர் நாச்சிக்குளம் M.தாஜுதீன் அவர்களும், தமுமுக மாவட்ட செயலாளர் சகோதரர் பொதக்குடி குதுபுதீன் அவர்களும், தமுமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட துணை செயலாளர் சகோதரர் அதிரை சாகுல் அவர்களும்,முன்னிலை வகிக்க மனிதநேய மக்கள் கட்சியின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சகோதரர் M.முஜிபுர் ரஹ்மான் அவர்கள் கலந்து கொண்டு நகரத்திற்கான புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்கள்.

அதனை தொடர்ந்து தமுமுக, மமக நகர நிர்வாகிகள் தலைமையில் தொண்டர்கள் படைசூழ அரபு சாஹிபு பள்ளிவாசல் முதல் புதிய பேருந்துநிலையம் வரை வாகன அணிவகுப்போடு முத்துப்பேட்டை நகர் முழுவதும் கழக மற்றும் கட்சிக்கொடியினை மாவட்ட செயலாளர் சகோதரர் M.முஜிபுரஹ்மான் அவர்களும், நாச்சிகுளம் M.தாஜுதீன் அவர்களும், வழக்கறிஞர் தீன் முகம்மது அவர்களும்,நகர செயலாளர் சகோதரர் S.முகம்மது தாவூது அவர்களும், தமுமுகவின் மூத்த தலைவர் சகோதரர் M.ஹுமாயுன் கபீர் அவர்களும் கொடி ஏற்றிவைத்து சிறப்பித்தனர். இதில் ஏராளமான சகோதரர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த கொடியேற்ற மற்றும் வாகன அணிவகுப்பினாலும், தீபாவளி நேரம் என்பதினாலும் சுமார் மூன்று மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து நின்றது. என்பது குறிப்பிடத்தக்கது.


செய்தி மற்றும் புகைப்படம் வழக்கறிஞர் தீன் முகம்மது

சனி, 30 அக்டோபர், 2010

தமுமுகவின் ஆம்புலன்ஸ் தொடர்பு எண்கள்

இரத்த தானம்! தமுமுகவிற்கு தொடரும் விருதுகள்!!

தமிழகத்தில் மனித நேயப்பணிகளை ஆற்றிவரும் தமுமுக முஸ்லிம் அல்லாத சகோதரர்களிடமும் மிகுந்த பேராதரவை பெற்று வருவது தெரிந்ததே.இந்நிலையில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில குருதிப் பரிமாற்று குழுமம் தேசிய தன்னார்வ இரத்ததான நாளை முன்னிட்டு விருது கொடுத்து ஊக்குவித்து வருகிறது. சென்னை சேத்துப்பட்டு சின்மயா ஹெரிடேஜ் மையத்தில் விருதுகள் வழங்கும் விழா 30.10.2010 அன்று நடைபெற்றது. இதில் சென்னை மாவட்டத்தை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்ட இரத்ததான விருதுகளை வழங்கியது.

அவசர இரத்ததான சேவையில் இவ்வருடம் தமுமுக பெறும் சாதனைப் பெற்றிருக்கிறது. . இவ்வருடம் (முகாம்கள் நீங்கலாக) 1723 யூனிட் ரத்தங்களை அவசர உதவிகளுக்கு வழங்கியமைக்காக தமுமுக விருதினைப் பெற்றது. இதனை தமுமுக மாநிலச் செயலாளர் பி.எஸ்.ஹமீது, வட சென்னை மாவட்டத் தலைவர் உஸ்மான், தென் சென்னை மாவட்டத் தலைவர் சீனி முகம்மது ஆகியோர் தமிழக மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் எம். ஆர்,கே. பன்னீர் செல்வம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

சென்னை மாவட்ட தமுமுகவுக்கு 100 பேருக்கு அதிகமாக கொடுத்த கிளைகள் என்ற அளவில் 3 விருதுகள் (புழல் திருவல்லிக்கேணி மற்றும் தி.நகர்) கிடைத்தது. மற்ற கிளைகள் முறையாக பதிவு செய்யாததால் விருது பெறும் வாய்ப்பினைப் பெறவில்லை.

இந்நிகழ்ச்சிக்கு சென்னை மாநகராட்சி மேயர் மா. சுப்பிரமணியன், மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலர் வி,கே,சுப்புராஜ் ஐ.ஏ.எஸ், எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சங்கம் திட்ட இயக்குநர்கள் அமுதா ஐ.ஏ.எஸ் மற்றும் பெ. அமுதா ஐ.ஏ.எஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் உரையாற்றிய போது அமைச்சர் பன்னீர் செல்வமும் சென்னை மாநகர மேயர; மா. சுப்ரமணியமும் அனைத்து சமூக மக்களுக்கும் சேவை செய்து வரும் தமுமுகவின் மனிதநேயப்பணிகளைப் பாராட்டிப் பேசினார்.

வியாழன், 21 அக்டோபர், 2010

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகுவோம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மிகுந்த உற்சாகத்தோடு தமுமுக மற்றும் மமகவின் நிர்வாக தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன.முறையாக அமைக்கப்பட்ட தேர்தல் ஆணையம் மூலம் நடைபெற்று வரும் தேர்தல்; தமிழகத்தில் இருக்கும் பிற அரசியல் கட்சிகளுக்கும், இந்தியா முழுதும் இருக்கும் முஸ்லிம் அமைப்புகளுக்கும் ஒரு முன் மாதிரி என்றால் அது மிகையல்ல.

மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தல்கள் மூலம் கிளை அமைப்புகள் புனரமைக்கப்பட்டு, மழையில் நனைந்த தாவரங்களைப் போன்ற புத்துணர்வுடன் தொண்டர்கள் தங்களை புதுப்பித்துக் கொள்கிறார்கள்.ஆங்காங்கே நடைபெறும் தேர்தல்களில் சில இடங்களில் கடும் போட்டி ஏற்பட்டு, வாக்குச்சீட்டுகளின் வழியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். சில இடங்களில் ஒருமித்த முடிவின் அடிப்படையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தல்களின்போது ஊரெங்கும் கழகச் கொடிகளும், கட்சிக்கொடிகளும் கட்டப்பட்டு பெரும் பரபரப்புகளுக்கிடையே தேர்தல் நடைபெற்று வருவதாக தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.சில இடங்களில் இரவு நேரங்களில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, விளக்குகள் போடப்பட்டு விழாப் போலவும் தேர்தல்கள் நடைபெறுவதாகவும், தேர்தலை வேடிக்கைப் பார்ப்பதற்கே பெரும் கூட்டம் கூடுவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

தமுமுக மற்றும் மமகவின் தேர்தலின் முடிவில் யார் வெற்றி பெற்றார்கள்? என்பதை தெரிந்துக் கொள்ள அப்பகுதி ஜமாத்தார்களும், பொதுமக்களும் காட்டக்கூடிய பேரார்வம் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். மாபெரும் இயக்கத்தின் மீது முஸ்லிம் மக்களும், இதர பொதுமக்களும் காட்டும் ஈடுபாட்டையும், அவர்களின் எதிர்பார்ப்பையும் தான் இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.எனவே வெற்றி பெற்றவர்கள் தங்கள் பொறுப்பையும், கடமையும், உணர்ந்து இறைவனுக்கு பதில் கூறவேண்டும் என்ற நினைவோடு செயல்படவேண்டும். தோல்வியடைந்தவர்களை நமது சகோதரர்கள் என்ற உணர்வோடு அரவணைத்து, மீண்டும் அவர்களுக்கான வாய்ப்பு உண்டு என்பதை நினைவூட்டி பணியாற்றுவது மிகவும் அவசியமாகும். மகிழ்ச்சியில் மூழ்கிவிடமால், தங்களை ஒற்றுமையுடன் தயார்படுத்த வேண்டிய நேரமிது.

இன்னும் 6 மாதங்களில் தமிழக சட்டமன்ற தேர்தல் வருகிறது. வலுவான அதிமுக கூட்டணியில் நாம் இடம் பிடித்திருக்கிறோம்.நமக்கான நியாயமான அரசியல் ஒதுக்கீடுகள் கிடைக்கவிருக்கும் நிலையில், வலுவான தொகுதிகளை கண்டறிந்து, அங்கெல்லாம் நமது செயல் திட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் விரிவுப்படுத்த வேண்டியுள்ளது.

தீவிர உறுப்பினர் சேர்ப்பு, சுவர் விளம்பரங்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு, பூத் கமிட்டி அமைத்தல், எல்லா சமூக மக்களுடனும் நெருக்கத்தை மேலும் ஏற்படுத்துதல், வட்டார ரீதியில் செயல்படும் சமுதாய அமைப்புகளுடன் உறவை வலுப்படுத்துதல் என நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. நிதி சேகரிப்பு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே அலட்சியமின்றி, கவனமுடன், நிதானத்துடன், பணிகளை தொடங்க வேண்டும்.

பெரும்பாலான மாவட்டங்களில் தேர்தல்கள் முடிந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஒரு சில மாவட்டங்களிலும் இம்மாதத்தில் தேர்தல்கள் முடிவடைய உள்ள நிலையில், புதிய ரத்தம் பாய்ச்சப்பட்ட உற்சாகத்தில் கொள்கை சகோதரர்கள் அனைவரும் சட்டமன்ற தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் உடனே களம் இறங்க வேண்டும். அது தான் நமது அடுத்த 6 மாத செயல்திட்டமாகும்.

சனி, 16 அக்டோபர், 2010

ஆசாத் நகரில் (புதிய பேருந்து நிலையத்தில்) புதிய ஆட்டோ ஸ்டாண்ட்.


இறைவனின் மிகப்பெரும் உதவியால் நேற்று 15/10/2010 (வெள்ளிகிழமை) ஆசாத் நகரில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் ஆசாத் நகர்,ரஹ்மத் நகர், மருந்தங்காவெளி தோப்பு, ஆலங்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று ஒரு "புதிய ஆட்டோ ஸ்டான்ட் " பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த ஆட்டோ ஸ்டான்ட் மனிதநேய தொழிற்சங்கத்துடன் (மனிதநேய மக்கள் கட்சியன்) இணைக்கபட்டிருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதன் நிர்வாகிகள் :-

கெளரவ தலைவர் - சகோதரர் H.M.ஹாஜா

தலைவர் - சகோதரர் வழக்கறிஞர் L.தீன் முகம்மது BSC.,BL.,
(தமுமுக மாவட்ட துணை செயலாளர் )

துணை தலைவர் – S.முகம்மது தாவுது (நகர செயலாளர் தமுமுக.)

செயலாளர் – S.பாட்ஷா நகர தலைவர் (இந்திய தவ்ஹீத் ஜமாஅத் )

துணை செயலாளர்கள் – S.ஆபில் கான்
S.கமாலுதீன் , S.ராஜ் குமார்
பொருளாளர் – J.மன்சூர்தீன்
செய்தி - வழக்கறிஞர் தீன் முகம்மது

செவ்வாய், 12 அக்டோபர், 2010

முத்துப்பேட்டை தமுமுக வின் நகர பொதுக்குழு

முத்துப்பேட்டை தமுமுக வின் நகர பொதுக்குழுக் கூட்டம் 09/10/2010
அன்று சனிக்கிழமை இரவு இஷா தொழுகைக்குப்பிறகு சரியாக 8 மணிக்கு ஆசாத் நகரில் உள்ள
அல்மஹா பெண்கள் மதரசாவில் தமுமுகவின் மாவட்ட தலைவர் (இப்பொழுது மாற்றப்பட்டுள்ளது) சகோதரர் நாச்சிகுளம் M.தாஜுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுகவின் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இதில் முத்துப்பேட்டை நகரத்தை சேர்ந்த ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டு மிகச்சிறப்பாக நடத்தித்தந்தனர். எல்லா புகழும் இறைவனுக்கே!


தமுமுகவில் மூன்றாண்டுக்கு ஒருமுறை ஜனநாயக அடிப்படையில் தேர்தல் வைத்து புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்படும். அந்த வரிசையில் இந்த பொதுகுழுவில் நகர தமுமுக மற்றும் ம.ம.க பழைய நிர்வாகம் கலைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

சமுதாய பணிகளை அதிகப்படுத்துவதற்காகவும், இன்னும் துடிப்போடு கழகப்பணியாற்றுவதற்கும் முத்துப்பேட்டை நகர நிர்வாகத்தை இரண்டாக பிரித்து அசாத் நகரில் ஒரு புதிய கிளையை அமைத்து செயல்படுவது என தீர்மானிக்கப்பட்டு அந்த அடிப்படியில் நகர நிர்வாகத்தின் கீழ் அசாத் நகரில் தமுமுக புதிய கிளை உருவாக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தேடுக்கபட்டனர்.



தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் விவரம்:-

தமுமுகவின் முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள்

தலைவர் : - சகோதரர் M.நெய்நா முகம்மது (தெற்குத் தெரு)
துணை தலைவர் : - சகோதரர் M.சித்திக் அஹமது (மரைக்காயர் தெரு)
செயலாளர் :- S.முகம்மது தாவுது (ஆஸாத் நகர்)
துணை செயலாளர் : - A. நசீர் அஹமது (மரைக்காயர் தெரு)
பொருளாளர் : - S.ஜெஹபர் சாதிக் (பட்டுக்கோட்டை ரோடு)
ஆகியோரும்
இளைஞர்களை கொண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஸாத் நகர் புதிய நிர்வாகிகள் :-

தலைவர் :- Y.ஷபீர் அஹமது BBA.,
துணை தலைவர் :- சதாம் ஹுசைன் BBA.,
செயலாளர் : - பாருக் BCA.,
துணை செயலாளர் : - பைஷல் அஹமது BBA.,
பொருளாளர் : - தாஜுதீன் BBA.,

ஆகியோரும்
.ம.க வின் முத்துப்பேட்டை நகர நிர்வாகம் :-

நகர செயலாளர் : - சகோதரர் - முகம்மது யாசின்
தொழிற்சங்க செயலாளர் : - சகோதரர் மாணிக்கம்

ஆகியோர்கள் வந்திருந்த அணைவர்களாலும் ஏகமானதாக தேர்ந்தேடுக்கபட்டது.
இதில் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு அவர்களின் பணிகள் தொடர்ந்து நடைபெற ஏக இறைவனிடம் பிரார்தித்தவாறு கலைந்து சென்றனர்.

நாமும் புதிய நிர்வாகிகள் பனி சிறக்க கடல் கடந்து வாழ்த்துகிறோம். அவர்களது பனிசிறக்க பிரார்த்திக்கிறோம்.
-- செய்தி மற்றும் புகைப்படம்
வழக்கறிஞர் தீன் முகம்மது

வியாழன், 7 அக்டோபர், 2010

கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பும், நமது நிலையும்!

(தீர்பு வெளியான நேரத்தில் தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் செய்திகளை அவதானிக்கும் தமுமுக நிர்வாகிகள்.)

சமுதாயக் கண்மணிகளே... அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

நாம் எல்லோரும் மிகுந்த மனவேதனையில் இருக்கிறோம் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.482 ஆண்டு கால சிக்கல் எனக் கூறப்படும், பாப்ரி பள்ளிவாசல் விவகாரம் 1870&ம் ஆண்டில் தொடங்கி பல்வேறு காலக்கட்டங்களில் பிரச்சினை களை சந்தித்து, 1992 டிசம்பர் 6&ஆம் நாளில் நாடே பதறும் வகையில் காவி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அது இந்தியாவின் கறுப்பு நாள் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் தொன்மையான பண்பாடும், நாகரீகமும், மதச்சார் பின்மையும் தகர்க்கப்பட்ட நாள் அது. அன்றிலிருந்துதான் இந்தியா உள்நாட்டு வன்முறைகளினால் தனது பொன்னான வளர்ச்சியை இழந்தது.1949 டிசம்பர் 22&ல், திருட்டுத் தனமாக பாப்ரி பள்ளிவாசலில்; சிலைகள் வைக்கப்பட்ட நாளிலி ருந்து தொடங்கப்பட்ட வழக்கில், கடந்த நவம்பர் 30 அன்று அலஹா பாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.அது தீர்ப்பல்ல, இந்தியாவின் நீதி அமைப்பையே கொலை செய்த கொடுமை என்பதுதான் உண்மை.

பாப்ரி பள்ளிவாசல், இரண் டாவது முறையாக ஷஹீதாக்கப் பட்டிருக்கிறது. இந்திய நீதித்துறை வரலாற்றில் அது ஒரு கறுப்பு நாளாகும்.நாங்கள் தலைமையகத்தில் அமர்ந்து ஆங்கிலத் தொலைக்காட் சி சேனல்களை மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் பிரபல சட்ட நிபுணர் ராஜீவ் தவான் அவர்கள், இது கட்டப்பஞ்சாயத்து முறையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என இடித்துரைத்தார்.அந்த துயரமான தருணத்தில் அவரது வார்த்தைகள் ஆறுதலாக இருந்தது. அதே கருத்தை இன் னொரு சட்ட நிபுணரான பி.பி.ராவ் அவர்களும் வழிமொழிந்தது மேலும் ஆறுதலாக இருந்தது.

பரபரப்பான தொலைக்காட்சி விவாதங்களின் போது, பிரபல நீதியரசர் ராஜேந்திர சச்சார், “அங்கு பள்ளிவாசல் இத்தனை நாள் இருந்ததே அதைப் பற்றி ஏன் நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவில்லை? அது அனுபவ சொத்து இல்லையா?” என எதிர் கேள்விகளை எழுப்பினார்.ஆனால், காவிகளின் வெற்றிக் கூச்சலில் அவை கண்டுகொள்ளப் படவில்லை.அந்த நேரத்தில் தீர்ப்பு குறித்து தமுமுகவின் கருத்தரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் நமது அலுவலகத்துக்கு படையெடுத் தன. தீர்ப்பு குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. உடனே டெல்லியில் உள்ள நமது நண்பர்களிடமும், அலஹாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த நமது பத்திரிக்கை நண்பர்களிடமும் தொடர்பு கொண்டேன்.

தீர்ப்பு முஸ்லிம்களுக்கு மத்தி யில் கொந்தளிப்பையும், நடுநிலையாளர்களுக்கு மத்தியில் பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருப் பதால், நாடு முழுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டதை அறிய முடிந்தது.ஒரு முதிர்ச்சிமிக்க தலைமை இதுபோன்ற தருணங்களில் கொந் தளிப்பை தூண்டிவிடக் கூடாது. மிகுந்த பொறுப்புணர்வை வெளிப் படுத்தி, கருத்துக்களை நிதானமாக வெளியிட வேண்டும். எனவே 5 மணிக்கு தீர்ப்பு வெளியாகி, 6 மணிக்கெல்லாம் பத்திரிகையாளர் களை எதிர்கொள்ள வேண்டி வந்தது.

தீர்ப்பு எந்நிலையில் வந்தாலும் ஏற்போம் என்றீர்களே? இப்போது என்ன சொல்கிறீர்கள்? என வினவியபோது, இது ஒரு காவி தீர்ப்பு. நீதிபதிகளிடையே மாறுபட்ட கருத்துகள் வெளிப்பட்டிருக்கிறது. கட்டப் பஞ்சாயத்து முறையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதால், இப்போதைக்கு நீதிமன்ற நட வடிக்கை என்ற அளவில் ஏற்றாலும், தீர்ப்பில் மாறுபட்ட கருத்து உள்ளதால் நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம். இதுகுறித்து பாப்ரி மஸ்ஜித் நடவடிக்கைக் குழுவுடனும், அகில இந்திய தனியார் சட்ட வாரியத்துடனும் விவாதிப்போம் என்றெல்லாம் பல்வேறு விஷயங்களைக் கூறி னேன். ஆனால் ஒருசில நாளிதழ் கள் முன்னால் உள்ளதையும், பின்னால் உள்ளதையும் கத்தரித் துவிட்டு, நாம் சொல்லாத ஒன்றை “தீர்ப்பை தமுமுக வரவேற்கிறது’’ என்ற வாசகத்தை பிரசுரித்துள்ளன.ஆனால் நக்கீரன் ஏடு நமது கருத்துக்களை உள்வாங்கி சரியாக செய்தி வெளியிட்டது. (தனி செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது).

நாம் இந்திய அளவில் கவனிக் கப்படும் இயக்கமாக இருப்பதால் தான், நாம் அழைக்காமலேயே மீடியாக்கள் நமது அலுவலகத்துக்கு ஓடோடி வந்தன.அந்த நேரத்தில் ஏராளமான சகோதரர்கள் தீர்ப்பை எதிர்த்து நமது போராட்டம் என்ன? என்று வினவினார்கள். பலர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டநிலையில் பேசினார்கள். பேசியவர்களில் பெரும்பாலும் ஜமாஅத்தினர் என்பதும், அவர்களில் உலமாக் களும் உண்டு என்பதும் கவனிக்கத்தக்கது. அவர்களின் கோபங்களின் நியாயங்களை உணர முடிந்தது.ஆனால், சமுதாயத்தை சரியாக வழிநடத்த வேண்டிய தலைமைப் பொறுப்பு நம்மிடம் இருப்பதால், நாமும் உணர்ச்சிவசப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். இரண்டு நாள் அல்லது மூன்று நாள் கழித்து நமது கடும் கருத்துக்களை வெளியிடுவதற்கும், கொந்தளிப்பான நேரத்தில் அதே கருத்துக்களை வெளியிடுவதற்கும் வித்தியாசம் உள்ளது.

காரணம், மக்களில் பெரும்பா லோர் சாமானியர்கள். அப்பாவி கள். அவர்களை நெறிப்படுத்துவது நமது தலைமைப் பண்புகளில், சமுதாயக் கடமைகளில் முதன்மை யானது என்பதால், “யாரும் போராட்டங்களில் இப்போது இறங்க வேண்டாம்“ என்று கேட்டுக் கொண்டோம்.காரணம், இந்தியா முழுக்க அன்றைய பொழுதில் பரபரப்பும், நெருக்கடியும் நிலவியது. ஆர்ப்பாட்டம், மறியல், தர்ணா என இறங்கியிருந்தால் மக்கள் ஒரு சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருப் பார்கள். ஆனால் கட்டுப்பாடு இருந்திருக்கிறது. யாராலும் தடுத்திருக்கவும் முடிந்திருக்காது. வன்முறைகள் நிகழ்ந்திருக் கலாம். துப்பாக்கிச் சூடு கூட நடந்திருக்கலாம். அதன் எதி ரொலி, தமிழகத்தைத் தாண்டி இந்தியாவெங்கும் எதிரொலித் திருக்கக் கூடும். தொலைக் காட்சி களில் அதையெல்லாம் பார்த்து, நாடு முழுக்க மக்கள் சாலைகளில் இறங்கி, அது பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்.

அது நமது எதிரிகளுக்கு வாய்ப்பாக அமைந்து, தங்களின் காவி கலவரங்களைத் தொடங்கி ரணகளமாக்கி இருப்பார்கள். நல்லவேளையாக, இறைவனின் அருளால் அப்படி எதுவும் நடை பெறவில்லை.இப்படி எதுவும் நடைபெற்று விடக் கூடாது என்பதால்தான் நாம் உடனடியான ஆர்ப்பாட்டங்களை நடத்தவில்லை.இது நீதிமன்றத் தீர்ப்பாக உள்ள நிலையில், பல்வேறு சமூகத்தினரும் நமக்கு ஆதரவாக மாறியுள்ள சூழலில், இதை ராஜதந்திரமாக எதிர்கொள்ளும் முடிவைத்தான் இந்தியா முழுக்க உள்ள முஸ்லிம் அமைப்புகள் எடுத்தன.எல்லோரும் அமைதிகாக்க வேண்டும் என்றும், சமூகநல்லி ணக்கமும், நாட்டின் பொது அமைதியும் கெட்டுவிடக் கூடாது என்றும் எல்லா முஸ்லிம் தலைவர்களும், அறிஞர்களும் வலியுறுத்தியுள்ளனர். எல்லோரின் ஒரே முடிவு, இதை சட்டரீதியாக அணுகி, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது.

எனவேதான், நாம் போராட்டங் களைத் தவிர்த்து, முதல் கட்டமாக இத்தீர்ப்பின் அபாயங்களை மக்க ளுக்கு எடுத்துக்கூறும் விதமாக ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்து மதச்சார்பற்ற, முற்போக்கு பிரமுகர்களை அதில் உரையாற்றச் செய்ய வேண்டும் என்று அக்டோபர்&1 அன்று கூடிய தலைமை நிர்வாகக் குழுவில் முடிவு செய்துள்ளோம்.இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் அக்டோபர் 15 அன்று டெல்லியில் நடைபெறும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், தீர்ப்பு குறித்து ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில் தமுமுக சார்பில் பங்கேற்க டெல்லி செல்ல உள்ளேன். அதன்பிறகு பாப்ரி மஸ்ஜித் தொடர்பாக அகில இந்திய அளவில் எடுக்கப்படும் முயற்சிகளைப் பரிசீலித்து, நமது தமுமுக சார்பில் என்ன செய்யலாம் என்பது குறித்தெல்லாம் விவாதிப்போம்.

