திங்கள், 23 நவம்பர், 2009

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் கீழக்கு மாவட்ட செயல் விரர்கள் கூட்டம்‏
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் இராமநாதபுரம் கீழக்கு மாவட்ட செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் தக்குவா பளளி நடந்தது. இக்கூட்டத்திற்கு தலைமை கழகப் பேச்சாளர் கோவை ஜாகிர் அவர்கள் சிறப்புறை ஆற்றினார்கள்.
மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான். த.மு.மு.க மாவட்ட தலைவர் சாதிக்பாட்சா, செயலாளர் தஸ்பிக்அலி, பொருளாலர் சித்திக், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
டிசம்பர் 6 போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.டிசம்பர் 6 போராட்டத்தில் அதிகமான மக்களை பங்குகொள்ளச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சனி, 21 நவம்பர், 2009

நெல்லை மாவட்டச் செயற்குழு


நெல்லை மாவட்டம் பத்தமடையில் 15/11/2009 அன்று மாலையில் மாவட்டச் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் கே. காதர் மைதீன் தலைமை தாங்கினார்.மாநில துணைப் செயலாளர் கோவை செய்யது சிறப்புரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கழகத்தின் வளர்ச்சி குறித்தும், டிசம்பர் 6 போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. டிசம்பர் 6 போராட்டத்தில் 5000க்கும் அதிகமான மக்களை பங்குகொள்ளச் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

புதன், 18 நவம்பர், 2009

முதல்வரின் வேதனையும்! முஸ்லிம்களின் சோதனையும்!!


முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக மற்றும் கேரளாவுக்கு இடையே நடந்துவரும் பிரச்சினை திடீரென விசுவ ரூபம் எடுத்துள்ளது. கேரளா உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுவதாகக் கூறி வேதனையோடு தமிழக முதல்வர் பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் 'முல்லைப் பெரியாறு பிரச்சனை தொடர்பாக 11 ஆண்டுகள் ஆகி தமிழகத்திற்கு நீதி கிடைக்குமென எதிர்பார்த்திருந்தவேளையில் அதற்கு மாறாக மீண்டும் ஒரு விசாரணை, அதை ஐந்து நீதிபதிகள் விசாரிப்பர் என்ற முடிவு இன்னும் எத்தனை ஆண்டுகளோ என்று வருத்தப்படாமல் இருக்க முடியவில்லை. தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்ற பழமொழி பலித்துவிடாமல் இருக்க யாரிடம் முறையிடுவது என்றே தெரியவில்லை என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நீதி, மறுக்கப்பட்ட நீதி என்று கண்ணீர் வடிக்கும் கலைஞர், 11 ஆண்டுகளாக முஸ்லிம் விசாரணை சிறைவாசிகள் வடித்துக் கொண்டிருக்கும் கண்ணீரை கவனிக்கத் தவறிவிட்டார். கடந்த 11 ஆண்டுகளாக எவ்வித ஆதாரமும் இல்லாமல் குணங்குடி ஹனிபா, அப்துல் ரஹீம் போன்றவர்கள் விசாரணை சிறைவாசிகளாகவே சிறையில் வாடி வருகிறார்களே, இது அநீதி என்று நீதிமன்றம் சென் றால், அங்கும் பிணை வழங்க தாமதிக்கப்பட்டு வருகிறதே, இது எந்தவகையான நீதி? சிறையாளிகளுக்கு பிணை வழங்க அரசுத் தரப் பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறதே, இது எந்தவகை நீதி? பதில் சொல்ல முடியுமா முதல்வர் அவர்களே...!