அதுவரை பொறுமை காப்போம்.

நீங்கள் மனம் தளராதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். (உண்மையான) இறை நம்பிக்கைக் கொண்டவர் எனில், நீங்களே இறுதியில் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 3:139)

என்றும் அன்புடன்...எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்

நக்கீரன் பேட்டி

தீர்ப்பு குறித்து நம்மிடம் பேசிய தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், “முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு காவித் தீர்ப்பு. நீதிமன்றத்தின் மூலம் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. தேசிய அளவில் சட்டம் & ஒழுங்கை பாதுகாக்க இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. மதச்சார்பின்மையை வலியுறுத்தும் அனைத்து சக்திகளுக்கும் இந்தத் தீர்ப்பு பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது. அமைதி ஏற்படவேண்டுமென்ற அடிப்படையில் இதை வரவேற்கலாமே தவிர, உண்மையில் மேல்முறையீட்டில்தான் முஸ்லிம் சமுதாயத்திற்கு வெற்றி கிடைக்கும்” என்றார்.

தமுமுக தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.

நக்கீரன் அக். 2-5, 2010)

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

முத்துப்பேட்டை நகர தமுமுக மற்றும் மமக நகர நிர்வாக குழு

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

முத்துப்பேட்டை நகர தமுமுக மற்றும் மமக நகர நிர்வாக குழு

தமிழ்நாடும் முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை நகர நிர்வாக குழு (03-10-2010) இன்று சகோதரர் முன்னாள் நகர துணைசெயலாளர் சித்திக் அவர்களது இல்லத்தில் நகர தலைவர் சகோதரர் S.முகம்மது தாவுது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. எதிர்வரும் 9 ம்தேதி நடைபெறும் நகர நிர்வாக தேர்தலை அதிகமான சகோதரர்களை திரட்டி சிறந்த நிர்வாகத்தை தேர்ந்தெடுப்பது என்றும். அந்த நிர்வாகத்தின் மூலம் எதிர்வரும் காலங்களில் கழக மற்றும் கட்சிப்பணிகளை அதிகப்படுத்துவது எனவும் , நமது பெரியக்கடைதெருவில் புதிதாக ஒரு அலுவலகம் வாடகைக்கு எடுப்பது என்றும் நிர்வாக கூட்டத்தில் ஏகமானதாக முடிவெடுக்கப்பட்டது.

இதில் நகர நிர்வாகத்தை சேர்ந்த அனைத்து சகோதரர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

செய்தி - வழக்கறிஞ்சர் தீன் முகம்மது.

நகர பொதுக்குழு

தமிழ்நாடும் முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை நகர பொதுக்குழு எதிர்வரும் 09-10-2010 (சனிக்கிழமை) ஆசாத் நகரில் உள்ள அல்மஹா பெண்கள் மதரசாவில் தலைமை தேர்தல் அதிகாரி மண்டலம் ஜைனுலாபுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற இருக்கின்றது. தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் அனைத்து சகோதரர்களும் மற்றும் ஆதரவாளர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அழைப்பது ....

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

மனிதநேய மக்கள் கட்சி

முத்துப்பேட்டை நகரம்.

புதன், 29 செப்டம்பர், 2010


அயோத்தி வழக்கு - முத்துப்பேட்டையிலும் போலிஸ் குவிப்பு! கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு: தமிழகத்தில் 12 நகரங்களில் சிறப்பு போலீஸ் குவிப்பு; ஊர்வலம், பொதுக்கூட்டத்துக்கு தடை

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பதில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையொட்டி நாடெங்கும் உச்ச கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பதட்டம் ஏற்படலாம் என்று கருதப்படும் நகரங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி மாநில அரசுகளை மத்திய உள்துறை அறிவுறுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் 32 நகரங்களில் பதட்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக உளவுத்துறை எச்சரித்து உள்ளது. இதனால் 16 இடங்களில் அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் 12 நகரங்கள் பதட்டமான பகுதி என்று கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று நடந்த இலவச மருத்துவ முகாமில் கலந்து கொண்ட சட்டம்- ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

அயோத்தி வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பாதுகாப்பை முடுக்கி விட்டுள்ளோம்.

தமிழக அரசின் உத்தரவுப்படி பதட்டமான பகுதிகள் எது என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவை கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வேலூர், ஓசூர், திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தஞ்சாவூரில் உள்ள முத்துப்பேட்டை என கண்டறியப்பட்டு கூடுதலாக பாதுகாப்புக் கென்று துப்பாக்கி ஏந்திய போலீசார் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த சிறப்பு அதிரடிப் டை போலீசார் டி.ஜி.பி. மேற்பார்வையில் இயங்கி வந்தவர்கள் பதட்டமான பகுதிகளுக்கு இவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். சிறப்பு படையில் உள்ள 10 ஆயிரம் போலீசார் நேற்றே அனுப்பப்பட்டுள்ளனர். இன்று முதல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சென்னையில் பதட்டமான பகுதிகள் எவை என்று கண்டறியப்பட்டுள்ளது. பதட்டமான பகுதிகளில் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் போலீஸ்படை தயாராக வைக்கப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது தயவு தாட்சன்யம் இல்லாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் ஒழுங்குபடுத்தும் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் பதட்டம் குறையும் வரை இந்த சட்டம் அமலில் இருக்கலாம். இதுபோல இன்றும், நாளையும் பொதுக் கூட்டங்கள், ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சிலை ஊர்வலத்தில் எந்த அசம்பாவித சம்பவங்களும் நடை பெறவில்லை. பொது மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். அது போல இன்றும், நாளையும் போலீசாருக்கு பொது மக்கள் நல்ல ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மத வழிபாட்டை சேர்ந்தவர்களும் இந்த சூழ்நிலையில் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

பதட்டமான நகரங்களில் கோவை நகரம் முக்கிய மானது என்று தெரிய வந்துள்ளது. அங்கு எங்களது சிறப்பு படை பணியில் இருக்கும். தேவைப்பட்டால் டெல்லியில் இருந்து துணை ராணுவத்தை வரவழைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

-- மாலை மலர் --

செவ்வாய், 28 செப்டம்பர், 2010


தமுமுகவின் 16 ஆம் ஆண்டும்.. ! நான்காவது தேர்தல் பொதுக்குழுவும் !

சமுதாய கண்மனிகளே... அஸ்ஸலாமு அலைக்கும்...

பொங்கி வழியும் அருவி ஒன்று ஓடையாக மாறி, நதியாக உருவெடுத்து, பயணம் செய்யுமிடத்தையெல்லாம் பசுமையாக்கி; தன் சேவைகளை சுயநலமின்றி வழங்கும். மனிதர்கள், விலங்கினங்கள், தாவரங்கள், இதர உயிரினங்கள் என அனைத்தும் இதன் வழியாக பலன்களை பெறும். வற்றாத ஒரு நதிபோலத்தான் தமுமுகவின் பணிகள் பொதுமக்களுக்கு சென்றடைந்துக் கொண்டிருக்கிறது. 1995 -ல் இழந்த உரிமைகளை மீட்போம்; இருக்கும் உரிமைகளை காப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்து களத்துக்கு வருகை தந்த தமுமுக மிக குறுகிய காலத்தில் வளர்ச்சியையும், எழுச்சியையும் பெற்றது.

அன்றைய முஸ்லிம் பொது தளத்தில் அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், பழனிபாபா ஆகியோரைத் தாண்டி வெகுமக்கள் இயக்கத்தை உருவாக்க முடியுமா? உருவாக்கினாலும் அதை வெற்றிகரமாக வழி நடத்த முடியுமா? என்ற நிலையில்; அணைகளை உடைக்கும் காட்டாற்று வௌ;ளமாய் சமுதாய மக்கள் தமுமுகவின் பின்னால் அணி திரண்டது வரலாற்று வியப்பாகும்.

புதிய பாதை

பல்வேறு ஆற்றல்களை தன்னகத்தே பெற்றிருந்த அப்துல் சமது சாஹிப், அப்துல் லத்தீப் சாஹிப், ஷஹீத் பழனிபாபா ஆகியோரின் சேவைகளை, ஆற்றலை அர்ப்பணிப்பை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.ஆனால், பாபர் மஸ்ஜித் இடிப்புக்கு பின்னால் நிகழ்ந்த அரசியல் போக்குகளையும், சமுதாயத்தில் ஏற்பட்ட கோப அலைகளையும் அவர்கள் புரிந்துக் கொள்ளவில்லை. அல்லது அதற்கேற்றவாறு தங்களது அரசியலை மாற்றிக் கொள்ளவில்லை; இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தைதான் தமுமுக மிகுந்த நுட்பத்தோடு நிரப்பியது.

ஜனநாயகமும், அதன் வழியிலான அதிகாரமும், அதை நோக்கிய வெகுமக்களின் போராட்டங்களுமே நவீன அரசியல் ரூ சமூக அமைப்பில் சரியான பாதை என்பதை சுட்டிக்காட்டி; தமுமுக சமுதாயத்திற்கு வகுப்பெடுத்தது. இதை சமுதாயம் ஏற்றதால்தான் தமுமுகவின் பலம் பன்மடங்கு பெருகியது.இதை இந்துத்துவ சக்திகள் எதிர்பார்க்கவில்லை; அரசியல் கட்சிகள் விரும்பவே இல்லை. சமுதாய துரோகிகளால் அங்கீகரிக்கவே முடியவில்லை. ஆம்! சிங்கங்கள் உலா வருவதை கண்டு சிறு நரிகளுக்கு பொறுக்கவில்லை. ஆனால் தமிழக முஸ்லிம் சமுதாயம், தங்களுக்கு யானை பலம் கிடைத்ததாக கருதி துள்ளி எழும்பியது. தமுமுகவுக்கு அரணாக நின்றது.

எதிர் நீச்சல்

அன்றைக்கும் முதல்வராக இருந்த கலைஞர், முஸ்லிம் சமுதாயத்தின் எழுச்சியை தீவிரவாதம் என்று கூறி அழிக்கத் துடித்தார். அடக்குமுறைகளை ஏவினார். கடுமை காட்டினார்.அடக்குமுறைகள்தான் தமுமுகவின் வளர்ச்சிக்கு படிக்கட்டுகளாக மாறின. நெருக்கடிகள்தான் தமுமுகவினருக்கு கைத்தடிகளாக உதவின. இறைவனின் பேரருளால் எவராலும் ஒடுக்க முடியாத பேரியக்கமாய் தமுமுக பாய்ச்சல் காட்டியது.பொதுக் கூட்டங்கள் மக்கள் திரளால் நிரம்பி வழிந்தன. போராட்டங்களில் பொதுமக்களின் கோபம் பொங்கியது. ஆர்ப்பாட்டங்களில் இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் ஆர்ப்பரித்தனர். வரலாறு மாறியது.

சமுதாயம் தலை நிமிர்ந்தது. தமிழக அரசியல் கட்சிகள் திரும்பி பார்த்தன. காவல் துறை திகைத்தது. உளவுத்துறை அடங்கியது. நெருப்புக்கு இன்னுமா உறக்கம்? எரிமலை எப்படி பொறுக்கும்? என்ற வெகுஜன வசனங்கள் இங்கேயும் கேட்டது!உருட்டி மிரட்டிய உளவுத்துறை, வாருங்கள் உட்கார்ந்து பேசுவோம் என்றது. அராஜகம் செய்த காவல்துறை, எதுவாக இருந்தாலும் பேசித் தீர்க்கலாம் என்றது. அலட்சியப்படுத்திய அரசியல் கட்சிகள் நாங்களே உங்களைத் தேடி வருகிறோம் என்றன! அதிகாரிகளும், அரசு ஊழியர்களும் கோரிக்கைகளை ஏற்கிறோம் என இறங்கி வந்தனர். ஏமாற்றங்களையே சந்தித்த சமுதாயம், மாற்றங்களை கண்டு மகிழ்ந்தது.