ஏழு வருடங்கள் முடித்த ஆயுள் சிறைத் தண்டனை பெற்ற கைதி கள் கடந்த சில வருடங்களாக அண்ணா பிறந்த நாளில் விடுதலை செய்யப்பட்டு வந்தபோது, அதே போன்று 10 வருடங்கள் சிறைத் தண்டனையை முடித்துவிட்ட முஸ்லிம் ஆயுள் சிறைத் தண்டனைக் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் முழுவதும் முஸ்லிம் சமுதாய அமைப்புகளாலும், மனித உரிமை ஆர்வலர்களாலும் எழுப்பப்பட்ட போது இந்த வருடம் (2009) விடுதலையாக ஒருசில வாரங்களே எஞ்சியிருந்த தண்டனையை முழுவதுமாக அனுபவித்து முடித்துவிட்ட முஸ்லிம் சிறைக் கைதிகள் ஒருசில பேரை மட்டும் விடுவித்தீர்களே... இது எந்த வகை நீதி முதல்வர் அவர்களே...?

இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக எங்கு சென்று முறையிடுவது (இறைவனைத் தவிர) என்று தெரியாமல் உள்ளே அடைபட்டுக்கிடக்கும் சிறைவாசிகளும், அவர்களின் குடும் பங்களும், முஸ்லிம் சமுதாயமும் தவித்துக் கொண்டிருக்கிறார் கள். முல்லைப் பெரியாறுக்கு வேதனைப்படும் முதல்வர் முஸ்லிம்களின் வேதனையையும் கவனத்தில் கொள்வாரா?

தாமதிக்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பதை உணராதவரல்ல தமிழக முதல்வர். எனவே அந்த முதுமொழி பலித்துவிடாமல் இருக்க முதல்வர் உடனே முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்கு ஆவண செய்ய வேண்டும்.

சேலத்தில் அடக்கஸ்தல சுற்றுச்சுவர் கட்டித்தரக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம்


சேலத்தில் பிரபாத் தியேட்டர் எதிரில் உள்ள கபரஸ்தான் எனப்படும் முஸ்லிம்களின் அடக்கஸ்தலத்தின் சுற்றுச்சுவர் மிகவும் பழுதடைந்தும், உடைந்தும் உள்ளதால் அங்கு சமூக விரோதச் செயல்கள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அடக்கஸ்தலத்தின் காம்பவுண்ட் சுவரை புதுப்பித்து கட்டித் தரக்கோரி கடந்த ஒன்றரை வருடமாக தமுமுக போராடி வருகிறது.
சேலம் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரை தமுமுக நிர்வாகிகள் நேரில் சந்தித்தும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். ஆயினும் சேலம் மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து மெத்தனப் போக்கை கையாண்டு வந்தனர். இதையடுத்து அடக்கஸ்தலத்தின் முன்பு 30.10.2009 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தமுமுக அறிவித்தது. இந்நிலையில் அடக்கஸ்தலம் முன்பு போராட்டம் நடத்த சேலம் மாநகர காவல்துறை அனுமதி மறுத்தது. எனினும் தமுமுகவினர் திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.
30.10.2009 ஜும்ஆ தொழுகைக்குப் பின்பு சரியாக 3 மணியளவில் மாவட்டச் செயலாளர் ஏ. சமியுல்லா தலைமையில் தமுமுக கிளை நிர்வாகிகளும், தொண்டர்களும் அங்கு குழுமினர். மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது கண்டன உரையாற்றினார். மாநில துணைச் செயலாளர் தருமபுரி சாதிக் பாஷா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். மாவட்ட துணைத் தலைவர் சபீர் அஹமத், பொருளாளர் இப்ராஹிம், துணைச் செயலாளர் சுல்தான் ஆகியோர் ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் சுமார் 250 பேர் கலந்து கொண்டனர்.
தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டர் அனைவரும் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களிடையே மாநில துணைச் செயலாளர் கோவை செய்யது தர்பியா வகுப்பெடுத்தார். முஸ்லிம் என்றால் எப்படி இருக்க வேண்டும், தொழுதவனின் நிலை, தொழுகையின் சிறப்புக்கள் மற்றும் தமுமுக செய்துவரும் சமுதாயப் பணிகள் ஆகியவை பற்றி அவர் உரையாற்றினார்.
மாலை 7 மணியளவில் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.தமுமுக போராட்டத்தின் காரணமாக மேற்படி அடக்கஸ்தலத்தின் சுற்றுச் சுவர் பணிகளுக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது என்றும், விரைவில் பணிகள் தொடரக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சனி, 14 நவம்பர், 2009