சாதனைகளும் - சரித்திரங்களும்

சொந்த சமுதாயத்தில் பீதியூட்டியவர்கள், பொறாமைக் காட்டியவர்கள், அழிக்க நினைத்தவர்கள் தமுமுகவில் நாங்களும் இணைகிறோம் என்றார்கள். இன்று அவர்களெல்லாம் மாவட்ட பொறுப்புகளில் கூட அங்கம் வகிக்கிறார்கள். ஆம், தமுமுக எதிர்ப்புகளை முறியடித்தது. எதிரிகளை வசப்படுத்தியது. அவர்களை நெறிபடுத்தியது.சாதனைகளுக்கு மத்தியிலும் சில சோதனைகள்! வெற்றிகளுக்கு மத்தியிலும் சில தோல்விகள் என்ற போதிலும் களங்களை இழக்கவில்லை. போராட்டங்கள் நிற்கவில்லை. ஆட்சிகள் மாறின. கூட்டணிகள் மாறின. ஆனால் நமது கொள்கைகள் மாறவில்லை. போர்குணம் இழக்கவில்லை. அதற்காகவே இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை என்ற மற்றொரு களம் உணர்வூட்டிக் கொண்டிருக்கிறது.

தமிழக முஸ்லிம் சமுதாயத்திற்கு 3.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த வரலாற்று வெற்றியை ஈட்டியதும் முழு சமுதாயத்தின் ஆதரவையும் பெற்ற பேரியக்கமாய் பரிணாமித்தது தமுமுக.சென்னை வாழ்வுரிமை மாநாடு (1999), தஞ்சை பேரணி (2004) டெல்லி பேரணி (2007) இவையெல்லாம் தமுமுகவின் மணிமகுடங்கள்.உள்ளுர் பிரச்சனைகளுக்காகவும், தனிமனித உரிமைகளுக்காகவும் நடத்திய வட்டார ரீதியிலான போராட்டங்கள் கிளைகளை வலிமைப்படுத்தின. ஆம்புலன்ஸ் சேவைகள், ரத்ததான ரூ மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், மனித நேய சேவைகள், வட்டியில்லா கடன் வழங்குதல் என பட்டியலிட முடியாத பணிகள் முஸ்லிம்களை தாண்டி, இந்து, கிருத்தவ, தலித் இன மக்களையும் வென்றெடுத்தன.

அரசியல் தலைவர்கள், முற்போக்கு சக்திகள், சிந்தனையாளர்கள், பத்திரிக்கையாளர்கள், சமூக சேவர்கள் தமுமுகவின் பணிகளை பாராட்டினர். ஊக்கப்படுத்தினர். சுனாமியில் தமுமுக தொண்டர்கள் உயிரை பணயம் வைத்து ஆற்றிய சேவைகளை தமிழகமே புகழ்ந்தது. இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கே பாராட்டினார். ஐநா சபைக்கும் சென்றது தமுமுக!

காலத்தின் தேவை

எந்த ஒரு தலைமையும் கால மாற்றத்தை புரிந்துக் கொண்டு, அதற்கேற்ற வியூகங்களை வகுக்கும் வல்லமை கொண்டதாய் இருக்க வேண்டும். புதிய தேவைகளை பூர்த்தி செய்யும் தொலை நோக்கு பார்வைகள் வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்ற, கொள்கைகளை இழக்காமல், புதிய பாதைகளை உருவாக்க வேண்டும். அதை தமுமுக செய்ததுஆகவேதான், அந்த பேரியக்கத்தின் புதல்வனாய்; கால மாறறத்தின் அரசியல் தேவைகளை உணர்ந்து மனித நேய மக்கள் கட்சி உருவாக்கம் பெற்றது.

சமூக நீதி, சமூக நல்லிணக்கம், சமத்துவ ஜனநாயகம் என்ற கொள்கைகளை முன் வைத்து அரசியலில் சிறுபான்மை மக்களின் உரிமைகளை நிலைநாட்டவும், அனைத்து தரப்பு மக்களின் நலன்களை மனிதநேயத்தோடு முன்னெடுக்கவும் தொடங்கப்பட்ட இக்கட்சி இன்று தமிழக அரசியலில் புயல் வேகத்தில் வளர்ந்து வருகிறது. பொறுப்புகளுக்கு போட்டிகள் நிலவுகின்றன. (எல்லாப் புகழும் இறைவனுக்கே)இந்நிலையில் தான் 2011 ரூல் தமிழகத்தில் முன்னோடி இயக்கம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர் கொள்ளும் வகையிலும், அமைப்பு சட்டவிதிகளின்படியும், ஊழியர்களை புத்துணர்விக்கும் நோக்கோடும் தமுமுகவின் அமைப்பு தேர்தல் நடைபெற தொடங்கியிருக்கிறது.

கோவை (2001) புதுக்கோட்டை (2004) பாபநாசம் (2007) ஆகிய இடங்களில் நடைபெற்ற தேர்தல் பொதுக்குழுவை தொடர்ந்து நான்காவது தேர்தல் பொதுக்குழு சென்னையில் நடைபெறவிருக்கிறது.நாம் அறிந்தவரை இந்தியாவில் முஸ்லிம்களுக்கான வெகுமக்கள் இயக்கம் ஒன்று கிளை, வட்டம், நகரம், ஒன்றியம், மாநகரம், மாவட்டம், தலைமை என ஒழுங்குப்படுத்தப்பட்ட விதிகளோடு, நேர்மையான முறையோடு, அதற்கேற்ற பொதுக்குழு அமைப்போடு தேர்தல் நடத்தப்பட்டு; அதன் வழியாக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவது தமுமுகவில் மட்டும்தான் என்பதை நினைக்கும் போது உள்ளம் பூரிக்கிறது. உதடுகள் துடிக்கிறது.

இவ்வளவு உயரத்தில்; நெருங்க முடியாத சிகரத்தில் நாம் நிற்பதற்கு என்ன காரணம்? உளத்தூய்மைதான். எல்லாம் வல்ல இறைவன் நம்மை இயக்குகிறான் என்ற நம்பிக்கையும், நாம் செய்து வரும் பணிகளுக்கு, நம் மரணத்திற்கு பின்னால் மாபெரும் இறைவன் அதற்கு பரிசளிப்பான் என்ற அசைக்க முடியாத உறுதியும்தான் நமது வெற்றிகளுக்கு காரணங்களாகும்.

எச்சரிக்கையும் - பொறுப்புணர்வும்

16 ஆம் ஆண்டில் நான்காவது தேர்தல் பொதுக்குழுவை தமுமுகவும், முதல் பொதுக்குழுவை மமகவும் சந்திக்கும் இத்தருணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.வேடந்தாங்கலுக்கு சீசன் பறவைகள் வருவது போல் நிறையபேர் வருவார்கள். எங்களையும் உறுப்பினராக்குங்கள் என்பார்கள். பொறுப்புகளை தாருங்கள் என இளிப்பார்கள். இங்குதான், இப்போதுதான் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.குடிகாரர்கள், வட்டி ரூ விபச்சாரம் செய்பவர்கள், சமூகம் முகம் சுழிக்கும் தவறுகளை செய்பவர்கள் நமது கோட்டைக்குள் நுழைந்து விடக்கூடாது. அவர்களை அனுமதித்து விடக்கூடாது.

நமக்கு கூட்டம் வேண்டும். மேலும் பலம் பெருக்க வேண்டும் என்ற ஆவலில் நெறியற்றவர்களை நாம் நுழையவிடக்கூடாது. தமுமுகவை பொறுத்தவரை மார்க்கம் வரையறுக்கும் பண்புகளை மீறாதவர்கள் தேவை.மமகவை பொறுத்தவரை பல்வேறு சமூகங்களும் நம்மை தேடி வரும் நிலையில் அனைவருக்கும் பொது ஒழுக்கத்தை அளவுகோளாக வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள்தான் நமக்கு தேவை. அரசியல் கட்சிதானே; யார் வேண்டுமானாலும் வரட்டுமே.... என நினைக்கக் கூடாது. அப்படி ஊசலாட்டத்திற்கு உள்ளாகும் போதுதான் நாம் நீர்த்துப் போகத் தொடங்குவோம். நிலைகுலைய தொடங்குவோம்.எண்ணிக்கைகள் மட்டுமே வெற்றிகளைத் தராது. உறுதியான சிந்தனைகளும், நிலை தடுமாறாத செயல்பாடுகளும், மனிதநேய அணுகுமுறைகளுமே வெற்றிகளுக்கான நிரந்தர களங்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.

தமுமுகவுக்கு பொறுத்தமானவர்கள் யார்? மமகவுக்கு பொறுத்தமானவர்கள் யார்? என்பதை முடிவு செய்து அவர்களை களத்துக்கு தயார் செய்வதுதான் இத்தேர்தலின் நோக்கம் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.பாசத்தில் இரண்டும் ஒரு பூச்செடியின் இரண்டு பூக்கள். அதே நேரத்தில் களத்தில் கடற்படைக்கு சில தளபதிகளும், தரைப்படைக்கு சில தளபதிகள் திறமையாளர்களாக இருப்பார்கள். போரின் இலக்கு ஒன்றுதான் என்றாலும் களங்கள் வெவ்வேறானவை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.

தகுதியானவர்கள் யார்?

அதே சமயம் பழையவர்களும் நீண்ட கால உறுப்பினர்களும் மட்டுமே பொறுப்புகளில் இருக்க வேண்டும் என்று இதற்கு அர்த்தமல்ல! மற்றவர்களுக்கு இங்கு இடமில்லை என்றும் பொருள் கொள்ளக் கூடாது.பழையவர்களில் செயல்படக் கூடியவர்களும், தகுதியான சிந்தனையாளர்களும், புதியவர்களில் நல்லவர்களும், நேர்மையானவர்களும் கொண்ட கதம்ப மாலையாக நிர்வாகங்கள் அமைய வேண்டும் என்பதே இதன் உள்அர்த்தமாகும். எந்த நிலையிலும் கொள்கை ரூ கோட்பாடுகளை ஏற்காதவர்களுக்கு இங்கு இடமில்லை அவர்களில் பழையவர்கள் ரூ புதியவர்கள் என்று பேதமில்லை.

லட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வையில் 16 ஆம் ஆண்டில் நுழைந்திருக்கிறோம். பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் சுகத்தையும், நலன்களையும், தொழில்களையும், சொந்த காசுகளையும் இழந்து எண்ணற்ற தியாகங்களை செய்து வளர்த்த இயக்கம் இது! இப்போது அரசியல் வெற்றிகளை குறி வைத்து நகரும் நேரத்தில் பழையவர்கள் என்ற போர்வையில் நெறி மீறியவர்களும், புதியவர்கள் என்ற போர்வையில் சீசன் பறவைகளும், பச்சோந்திகளும் நுழைந்துவிடக்கூடாது.

ரத்தத்தாலும், வியர்வையாலும், கண்ணீராலும் வளர்த்தெடுக்கப்பட்ட இயக்கம் வௌ;ளிவிழாவையும், பொன் விழாவையும் இடையில் பல வெற்றி விழாக்களையும் காண வேண்டுமெனில் கொள்கை, கோட்பாடுகள், நெறிமுறைகள், விதிமுறைகளை மீறாத நிர்வாக அமைப்பு அவசியமாகும். இதை எல்லோரும் உணர வேண்டும்.நிர்வாகத் தேர்தல் சுதந்திரமாக, நேர்மையாக நடைபெறும் வகையில் தமுமுகவின் தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தலைவர்கள் கூட தலையிட முடியாது. தேர்தல் அதிகாரிகள் தேர்தலை மட்டுமே நடத்துவார்கள். நீங்கள்தான் உங்களுக்கான நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும். தவறானவர்களும், நெறியற்றவர்களும், சுயநலவாதிகளும் பொறுப்புகளுக்கு வந்து விடக்கூடாது என்பதில் உறுப்பினர்கள் கவனம் செலுத்தி தங்களின் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த மாபெரும் சமுதாயக் கடமையில் கவனம் தேவை என்பதை உரிமையோடு எச்சரிக்கிறேன்.

நன்றி வஸ்ஸலாம்...!

அன்புடன் என்றும் உங்கள் தொண்டன்

பேரா.ஜவாஹிருல்லாஹ்.


திருவிடச்சேரியில் நடந்தது என்ன? ஓர் உண்மை அலசல்

ஜமாஅத் தலைவர் படுகொலை! பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு!!
திருவிடச்சேரியில் நடந்தது என்ன?