வந்தே மாதாரம் பாடலை தமிழக அரசின் பாடப்புத்தகங்களி­ருந்து நீக்குக தமுமுக மாணவரணி கோரிக்கை

இந்திய நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக ஜன கன மன என்ற வங்க மொழிப் பாடலும், அல்லாமா இக்பால் இயற்றிய சாரே ஜஹான்úஸ அச்சா என்ற உருது மொழிப்பாடலும் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில் முஸ்­லிம்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஆனந்த மடம் என்ற நாவ­ல் வரும் 'வந்தே மாதரம்' என்ற பாடல் காங்கிரஸில் அன்றைக்கு இருந்த இந்து மகா சபா போன்ற சங்பரிவார அமைப்புகளின் ஆதரவாளர்களால் நயவஞ்சகமாக விடுதலை போரில் திணிக்கப்பட்டது.

1937ல் காங்கிரஸால் அமைக்கப்பட்ட முதல் இடைக்கால அரசின் போது தமிழகத்தில் (சென்னை மாகாணம்) அமைந்த ராஜாஜி தலைமையிலான முதல் அரசின் சட்டசபை கூட்டத் தொடரில் வந்தே மாதரம் பாடலை பாடி சபை நடவடிக்கைகளை துவங்கியதை அன்றைய முஸ்­லிம் லீக் உட்பட முஸ்­லிம் அமைப்புகளும், பெரியார் தலைமையிலான நீதிக்கட்சியும் கடுமையாக எதிர்த்ததின் விளைவாக சட்ட சபையில் அப்பாடல் பாடுவது நிறுத்தப்பட்டது.

விடுதலைப் போராட்ட காலத்தி­ருந்தே முஸ்­லிம்களால் தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டு வரும் தாய் நாட்டை ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக உருவகப்படுத்தும் வந்தே மாதரம் பாடலை முஸ்­லிம்கள் பாட மறுப்பது அரசியல் சாசன சட்டம் அளித்துள்ள உரிமை. உச்ச நீதிமன்றமும் வந்தே மாதரம் பாடலை பாடுவது கட்டாயமல்ல என தீர்ப்பு வழங்கியுள்ளது

இந்நிலையில் மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மத வழிப்பாட்டு பாடலை சிறுபான்மை மதத்தினர் மீது திணிக்க நினைப்பது அப்பட்டமான மதவெறி சூழ்ச்சியாகும். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலை தமிழுணர்வாளர்கள் மிகுந்த தமிழ்நாட்டில் தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தமிழ்ப்பாட புத்தகங்களில் அச்சிட்டு வருவது வேதனைக்குரியது.

தமிழக அரசின் பாட புத்தகங்களில் தேச பக்தி பாடல் என்று தலைப்பிட்டு வெளியிடப்படும் வந்தே மாதரம் பாடலை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமுமுக மாணவரணி கோருகிறது. வரக்கூடிய கல்வி ஆண்டில் இப்பாடல் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டால் மாணவர்களை திரட்டி போராட்டங்கள் நடத்த மாணவரணி தயங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறது.

செவ்வாய், 10 நவம்பர், 2009

நன்றி - தினமனி

உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்ததமுமுக நிர்வாக குழுவில் முடிவு.

திருவாரூர், உலமாக்கள் நல வாரியத்தில் உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்முடிவுசெய்துள்ளது.