அனைத்து முஸ்லிம்களுக்கும் உயிரினும் மேலான நெறிதான் தவ்ஹீத் என்னும் ஏகத்துவம். உயிரினும் மேலான இந்நெறியை உயிர்களைப் பறிப்பதற்கான போர்வையாக்கினால் அது எவ்வளவு கொடுமை? அதுவும் புனித ரமலான் மாதத்தில் என்றால் எவ்வளவு வேதனை?

அதுவும் இறை இல்லமான பள்ளிவாசலில் என்றால் எவ்வளவு அவலம்?

மார்க்கம் என்பதை மூர்க்கம் என்று புரிந்துக்கொண்ட சில மூளைச் சலவைக்களான கும்பலுக்கும், திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி ஜமாஅத்துக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடுகள் மோதலாகி, துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகி பலர் படுகாயம் அடைவதில் முடிந்திருக்கிறது.

சம்பவத்தின் சுருக்கம் இதுதான். திருவிடச்சேரி ஜமாஅத்திற்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டி.என்.டி.ஜே.) அமைப்பினருக்கும் மோதல் இருந்து ரமலானில் இரவுத் தொழுகையை டி.என்.டி.ஜே. அமைப்பினர் ரோஸ் பாப்பா என்பவரின் வீட்டில் நடத்தி வந்துள்ளனர். ரோஸ் பாப்பா என்பவருக்கும், அவரது எதிர் வீட்டுக்கும் தகராறு இருந¢து வந்துள்ளது. இந்த வாய்த்தகராறில் ரோஸ் பாப்பாக வீட்டிற்குத் தொழுகை நடத்திவந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் சிலர் இவருக்கு ஆதர வாக இறங்கியுள்ளனர். இந்த பிரச்சினையின் போது ஊர் ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் சமாதானப்படுத்தியுள்ளார்.

தகராறுக்குக் காரணம்:-

ரோஸ் பாப்பா வீட்டில் தொழுகை நடத்தும் அமைப்பினர் இரவு வெகுநேரம் தங்களின் ஆஸ்தான தலைவருமானவரின் சிறப்புப் பேருரைகளையும்,சிலநேரம் குர்ஆனையும் ஒலிபெருக்கியில் ஒலிக்க வைத்துள்ளனர். ஜபருல்லாவின் சகோதரியின் குழந்தையும் (இறந்த ஹாஜி முஹம்மதுவின் குழந்தை), சகோ தரரின் ஒரு குழந்தையும் மன நிலை பாதிப்படைந்து சிகிச் சைப் பெற்று வருகின்றனர். மனநலமற்ற குழந்தைகளின் இரவுத் தூக்கம் பாதிக்கப்படுவதால் ஒலி பெருக்கியின் சப்தத்தைக் குறைக்கச் சொன்னதும், இஸ்லாத்தைத் தூயவடிவில் பின்பற்றுவதாக நம்புவோருக்கு வெறியைக் கிளப்பிவிட்டிருக்கிறது.

5.9.2010 அன்று மாலை வாய்த் தகராறில் ஈடுபட்டிருந்தோரை விலக்கிவிட்டு சமாதானப்படுத்திய ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில், ‘‘நோன்பு துறக்கும் நேரமாகிவிட்டது, பிறகு பேசிக்கொள்ளலாம்’’ என்று கூறியுள்ளார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் தீவிர ஆதரவாளரான குத்புதீனை, தனது உறவுக்காரப் பையன் என்ற உரிமையில் கொஞ்சம் குரலுயர்த்தி கண்டித்து அனுப்பியுள்ளார்.

இஸ்லாம் கூறும் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்களை பெருந்தன்மையாகப் பிறருக்கு மட்டும் விட்டுக் கொடுத்து விட்டு, இந்த பிரச்சினையை மனிதாபிமான முறையில் அணுகாமல் தங்களது கோபதாபங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். குத்புதீன் தனது மைத்துனரும், திருமங்கலக்குடி பகுதியில் ஆதிகேசவன் போன்ற ஆசாமிகள் துணையோடு கட்டப் பஞ்சாயத்து செய்பவருமான ஹஜ் முஹம்மது என்பவருக்கு விவரத்தைக் கூறி, ஆட்களைத் திரட்டிக்கொண்டு வருமாறு கூறியுள்ளார்.

கலாட்டா:-

திருமங்கலக்குடியிலிருந்து பல வாகனங்களில் வன்முறைக் கும்பல் வந்துள்ளது. வாகனங்கள் ஊருக்கு வெளியே தப்பியோட வசதியாக நிறுத்தப்பட்டு, ஒரு கார் மட்டும் பள்ளிவாசல் அருகில் வந்துள்ளது. தவ்ஹீத் கொள்கைக்கு உரம் சேர்க்க வருவது போல் அதிரடியாக நுழைந்துள்ளனர். இவர்கள் ததஜ அமைப்பினருக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்பதும், தீவிர ஆதரவாளர்கள் என்பதும் அப்போது மக்களால் உறுதியுடன் கூறப்படுகிறது. 25 ரவுடிகள் புடைசூழ பள்ளிவாசலுக்குள் சென்ற ஹஜ் முஹம்மது, தொழுதுவிட்டு வெளியே வந்த ஊர்த் தலைவர் முகமது இஸ்மாயிலை ஓங்கி முகத்தில் குத்தியுள்ளார். ததஜ ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய போது அதற்கு முன்பாக ஜமாத்தரப்பினர் எந்த முன் ஆயத்தத்திலும் இல்லை என்பதை அவ்வூர் மக்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். ஜமாத் சார்பில் அடியாட்களோ ஆயுதங்களோ ஏற்பாடு செய்யாமல் சாதாரனமாகவே இருந்திருக்கிறார்கள். ததஜ தரப்பில் சொல்வது போல் ஜமாத் சார்பில் அதிரடி தாக்குதல்கள் நடந்து அதன்பிறகு ததஜ ஆதரவாளரான ஹாஜி முஹம்மது தரப்பினர் தற்காப்புக்காக சுட்டனர் என விளக்கம் அளித்திருப்பதும் மிகப்பெரிய பொய் என்பதை அவ்வூர் மக்கள் நம்மிடம் தெரிவித்தனர். ஜமாத் தலைவரின் மூக்கு உடைந்து ரத்தம் வழிந்துள்ளது.

அதன் பிறகு தொடர்ந்து வன்முறை கும்பலால் பள்ளி வாசல் ‘நகரா’ கிழிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகுதான் உடனே பள்ளிவாசல் ஒலிபெருக்கியில், வெளியூர் ரவுடிகள் பள்ளிவாசலுக்குள் வந்து தகராறு செய்வதாக அறிவிக்கப்பட்டது.

ஊர்மக்கள் பள்ளிவாசலை நோக்கி வர, இந்த கும்பலில் ஒருவர், ‘‘தலைவரை அடித்ததை மட்டும் மைக்கில் சொல்றியே, இன்னும் நிறைய நடக்கப் போவுது. அதையும் சேர்த்து சொல்’’ என்று கூறியுள்ளார். அவர்கள் கூறிய இந்த வார்த்தைகளையே ஊர் மக்கள் நம்மிடம் கூறினார்கள். இவர்கள் மிகப்பெரிய திட்டமிடலோடு வந்தனர் என ஊர்மக்கள் அடித்துச் சொல்கின்றனர். அதற்கு ஆதாரம் தான் இது என மக்கள் சொல்கிறார்கள். மேலும் துப்பாக்கியுடன் வந்ததில் இருந்தே இவர்கள் தான் வலிய வம்புக்கு வந்ததற்கான ஆதாரணம் என பலரும் கூறுகின்றனர். உடனடியாக ஊர் மக்கள் திரண்டதும் ததஜவுக்காக வந்த ஹாஜி முஹம்மது தலைமையிலான வன்முறை கும்பல் பள்ளிவாசலுக் குள் இருந்தால் சிக்கிக் கொள்வோம் என்பதை உணர்ந்து வெளியே வந்து நின்றுகொண்டது. (தாக்குதல் நடத்திவிட்டு தப்பிக்க வசதியாக).

தாக்கிய அந்த நேரத்தில் சராமாரி துப்பாக்கிச் சூடு:-

இந்நிலையில் ஊர்த்தலைவர் முகமது இஸ்மாயில் மகன் சபீருதீன் (18), ‘‘என் அத்தாவை யாருடா அடிச்சது-?’’ என்று கேட்டு, ரவுடிகள் நின்ற பக்கம் சென்றுள்ளார். மகனுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற பாசத்தில் முகமது இஸ்மாயிலும் சென்று ரவுடிக் கும்பலிடம் சிக்கிக் கொண்டார்.

தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் குத்புதீனுக்கு ஆதரவாக வந்த அடியாள் படைத் தலைவன் ஹஜ் முஹம்மது, வெறி தலைக்கேறி, முகமது இஸ்மாயிலை சுட்டுக்கொன்றான். அதைத் தடுக்க வந்த ஹாஜி முஹம்மதுவையும் சுட்டுக் கொன்றான். இவர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தினர் தொழுது வந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் வசிப்பவர். ஜபருல்லாவின் மைத்துனர்.

ஊர் மக்களையும் சரமாரியாக சுட்டப் படி இந்தக் கும்பல் தப்பிச் சென்றுள்ளது. ஊருக்குள் வந்த காரும், ரவி என்ற ரவுடியும் மக்களிடம் பிடிபட்டனர். வன்முறைக் கும்பல் தப்பி ஓடிவிட்டது.

அப்பாவிகள்:-

வன்முறைக் கும்பல் தலைவன் ஹஜி முஹம்மது சுட்டதில் நசீர் முஹம்மது (30), பால்ராஜ் (55) ஹாஜாமைதீன் (45), ராமதாஸ் (45) சந்தியாகு ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இச்சம்பவத்திற்கு துளியும் சம்பந்த மில்லாமல் தெருவில் போய்க் கொண்டிருந்தவர்கள் என்பதுதான் வேதனைக்குரியது. இவர்கள் எப் படி இந்த இடத்தில் வந்தார்கள் என்பது இங்கு கவனிக்கத்தக்கது. திருவிடைச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள இந்து மற்றும் தலித் மக்களுக்கான பஜார் என்பது திருவிடைச்சேரி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ததஜவின் முக்கிய தலைவர் பி.ஜே. கூறியிருப்பது போல் சுடப்பட்ட இந்துக்கள் ரவுடிகளோ, ஜமாத்தாரால் திரட்டி வரப்பட்ட அடியாட்களோ அல்ல. முஸ்லிம் களோடு நேசமாக பழகிய உழைக்கும் அப்பாவிகள். இவர்களுக்கு ததஜ பற்றியும் தெரியாது. ஜமாத்தாரையும் புரியாது என ஊர் மக்கள் கூறினார்கள்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் மக்கள் அங்கு குவிந்தனர். தமுமுகவின் அவசர ஊர்திகளில் காயம்பட்டவர்கள் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிறகு மேல்சிகிச் சைக்காக தஞ்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.பாதிக்கப்பட்டவர்களுக்கு தமுமுக ஆம்புலன்சும் தொண்டர் களும் உதவியதைப் பார்த்த பத்திரிகை நிருபர்கள் சிலர், தமுமுகவினர் தாக்கப்பட்டதாக தவறாகப் புரிந்துகொண்டு விட்டனர்.

தமுமுக நிர்வாகிகளும் அவசர ஊர்திகளும் சம்பவம் நடந்தபிறகு, பாதிக்கப் பட்டோருக்கு மருத்துவ உதவி களைச் செய்வதற்காகவும், மேலும் வன்முறை பரவி விடா மல் தடுப்பதற்குமே அங்கு சென்றுள்ளனர்.

துப்பாக்கி ஏது ?

கொலைக் கும்பல் தலைவன் ஹஜ் முஹம்மது, சிதம்பரத்தில் அந்த இயக்கத்தினரின் துணை யோடு நீதிமன்றத்தில் சரணடைந்தான். ஹஜ் முஹம்மது வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது மேலும் இரண்டு கள்ள துப்பாக்கிகள் கைப் பற்றப்பட்டன. லண்டனில் தயாரான, 150 ரவுண்டு சுடக் கூடிய துப்பாக்கியும் அதில் ஒன்று என்று சொல்லப்படுகிறது. இத்த கைய பயங்கர ஆயுதங்களை ஓர் ஆசாமிவைத்திருப்பது போலீசாரை அதிரவைத் துள்ளது.

கொள்கைக்கு பின்னடைவு:-

இந்த பயங்கரவாதிகளின் செயல் திருவிடச்சேரியை மட்டுமல்லாது, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வெட்கித் தலைகுனிய வைத்துள்ளது.இஸ்லாத்தை அதன் தூய வடிவில் எடுத்துரைப்பது காலத்தின் மிகமிகக் கட்டாயமாகிவிட்ட சூழ் நிலையில், தமிழ்நாடு துப்பாக்கி ஜமாஅத் என உருவெடுத்துவிட்ட இவர்களின் செயல் சத்தியத்திற்காக உழைப்பவர்களுக்குப் பெரும் சோத னையை உண்டாக்கி விட்டது.

இந்நிலையில் இத்தகைய வன் முறைப் போக்கைக் கண்டிக்க வேண்டிய அதன் தலைமை தற்காப்புக்காகத்தான் ஹஜ் முஹம்மது சுட்டார், திருவிடச்சேரி ஜமாத்தார்கள் அரிவாள், கத்தி, ஆயுதங்களுடன் தாக்க வந்தார்கள், பள்ளிவாசலுக்கு முஸ்லிமல்லாத ரவுடிகளை வைத்திருந்தனர் என்றெல்லாம் தொலைக்காட்சியில் பேசி, வன்முறைச் செயலை நியாயப்படுத்தி வருவதுதான் வேதனையாக உள்ளது என்கின்றனர் அவ்வூர்மக்கள். நடந்து முடிந்த இந்த அட்டூ ழியம் குறித்து தமிழகம் முழு வதும் உள்ள ஜமஅத்தார்கள், உலமாக்கள் கருத்து கூறுவது என்ன வெனில் சமீப காலமாக ஆளும் திமுகவோடு ததஜவின் தலைமை நெருக்கமாக இருக்கிற காரணத்தால் கொலைக்காரர்கள் மீது உறுதியான நடவடிக்கை இருக்காது என சந்தேகம் கொள்கின்றனர்.

சிந்திக்க வேண்டும்:-

ஏகத்துவ பிரச்சாரத்தில் கேரள முஜாஹிதீன்களும், அகில இந்திய அளவில் அஹ்லே ஹதீஸ் அமைப் பினரும், தமிழக அள வில் ஜாக், ஐ.பி.பி. உள்ளிட்ட அமைப்பினரும் சிறப்பாக செய்து வருகின்றனர். அவர்களை எதிர்க்கும் மாற்று கருத்துக்கள் கொண்டவர்கள் கூட நட்புபாராட்டும் அளவுக்குத் தான் அவர்கள் பிரச்சாரம் இருந்து வருகிறது. முதுகு முழுவதும் அழுக்கை வைத்துக்கொண்டு போலி தூய்மை பேசி சக கொள்கை சகோதரர்களையும் சக முஸ்லிம் களையும் எதிரிகளாக கருதி அதன் வழியாக இயக்க வெறியை அப்பாவி தொண்டர்களிடம் வளர்ப்பவர்கள் தமிழகம் முஸ்லிம் சமு தாயத்தையே தலை குனிய வைத்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழியை வழங்கு வானாக. இதைபோல ஜமாஅத்தினரும் தங்கள் தரப்பு தவறுகள் குறித்து கவலையோடு சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறார்கள்.

தவறுகள் இருதரப்பிலும் இருக்கலாம். ஆனால் வெறி பிடித்து துப்பாக்கியை தூக்கும் அளவுக்கு சென்றதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை வாசிக்கும் ததஜ சகோதரர்கள் யார் மீதும் கோபப்படாமல் நடைபெற்ற கொடூரங்கள் நியாயம் தானா---? என்பதை மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக தலைவர் நேரில் ஆறுதல்:-

திருவிடச்சேரியில் நடந்த வன்முறைச் சம்பவங்களை அறிந்த தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மாநிலச் செயலாளர் பேரா. ஜெ.ஹாஜாகனி மற்றும் தஞ்சை (வடக்கு), திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் 7.9.2010 அன்று திருவிடச்சேரிக்குச் சென்றனர். தமுமுக தலைவரின் வருகையை முன்னதாக அறிந்த ஊர் ஜமாஅத்தினர் மற்றும் நிர்வாகக்குழுவினர், பள்ளிவாசலுக்கு அழைத்துச் சென்று, நடந்த சம்பவங்களை விளக்கினர். நமது செய்தியாளரின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

பள்ளிவாசலுக்குள் ரவுடிகளை வைத்திருந்தது, தவ்ஹீத் ஜமாஅத் தினரை பயங்கரமாகத் தாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்த ஊர் ஜமாத்தினர், நோன்புக் காலம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு இந்தப் பள்ளிவாசலில் இருந்துதான் கஞ்சி வழங்கியதாகவும், அவர்கள் இவ்வளவு மூர்க்கமாக இறங்குவார்கள் என தாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினர்.சுட்டுக் கொல்லப்பட்ட ஜமாஅத் தலைவர் முகமது இஸ்மாயில் மற்றும் ஹாஜி முஹம்மது ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற தமுமுக நிர்வாகிகள் அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, படுகாயம் அடைந்தவர்களின் உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர்.

திருவிடச்சேரியை ஒட்டியுள்ள விழியூர் சென்று குண்டடிபட்ட முஸ்லிமல்லாத சகோதரர்களின் வீடுகளுக்கும் தமுமுக நிர்வாகிகள் சென்று அவர்களுக்கு தமுமுக நிர்வாகிகளின் வருகையை ஒட்டி விழிதியூரில் திரளாகக் கூடிய முஸ்லிமல்லாத சகோதர சகோதரிகள், திருவிடச்சேரி முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் காலங்காலமாக இருந்துவரும் பாசப் பிணைப்பை நெகிழ்வோடு குறிப்பிட்டனர்.

குடும்பத்தோடு வெளியூர் செல்லும் முஸ்லிம்கள் தங்கள் வீட்டைப் பார்த்துக் கொள்ளும்படி நம்பி ஒப்படைத்துச் செல்வதையும், பலநேரங்களில் முஸ்லிம்களின் கடைகள் மட்டும் சொத்துகளுக்கு பாதுகாப்பாக இம்மக்கள் சென்று இரவெல்லாம் தங்கியிருந்ததையும் தமுமுக தலைவரிடம் கூறிய இம்மக்கள், தங்களை அடியாட்கள் என்று அந்த பேரறிஞர்(?) விமர்சித்தது குறித்து வேதனை அடைந்தனர். நீங்கள் ஜமாத்தினரின் அடியாட்களாகப் போனீர்களா? என்ற கேள்விக்கு வேதனையோடு மறுத்தனர்.

குத்புதீனும் அந்த அமைப்பும்:-

குத்புனுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை, அவர் எமது உறுப்பினருமில்லை, எமது செயல்பாடுகளில் கலந்துகொள்வதுமில்லை என்று அந்த அமைப்பின் முக்கிய தலைவர் பி.ஜே தொலைக்காட்சியில் விளக்கமளித்துள்ளார்.நாகை மாவட்டம் ஏனங்குடி நடுப்பள்ளிவாசலுக்கு எதிரில் உள்ள டி.என்.டி.ஜே. அலுவலகம் இந்த குத்புதீன் குடும்பத்துக்குரியது. குத்புதீன் முயற்சியினாலேயே அந்த அமைப்புக்கு அந்த இடம் கிடைத்தது என்கின்றனர் ஊர்வாசிகள். எனவே குத்புதீன், அந்த அமைப்புடன் நீண்டகாலத் தொடர்பில் இருந்து வந்துள்ளார் என்பது தெரிகிறது.

திருவிடச்சேரியில் வாய்த்தகராறு ஏற்பட்டபோது அஸர் தொழுகை நேரம். அப்போது குத்புதீன் அங்கே இருந்ததால் பிரச்சினை வளர்ந்துள்ளது. அதற்கு முன்னர் தொடர்ச்சியாக அந்த வீட்டில்தான் இரவுத் தொழுகைக்கும் வந்துள்ளார்.இவர் தற்செயலாக நண்பரோடு வந்ததுபோல் அதன் தலைமை கூறியதும் பொய்யே.வன்முறை இவர்களது வழிமுறை இல்லையென்றால், திருவிடச்சேரி ஜமாஅத் தலைவரும், இன்னொரு முஸ்லிமும் கொல்லப்பட்டதை இந்த நிமிடம் வரை அவர் ஒப்புக்குகூட கண்டிக்காமல் இருப்பது ஏன்?

தற்காப்புக்காக சுட்டாரா?

பள்ளிவாசலுக்கு நியாயம் கேட்க வந்த ஹஜ் முஹம்மது, தற்காப்புக்காக சுட்டதில் இருவர் பலியாகிவிட்டதாக அந்த தலைவர் கூறுகிறார்.

@ நியாயம் பேச வருபவர் துப்பாக்கியோடு தான் வருவாரா?

@ பள்ளிவாசலுக்கு துப்பாக்கி எடுத்து வருவது அவசியமா?

@ நபிவழியில் நடப்பதற்காக, பல்வேறு சோதனைகளை சந்தித்தவர்கள், சந்திப்பவர்கள் துப்பாக்கி மூலம்தான் தீர்வு கண்டார்களா?

@ இதற்கெல்லாம் என்ன பதில்-?

திருவிடச்சேரி மக்கள் கருத்து:-

முகம்மத் இக்பால் (ஜமாத் பொருளாளர்) கூறுகையில்:-

இந்த ஊரில் நாங்கள் எல்லாம் ஒத்துமையா வாழ வேண்டுமென நினைப்போம். ஆன இந்த சம்பவம் எங்கள் மனதில் பெரிய கவலையை ஏற்படுத்திவிட்டது. சம்பவம் நடந்த நாளில் தவ்ஹீத் ஜமாதினர் இவ்வூரில் ஒரு வீட்டில் ரமலான் இரவு தொழுகை நடத்தி வந்தனர். அப்போது அவ்வீட்டு பெண்ணுக்கும் எதிர் வீட்டுகாரர் களுக்கும் நடந்த சிறிய பிரச்சணைக் காரணமாக கைகலப்பு நடந்தது. இதனை ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் தலையிட்டு சுமார் 50 அல்லது 60 பேர்களுடன் மீண்டும் வந்தனர். அப்போது ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்கள் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்தார்.

பிரச்சனையைப் பேச 10 பேர் வந்தா போதுமே ஏன் இத்தனை பேர் என ஜமாத் தலைவர் கேட்டார். அதற்கு தவ்ஹீத் ஜமாத்தினர் ‘‘இவர்கள் எங்கள் பக்கம் பேச வந்துள்ளனர்’’ என்று கூறினர். யாரும் எதிர்பார்’காத நேரத்தில் இஸ்மாயில் அவர்களை அவர்களில் ஒருவரான ஹாஜி முகம்மது மூக்கில் தாக்கினார். இதனால் ஜமாத் தலைவருக்கு மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே பள்ளி இமாம் மைக்கில், ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு செய்தார். அறிவிப்பு செய்யும் போதே கொலையாளிகள் ‘‘இப்போது மூக்கை மட்டும் தான் உடைத்துள்ளோம் இன்னும் பாக்கி உள்ளது அதையும் மைக்கில் சொல் லுங்கள்’’ என கூறினர். இமாமின் அறிவிப்பை கேட்ட உடன் ஜமாத் தலைவரின் மகன் ஒடி வந்து ‘‘யாருடா என் அத்தாவை அடித்தது தைரியம் இருந்த இப்ப வா’’ என ஆவேசப்பட்டார். மகன் கோபத்தில் ஏதாவது செய்திடுவானோ என பயந்து அவனை சமாதானப்படுத்த பள்ளியிலிருந்து ஜமாத் தலைவர் இறங்கினார். ஒரு சில அடிகள் சென்ற உடன் இவ்வூரைச் சேர்ந்த குத்புதீனின் மச்சானாகிய ஹஜ் முகம்மது அவரை சுட்டான்.

இதுக்கு அரசியல் கட்சிகள் காரணம் என சொல்கிறார்கள் இதற்கு அதிமுகவோ திமுகவோ காரணம் இல்ல. இதற்கு குத்புதீன் தான் காரணம்.சமா தானப்படுத்தினார். ஆனால் ஆத்திரத்திலும் கோபத்திலும் இருந்த அவர்கள் அங்கிருந்து சென்று அவர்தான் சம்பவம் நடக்க இருந்த சில மணிநேரத்துக்கு முன் ‘‘இன்னும் 2 மணிநேரத்தில் இந்த ஊரை என்ன பண்றேன் பார்’’ என சொன்னார்.