திருவாரூரில் நடைபெற்ற தமுமுக மாவட்ட நிர்வாக்குழு மாநிலத் தலைவர் டாக்டர் ஜவாஹிருல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

மேலும் தமுமுக கோரிக்கைக்கு இணங்க தமிழக அரசு அறிவித்துள்ளஉலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் திருவாரூர்மாவட்டத்தில் உள்ள இமாம்கள்,மோதினார்கள் மட்டுமின்றி அணைத்து வக்ஃபுகளிலும் பணியாற்றும் பணியாளர்கள்,இரவு காவலர்கள் உள்ளிட்டோரை நல வாரியத்தில் உறுப்பினர்களாகசேர்ப்பதற்குரிய அணைத்து பணிகளிலும் தமுமுக வினர் ஈடுபடவேண்டும்.

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சுகாதார சீர்கேட்டுடன்செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் சுற்றுப்பகுதிதிறந்தவெளி கழிப்பிடம் போன்று சுகாதாரமற்ற நிலையில் இருப்பதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள்பரவும் அபாயம் உள்ளது. எனவே மருத்துவமனை நிர்வாகம் இந்தசுகாதார சீர்கேட்டை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் நாச்சிக்குளம் எம்.தாஜூதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.குத்துபுதீன் முன்னிலைவகித்தார். கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

திங்கள், 9 நவம்பர், 2009

பா.ஜ.விலிருந்து விலகல் : காங்.கில் சேர்ந்தார் திருநாவுக்கரசர்முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய ராஜ்யசபை உறுப்பினருமான திருநாவுக்கரசர்,இன்று பா.ஜனதாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.


அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளரான குலாம் நபி ஆசாத் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்தார்.


இத்தகவலை பின்னர் குலாம் நபி ஆசாத் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது அறிவித்தார்.


ஏற்கனவே அதிமுகவிலிருந்து விலகி,தனிக்கட்சி தொடங்கி பின்னர் அதைக்கலைத்து விட்டு பா.ஜனதாவில் இணைந்தவர் திருநாவுக்கரசர் என்பது குறிப்பிடத்தக்கது.

--வெப்துனியா--

சனி, 7 நவம்பர், 2009

ஹாஜிகளே !உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கயமாக நிறைவேற்றுங்கள்

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் ஹஜ் பயணத்திற்காகத் தயாராகி வருகிறார்கள்.

பல்வேறு தயாரிப்புகள் – பணம், உடை, உணவுப் பொருட்கள் எனப் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

எப்படி தவாஃப் செய்ய வேண்டும், எவ்வாறு இஹ்ராம் உடை அணிவது, மினாவிலும் அரஃபாவிலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன.
ஆனால் – மிக முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் ஹஜ் பயணம் மேற் கொள்பவர்கள் மறந்து விடுகின்றனர்.

அது – உடல்நலம்!

ஹஜ்ஜின் போது ஹாஜிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகும் ஒரு விஷயம் ‘உடல்நலம்’ குறித்ததாகும்.

ஏனெனில் – ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களில் 60 விழுக்காட்டிற்கும் மேற் பட்டவர்கள் 60 வயதிற்கு மேலுள்ள முதியவர்கள்தாம். பொதுவாகவே வயது முதிர்ந்தவர்களுக்கு ஏற்படும் பல்வேறு விதமான நோய்கள் ‘ஹஜ்’ செய்வதில் சிக்கல்களை ஏற்படுத்துகின்றன.
இதனைத் தவிர்த்து ‘ஆரோக்கியமான ஹஜ்’ ஜினை மேற்கொள்ள இதோ சில முக்கியமான வழிகாட்டுதல்கள்.