ஹாஜா மைதீன் (ஜமாத் துணைத் தலைவர்) கூறுகையில்:-

இஸ்மாயில் பாய் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் முதல் அவர் இறக்கும் நாள் வரை எல்லாரிடமும் நல்ல முறையில் நடந்துக்கொண்டார்.இந்த பசங்க இப்படி பண்ணுறானுங்களே என்று ரொம்ப கவலைப்பட்டார். பல இரவுகளில் தூக்கம் இல்லாமல் இதே கவலையில் இருந்தார். எப்பவுமே நாம் அனைவரும் ஒன்றுதானே ஏன் பிரச்சனை பண்றாங்க என்று கூறி வருத்தப்படுவார். அப்படிப்பட்ட ஒருவரை எங்க ஜமாத் இப்போது இழந்துவிட்டது. சம்பவம் நடந்த நாளில் அவர்கள் 5 கார்களில் வந்து ஏற்கனவே திட்டமிட்டது போல் சிறிது தூரத்திற்கு முன்பே நிறுத்தி ஒரே ஒரு குவாலிஸ் காரிலே மட்டும் வந்தார்கள் எல்லாம் முடிந்தவுடன் அந்த கார்களில் தப்பிவிட்டனர். இது எல்லாமே முன் ஏற்பாட்டுடன் நடந்துள்ளது போல் தெரிகிறது, இதற்கு காரணமானவர்களை காவல்துறை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

சுட்டுக்கொள்ளப்பட்ட ஜமாத் தலைவரின் மகன் சபீருதீன் கூறுகையில்:-

நான் பிரச்சனை என்று கேள்விப் பட்டு போனேன். அவங்க 50 பேருக்கு மேல் இருந்தாங்க அத்தாவை அடிச்சதுல மூக்குல ரத்தம் வந்து கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்திலேயே துப்பாக்கியால் சுட்டாங்க. அங்கேயே அத்தா மவுத் தாயிட்டார்.

ஜபருல்லா (சுட்டு கொல்லப்பட்ட ஹாஜி முஹம்மதின் மைத்துனர்) கூறுகையில்:-

எங்களுக்கும் அவர்களும் தனிப் பட்ட எந்த பிரச்சனையும் இல்லை. ஜமாத்திற்கும் அவர்களுக்கும் சிறு சிறு பிரச்சணை வரும், பிறகு சரியாகிவிடும்.என்னுடைய சகோதர மகனுக்கு சிறிது மூளை வளர்ச்சி குறைவு. அவனுக்கு அதிக சப்தம் ஒத்துக்காது. அவர்கள் எதிர் வீட்டில் ஸ்பிக்கர் போட்டு ரமலான் இரவு தொழுகை நடத்திவந்தனர். குர்ஆன் தொழுகை காரணமாக நாங்கள் எதுவும் சொல்லவில்லை. சம்பவ தினத்தில் எங்கள் எதிர்வீட்டில் இருக்கும் பெண் எங்கள் குடும்பத்தினரை தவறாகப் பேசி னார். இதனை பெரிது பண்ண வேண்டாம் என்று விட்டுவிட்டோம். ரமலான் வரை தொழுகை நடக்கட்டும், பிறகு நடத்த வேண்டாம் என சொல்லிவிட்டோம். இதையே ஜமாத் தலைவர் இஸ்மாயில் அவர்களும் கூறினார். பிறகு நோன்பு துறந்த பின் குத்புதீன் என்பவர் சமாதா னம் செய்த ஜமாத் தலைரை தரக் குறைவாகப் பேசினார். இதனை அங்கிருந்த மக்கள் ஆட்சேபனை செய்தனர். அவர்களையும் தரக்குறை கம்பு, கட்டை ஆகியவைகளை எடுத்து பொதுமக்களை தாக்கினர். இதில் மாற்று மத சகோதரர்களும் தாக்கப்பட்டனர்.

இந்நிலையில் குத்புதீன்என்பவர் இன்னும் 2 மணி நேரத்தில் இந்த தெருவையே தரைமட்டம் ஆக்குரென் பாரு என போனார்.இதே போல் அடிக்கடி குத்புதீன் சொல்வது வழக்கம். எனவே இதனை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஒரு சில மணி நேரத்தில் பள்ளிவாசலில் இருந்து மைக்கில் ‘ஜமாத் தலைவர் தாக்கப்படுகிறார்’ என அறிவிப்பு வந்தவுடன் நாங்கள் பள்ளிவாசலை நோக்கி ஓடினோம். கண் மூடி திறக்கும் முன் ஹஜ் முகம்மது என்பவர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில் ஜமாத் தலைவர், எனது மச்சான் ஹாஜி முஹம்மது ஆகியோர் இறந்தனர் மற்றும் நான்கு பேர் காயமடைந்தனர். இதில் மாற்று மத சகோதரரும் அடங்குவர். ஒரு சிறிய விஷயத்தை பெரிய பூதாகரமாக்கி உயிர்பலி வாங்கிவிட்டனர். நானும் தவ்ஹித் சிந்தனை உள்ளவன்தான். ஜமாத் நிர்வாகத்தோடு சேர்ந்துதான் நாம் ஏகத்துவ கொள்கையைச் சொல்ல முடியும் என சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்கவில்லை.எதிர்தரப்பில் அவர்கள் ஒரு சிலரைத் தவிர யாரும் கொள்கை ரீதியாக செயல்படுவதில்லை.

பிச்சை முஹம்மது (சம்பவத்தை நேரில் கண்டவர்):-

சம்பவ நாளில் குர்ஆன் ஓதிக் கொண்டிருந்த ஜமாத் தலைவரை ஹஜ் முகம்மது என்பவர் முகத்தில் அடித்தார். பின்பு ஜமாத் தலைவரை நோக்கி ‘‘நீ என்ன பெரிய ஆளா?’’ என கேட்டு அவரது நெஞ்சில் குத்தினார். தலைவரை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த ஜமாத்தினர் அவர்களை பிடிக்கும் போது அவர்கள் பள்ளியிலிருந்து கீழே இறங்கி விட்டனர்; அதன்பின்பு ஜமாத் தலைவரையும் அவருடன் இருந்தவர்களையும் சரமாரியாக சுட்டு, தயாராக இருந்த கார் களில் தப்பினர். சம்பவத்தை கேள்விப் பட்டவுடன்; தமுமுகவினர் 150க்கு மேற்பட்டோர் வந்து எங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர்.

குண்டுபாய்ந்த இந்துமத சகோதரர் ராமதாஸ் மனைவி கூறுகையில்:-

என் கணவர் மாதா கோயில் திருவிழாக்காக வசூல் செய்ய அங்கு சென்றார். அங்கு நடந்த பிரச்சனையில் அவருடைய விலாவிலும் குண்டு பாய்ந்து தற்போது தஞ்சை மருத்துவமனை ஐ.சி.யு.வில் உள்ளார். எனக்கு 4 பிள்ளைகள் உள்ளனர். கணவர் மட்டும்தான் சம்பாதிக்கிறார்.அவரும் இப்போது மருத்துவமனையில் உள்ளதால் நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்.

சின்னப்பா (சம்பவத்தை நேரில் கண்டவர்) கூறுகையில்:-

‘‘எங்க விழிதியூர் கிராமத்திலிருந்து நாங்க எல்லோரும் கடைக்கு இங்கு தான் வருவோம். எங்களுக்கு முக்கியமான கடைத் தெருவே இந்த ஊர்தான்.எங்களுக்கும் இந்த ஊர்காரர்களுக்கும் எந்தப் பிரச்சணையும் இல்லை. கடைக்கு வந்த நாங்கள் ஏதோ சத்தம் கேட்டதால் அங்கு ஒடினோம்.
அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் எங்க ஊர்’காரருங்க 3 பேர் சிக்கிட்டாங்க. அவங்க இப்போ ஆஸ்பத்திரில இருக்காங்க’’.

அந்தோனி சாமி (குண்டு பாய்ந்தவரின் உறவினர்) கூறுகையில்:-

‘‘விழிதியூர் கிராமத்திலே இதுக்கு முன்னாடி இதுபோல் நடக்கவே இல்ல. இது பெரிய அநியாயம். நாங்க மாதா கோயில் திருவிழா நடத்த வசூல் செய்யப் போனோம். ஆனால் திருவிழா நடத்த வேண்டிய நாட்டாமை இருவரும் இப்போ மருத்துவமனையில் உள்ளனர்’’.

நன்றி: மதஜ

இறைவன் நாடினால்... முத்துப்பேட்டை தமுமுகவின் நகர பொதுக்குழு.


புதன், 22 செப்டம்பர், 2010

கூத்தாநல்லூர் முளிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவாக்களின் போராட்ட அழைப்பு !

கடந்த விநாயகர் ஊர்வலத்தின் போது முஸ்லிம்களின் பகுதிக்குள் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் முதல் முறையாக அத்துமீறி நுழைந்து கலவரம் ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பி கலவரபீதியை ஏற்படுத்தினர். கூத்தாநல்லூரில் முஸ்லிம்களும்,ஹிந்துக்களும் தொப்புள்குடி உறவாக சகோதரத்துவத்தோடு வாழ்ந்து வரும் தருணத்தில் இந்த ஹிந்துத்துவாக்களின் முஸ்லிம் விரோத கோஷங்களினால் கொதித்தெழுந்த முஸ்லிம்கள் (அனைத்து இயக்கங்கள் உள்பட)
அமைதியான முறையில் ஜனநாயக வழிமுறைக்கு உட்பட்டு எந்த தவறான கோசங்களையும் எழுப்பாமல் லட்ச்சுமாங்குடி முக்கத்தில் சாலைமறியல் செய்து கலவர நோக்கத்தோடும் தவறான கோசங்கள் எழுப்பியதை கண்டித்தும் அதற்கு அனுமதி வழங்கி துணைபோன கூத்தாநல்லூர் சரக காவல்துறையையும் கண்டித்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

இதில் ஏதோ ஒட்டுமொத்த ஹிந்துக்களுக்கும் எதிராக முஸ்லிம்கள் களத்தில் இறங்கிவிட்டனர் அந்த சாலை மறியலின் போது ஹிந்துக்களுக்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டதாகவும் அதை தமுமுகவினரும், தவ்ஹீத் ஜமாத்தினரும் அரங்கேற்றியதாகவும் பொய் பிரச்சாரம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக அப்பாவி ஹிந்துக்களை ஒன்று திரட்டுகின்றனர். இந்த தருணத்தில் கூத்தாநல்லூர் முஸ்லிம்கள் அமைதிகாத்து அந்த பிரச்சனைகளை சட்டரீதியில் கொண்டு செல்வது இன்றைய தலையாய கடமையாக இருகின்றது

முஸ்லிம்களுக்கு எதிராக ஹிந்துத்துவாக்களின் பிரச்சார நோட்டீஸ்.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு நாளில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துக...! தமிழக அரசுக்கு தமுமுக கடிதம்



பாப்ரி மஸ்ஜித் வழக்கின் தீர்ப்பு வெளியாகும் தினத்தில் தமிழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தமிழக உள்துறைச் செயலாளர், தமிழக காவல்துறைத் தலைவர் (டி.ஜி.பி), சென்னை மாநகர காவல் ஆணையாளர் (போலீஸ் கமிஷனர்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தில், ‘‘தீர்ப்பு வெளியாகும் நாளிலோ அதை ஒட்டியோ மதவெறியர்களும், சமூக விரோதிகளும், பள்ளிவாசல்கள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள் உள்ளிட்ட முஸ்லிம் நிறுவனங்களையும், முஸ்லிம்களையும் தாக்கலாம் என அஞ்சுகிறோம். எனவே காவல்துறை, அனைத்து வழிபாட்டுத் தலங்கள், நிறுவனங்கள் மற்றும் மக்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தமுமுக பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு: அமைதி காக்க வேண்டும்...! தமுமுக தலைமை வேண்டுகோள்

பாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு செப்டம்பர் 24 அன்று வெளிவரும் நிலையில் தீர்ப்பு எவ்வாறு இருந்தாலும் அமைதி காக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப் பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இந்தியா முழுக்க எல்லா மொழி நாளிதழ்களிலும் விளம்பரமாகவும் வெளியிடப்பட்டுள்ளது.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித், ராமர் கோயிலை இடித்து கட்டப் பட்டதா? இல்லையா? என்பது குறித்த வழக்கில்தான் தீர்ப்பு வெளிவரவிருக்கிறது.இடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்குகள் தனி என்பது கவனிக்கப்பட வேண்டியது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இருக்கும் அனைத்து ஜமாத்துகள், சேவை அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மதரஸாக்கள், வட்டார மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு தமுமுக சார்பில் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர் கள் எழுதியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது...

பேரன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

இக்கடிதம் தங்களை பூரண சுகத்தோடும், இஸ்லாமிய சிந்தனை களோடும் சந்திக்கட்டுமாக.!

1992 டிசம்பர் 6&ல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதும், 1995 முதல் தமுமுக தொடர்ந்து டிசம்பர் 6-ல் போராட்டங்களை நடத்தி வருவதும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து பாபர் மஸ்ஜித் விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியதும் நீங்கள் அறிந்த செய்திகளாகும்.1948 முதல் நடந்துவரும் பாப்ரி மஸ்ஜித் வழக்கில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் செப்.24, 2010 அன்று தீர்ப்பு வெளிவர இருக்கிறது.

தீர்ப்பு நியாயமான முறையில் நமக்கு கிடைக்க அன்றாடத் தொழுகைகளிலும், ஜும்ஆ தொழுகைகளிலும் பிரார்த்திக்க வேண்டுகிறோம்.தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் அதை கொண்டாட் டமாகக் கருதாமலும், பாதகமாக வந்தால் எதிர்நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் இருக்கவேண்டும் என்பதை அனைத்து பள்ளிகளிலும் ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு அறிவிப்பு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.ஒருவேளை தீர்ப்பு தேதி தள்ளிப் போனாலும், இதே அறிவுரையை அப்போதும் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

பொது அமைதி, சட்டம்&-ஒழுங்கு ஆகியவற்றை பேணிக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு என்பதை உணர்ந்து, அதற்காக இறைவனிடம் பிரார்த் திப்போமாக.தமுமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் முஸ்-லிம்கள் வாழும் பகுதிகளிலும், முஸ்லிம்களின் சொத்துக்கள் இருக்கும் பகுதிகளிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யு மாறு காவல்துறையிடம் கோரிக் கை வைத்துள்ளோம்.

மேற்கண்டவாறு தமுமுக தலைவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

திங்கள், 20 செப்டம்பர், 2010


மதுக்கூரில் காவி வெறியர்களின் அட்டகாசம்

இன்று விநாயகர் ஊர்வலம் மதுக்கூர் சிவக்கொல்லையில் 3 :30 மணிக்கு தொடங்கி 6 :30 மணிக்கு முடிந்தது.வழியெங்கும் வெறிக் கூச்சலுடண் வந்த கூட்டத்தினர் மதுக்கூரை கடக்கும் போது 6 கடைகளையும் 10 க்கும் மேற்பட்ட வீடுகளையும் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளார்கள் இதனால் நிலைமை பதட்டமானது மிகமிக குறைவான எண்ணிக்கையில் இருந்த காவல்துறையினரால் நிலைமையை கட்டுப் படுத்த முடியவில்லை இதன் பதிலடியாக ஊர்வலத்தில் ஒரு சிலர் கல்வீசியிருக்கிரார்கள் .எப்போதும் 50 க்கும் குறைவான எண்ணிக்கைகள் செல்லக்கூடிய ஊர்வலத்தில் 100 மேற்பட்டோர் கலந்துக் கொண்டார்கள்,முத்துப்பேட்டையில் தங்களது எண்ணத்தைசெயலாற்ற முடியாதவர்கள் மதுக்கூரில் நிறைவேற்றி உள்ளார்கள்.இந்நிலையில் தமுமுக ,மமக மற்றும் PFI நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது ஊர்வலத்தில் முதலில் வன்முறை துவக்கியவர்களை கைது செய்யவில்லை ,நேற்று மதுக்கூர் காவல்துறை ஆய்வாளர் தமுமுக நிர்வாகிகளை சந்தித்து தங்களுக்கு ஒத்துழைப்பு தர கேட்டுக்கொண்டார் ,அதன் அடிப்படையில் அமைதிஏற்படுத்திக் கொண்டிருந்த தமுமுக மமக நிர்வாகிகளை காவல்துறை கைது செய்தது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியது, உடனடியாக மமக மாவட்டச் செயலாளர் கலந்தர் அவர்கள் மமக மாநில துணைச் செயலாளர் தமிம் அன்சாரி அவர்களை தொடர்புக் கொண்டு விபரங்களைக் கூறினார் ,உடனடியாக தமிம் அன்சாரி அவர்கள் தஞ்சை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை தொடர்புக் கொண்டு கைது செய்யப்பட்ட தமுமுக மமக மற்றும் இதர அப்பாவிகளையும் உடனே விடுவிக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார்.மதுக்கூரில் இதர சட்டநடவடிக்கைகளை மேற்க்கொள்ள சகோதரரர் ராவத்தர்ஷா தலைமையில் ஒருக் குழுவினர் தீவிரமாக இயங்கிக் கொண்டு இருக்கிறார்கள், தொடர்ந்து தமுமுக தலைமை மதுக்கூர் நிலைமையை கவனத்துடன் அணுகிக் கொண்டிருக்கிறார்கள்.

சனி, 11 செப்டம்பர், 2010

சென்னையில் பெருநாள் தொழுகை-தமுமுக தலைவர் ஈகைத்திருநாள் உரை.

உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரே தினத்தில் (வெள்ளிக்கிழமை செப்டம்பர் 10) பெருநாள் கொண்டாடப்படுவது பெரும் மகிழ்ச்சியை மக்களுக்கு ஏற்படுத்தியது. இந்தியாவில் தமிழ்நாடு, புதுவை, கேரளா, மத்திய பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் நேற்று பெருநாள் கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் தூத்துக்குடி, விருத்தாசலம், திண்டுக்கல் மற்றும் பள்ளிக்கரணை ஆகிய ஊர்களில் வியாழன் மாலை பிறை தென்பட்டது. இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை ஈகைப் பெருநாள் என்று தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்தார்.

இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் ஈகைத் திருநாள் (செப்டம்பர் 10) அன்று பிராட்வே டான் பாஸ்கோ விளையாட்டு திடலில் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பெருநாள் பேரூரை ஆற்றினார். அவர் தமது உரையில் முஸ்லிம்களுக்கிடையே ஒற்றுமை இருப்பதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார்.

(பிராட்வேயில் ஈகைத்திருநாள் தொழுகையில் பங்குக் கொண்ட பெண்களின் ஒரு பகுதி)

ஈகைத் தொழுகைக்கு பிறகு வாழ்த்துகளை பரிமாறிக் கொள்ளும் தமுமுக தலைவரும் பொதுச் செயலாளரும் )
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி உட்பட தமுமுக நிர்வாகிகள் ஏரளாமான ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் பங்குக் கொண்டார்கள். மழையின் காரணமாக திடல் நனைந்திருந்ததால் அங்கேயே மாற்று ஏற்பாடு செய்து தொழுகை நடத்தப்பட்டது.

வியாழன், 9 செப்டம்பர், 2010

சகோதரரர்கள் அனைவருக்கும் முத்துப்பேட்டை தமுமுக வலைத்தளம் சார்பாக இனிய நோன்பு பெருநாள் நல வாழ்த்துக்கள்.


அன்புச்சகோதரர்களே புனித மிகு 'ரமலான்' மாதத்தை கடந்து 'ஷவ்வால்’ மதத்தின் முதல் நாளில் பெருநாள் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களுக்கு எங்களின் நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்... இந் நன்நாளில் முஸ்லிம்கள் அணைவரும் ஒருவருக்கொருவர் சகோதரத்துவத்தோடும்,பாசப்பிணைப்போடும்,வாழ் வாங்கு வாழ்வதற்கும். காவிய பயங்கரவாதிகளாலும், ஆட்சி அதிகாரம் படைத்த அதிகார வர்க்கங்களாலும் நம் சமுதாயத்திற்கு எதிராய் செய்யப்படும் சூழ்ச்சிகளை தவிடுபொடியாக்கி முஸ்லிம் சமுதாயத்தை இன்னும் வளம்பெற செய்ய எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் பிராத்திக்கிறோம்.
அன்புடன் - முத்துப்பேட்டை முகைதீன்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

அமீரகத்தில் தமீமுன் அன்சாரியுடன் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக இந்த புனித மிகு ரமலான் மாதத்தில் சுற்றுபயணமாக தாயகத்தில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் வருகை தந்திருக்கும் தமுமுகவின் முன்னாள் மாநில செயலாளர், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர், மக்கள் உரிமையின் ஆசிரியர் சகோதரர்.எம்.தமீமுன் அன்சாரி. அவர்களை முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் - 03-09-2010 - வெள்ளிக்கிழமை அன்று சந்தித்து தமிழக செயல்பாடுகள் மற்றும் முத்துப்பேட்டை தமுமுகவின் செயல்பாடுகள் குறித்தும் விவாதம் நடத்தினர்.

அமீரக செயலாளர் சகோதரர் யாசின் நூருல்லாஹ் மற்றும் துணை செயலாளர் சகோதரர் டாக்டர்.அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அமீரக வாழ் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததோடு நமது ஊரில் உள்ள நமது தமுமுக சகோதரர்களை உற்ச்சாகப்படுத்தி இன்னும் கள(கழக)ப்பனிகளை அதிகப்படுத்துவது அதற்கான தேவைகளை நம்மால் முடிந்தளவு உதவுவது அவர்களின் பணிகளுக்கு பக்கபலமாக இருப்பது போன்ற முடிவுகளை தாங்கியவர்களாக தங்கள் பகுதியை நோக்கி சென்றனர். எல்லா புகழும் இறைவனுக்கே!

இதில் கலந்து கொண்ட சகோதரர்களின் விவரம் :-

@ தம்பிமா (எ) அஹமது ஜலால் - – 00971-50-8642798 -

@ ஷாகுல் ஹமீது – 00971-50-3958652 -

@ உமர் நத்தர்சா – 00971-55-2946254 -

@ முகம்மது ரியாசுதீன் – 00971-55-6332638 -

@ ஷாஜஹான் – 00971-55-8284963 -

@ முகம்மது ஆரிப் – 00971-50-8561085 -

@ முகம்மது பிலாலுதீன் – 00971-50-8786513 -

@ முகைதீன் பிச்சை – 00971-55-7542001 -

தங்களது சொந்த பணிகள் காரணமாக வரமுடியாத நமது முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்கள் நமது முடிவை அங்கீகரித்து கொண்டார்கள் அவர்களும் நம்மோடு சேர்ந்து முத்துப்பேட்டை தமுமுகவிற்கு பக்கபலாமாக இருப்பதாகவும் நம்மிடம் கூறினார்கள் அவர்களின் விவரம்:-

@ அப்துல் மாலிக் (சியா) ) – 00971-50-3956636 -

@ அஜீஸ் ரஹ்மான் – 00971-50-5717076 -

@ ரஹ்ப் – 00971-50-7765912 -

@ மைதீன்

@ அஹமது கபீர் – 00971-50-1795288 -

@ வாவா ராவுத்தர் – 00971-50-5254499 -

@ இல்யாஸ் பாய் – 00971-50-5494737 -

@ ரஷ்னுதீன்

@ தாயக சென்றிருக்கும் பக்கர்

மற்றும் தமுமுகவின் ஆதரவாளர்கள்.





செய்தி தொகுப்பு முத்துப்பேட்டை முகைதீன்.

நோன்பு கஞ்சி சண்டையில் மூவரை சுட்டுக்கொன்ற த.த.ஜ வினர்!

நமது திருவாரூர் மாவட்டம் திருவிடச்சேரி என்ற ஊரில் நேற்று .5.10.2010 நோன்பு கஞ்சி தொடர்பாக த.த.ஜ.வினருக்கும் சுன்னத் ஜமாஅத் பள்ளியை செர்ந்த்வர்களுக்க்ம் ஏற்பட்ட மோதலில் த.த.ஜ.வை சேர்ந்த ஒருவர் துப்பாக்கியை எடுத்து சுட்டதில் மூன்று பேர் உயிர் இழந்தனர்..பொறுமையின் மாதமான ரமலான் மாதத்தில் இப்படி ஒரு துயர சம்பவம் நடை பெற்றது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.காவல் துறை தடை உத்தரவு அமலில் உள்ளதாகவும் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நன்றி - செங்கிஸ்கான் ஆன்லைன்.