1.ஹஜ் பயணத்திற்கு முன் நடைப்பயிற்சி அவசியம்!
எப்போது ஹஜ்ஜிற்காக ‘விண்ணப்பிக்கிறார்களோ’ அந்நாள் முதல் ஹாஜிகள் செய்ய வேண்டிய முதன்மையான பணி என்னவெனில் – நடைப்பயிற்சிதான்.
நாள்தோறும் குறைந்தது 5 முதல் 7 கி.மீ வரை நடப்பது சாலச் சிறந்தது. அதுவும் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே இப் பயிற்சியைத் தொடங்க வேண்டும். ஏனெனில், ஹஜ்ஜின் போது அதிகம் நடக்க வேண்டும். மினாவில் ஷைத்தான் மீது கல்லெறியக் கூடாரத்தி லிருந்து வெகுதூரம் நடக்க வேண்டி வரும். அதே போல் அரஃபா முதல் முஸ்தலிஃபா வரை ஹாஜிகள் நடக்கும் சூழ்நிலை ஏற்படும். (இதன் தொலைவு 8 கி.மீ) எல்லாவற்றிற்கும் மேலாக ஹரம் ஷரீஃபில் அன்றாட தவாஃப் செய்ய எண்ணும் ஹாஜிகளுக்கு நடைப்பயிற்சி மிக மிக முக்கியம். கூட்ட மிகுதியான நாட்களில் ஒரு தவாஃப் முடிய நடக்கும் தூரம் பல கி.மீ வரை நீளும்.
ஆனால் – ஒவ்வோர் ஆண்டும் ஹாஜிகள் மிகவும் கஷ்டப்படுவது ‘நடக்கும்’ விஷயத்தில்தான்! காரணம், முதுமையான வயதில் ஹஜ்ஜை மேற் கொள்வது. அதிக வசதி வாய்ப்பு உள்ள முஸ்லிம்கள் நடப்பதே இல்லை என்றே கூறலாம். எனவே நடைப்பயிற்சி மிக மிக முக்கியம்.

2.ஹாஜிகளே! உங்களுடைய கால்களை பத்திரமாய் பார்த்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் ஹஜ்ஜின் போது கால்களுக்குத்தான் அதிக வேலை இருக்கும். எனவே காலில் எந்தவிதமான காயமோ புண்ணோ ஏற்படாமல் கவனித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக புதிதாக செருப்பு வாங்கி அணியாதீர்கள். இப்போது நீங்கள் பயன்படுத்தும் சாதாரணமாக காலணிகளில் இரண்டு ஜோடியினை நீங்கள் ஹஜ்ஜின் போது பயன் படுத்துங்கள். புதுச் செருப்புகள் ஏற்படுத்தும் பாதிப்புகளால் நீங்கள் நடப்பதில் சிக்கல் ஏற்படும்.

3.ஹாஜிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான இன்னோரு உண்மை, மக்கா மாநகரம் கடல் மட்டத்திலிருந்து பல மீட்டர் உயரத்திலிருக்கும் ஒரு பகுதி ஆகும். எனவே அங்கு காற்ற ழுத்தம் (ஆக்சிஜன்) குறைவாகும். எனவே நீண்ட தொலைவு நடப்பது என்பது நம்மூரில் நடப்பது போன்று எளிதன்று! ஹஜ்ஜில் ‘மெதுவாக’ நடக்க வேண்டும். வேகமாக நடப்பதால் மூச்சுப் பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.

4.பல ஹஜ் குழுக்கள் மக்காவை ஹஜ்ஜிற்குப் பல நாட்களுக்கு முன்பே சென்றடைந்து விடுகின்றன. ஆர்வ மிகுதியால் ஹாஜிகள் தினமும் அதிகமதிகம் தவாஃப் செய்கின்றனர். உம்ராவும் செய்கின்றனர். தவாஃப் செய்வது முக்கியமானதுதான்! எனினும் ஹஜ்ஜுக்குரிய முக்கியமான ஐந்து நாட்களில் (துல்ஹஜ் 8 முதல் 13 வரை) செய்யப்பட வேண்டிய கிரியைகளுக்கு உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம். ஆனால் ஹாஜிகள் பலர் இந்நாட்களில் சோர்வு அடைந்து விடுகின்றனர். இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

5.ஆண்களைப் பொறுத்தவரை ‘இஹ்ராம்’ உடையில் நடப்பதில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே உள்ளாடை எதுவும் அணியாமல் வேட்டி மட்டுமே அணிந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது உதவியாக இருக்கும்.

6.பெண்களில் சிலர் மாதவிடாயைத் தாமதப்படுத்துவதற்காக சில ஹார் மோன் மருந்துகளை ஒரு மாதகாலம் சாப்பிடுகின்றனர். இது தவிர்க்கப் பட வேண்டும். அதிகபட்சம் 5 நாட்கள் இம்மாத்திரைகளைப் பயன் படுத்தலாம். அதுவும் பெண் மருத்துவரின் ஆலோசனையின்படி தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் தவிர இம்மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலத்திற்குக் கேடு.

நோயாளிகளும் ஹஜ்ஜும்

ஹாஜிகள் பலர் உயர் ரத்த அழுத்தம் (BP) நீரழிவு முதலான நோயுள் ளவர்கள். இவர்கள் தங்களுடைய மருந்துகளை முறையாக உட்கொள் வதோடு மட்டுமன்றி உணவிலும் கவனம் செலுத்த வேண்டும். ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செய்பவர்களுக்கு உணவைத் தாங்களே தயாரிப் பதால் உப்பு, சர்க்கரை, விஷயத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் தனியார் குழுக்களில் சர்க்கரை நோயாளிகளுக்குத் தேவையான உணவைத் தயாரிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இன்று பல தனியார் குழுக்கள் ‘சிறப்பு உணவினை’ இது போன்ற நோயாளி களுக்குத் தயாரிக்கின்றனர் என்பது மகிழ்ச்சியான செய்தி.

ஆனால் ஹாஜிகள் உணவு விஷயத்தில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.
சிறுநீர் தொந்தரவுள்ளவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். ஹரமில் கழிப்பறைக்குச் சென்று வரவேண்டுமெனில் அது மிகச் சிரம மானதாகும். எனவே ஒவ்வொரு தொழுகைக்கு முன்னும் அவர்கள் தங்களுடைய அறைகளிலே சிறிநீர் கழித்து ஒளு செய்து விட்டு பள்ளிக்கு வருவது சிறந்ததாகும்.

முக்கியமான ஒரு நோய் என்னவெனில் ‘சளி தொந்தரவு’ சுமார் 35 லட்சம் மக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் ‘சளி தொந்தரவு; ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும். ஹஜ் காலங்களில் (குறிப்பாக ஹஜ்ஜிற்குப் பிந்தைய காலங்களில்) பள்ளிவாயில்களில் இருமல் சத்தம் கேட்டுக் கொண்டேயிருக்கும். இதனை Community acquired Pneumonia என்று அழைப்பார்கள். அதாவது ஒரு மனிதரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் நுரையீரல் சளி நோய். இதற்கு மருந்துகள் பல இருப்பினும் மிகச் சிறந்த மருந்து ‘முன்னெச்சரிக்கை’ (Prevention) தான். முகத்தில் ‘முகமூடி’ அணிந்து கொள்வது இந்நோய் வராமல் பாதுகாக்கும். குறிப்பாக ஏ.சி. அறைகளிலும், ஏ.சி. பள்ளிவாயில்களிலும் இது மிக மிக வேகமாகப் பரவும். எனவே ஹாஜிகளில் எவருக்கேனும் இருமல், சளி இருந்தால் உடனடியாக மருந்து சாப்பிடுவது மட்டுமன்றி அவர்கள் தங்கியுள்ள அறைகளில் ஏ.சி.யை அணைத்து விட்டு ஜன்னல்களைத் திறந்து வைப்பது அவசியம்.

பல்வேறு விதமான நுரையீரல் சளி நோய்கள் இன்று உலகெங்கும் பரவி வருகின்றன. பறவைக் காய்ச்சல் (Avian Flu) பன்றிக் காய்ச்சல் (Swine Flu) போன்ற வைரஸ் நோய்களால் ஹாஜிகள் யாரும் பயப்பட வேண்டாம். முகமூடி அணியுங்கள். அல்லாஹ் போதுமானவன்.

7.இறுதியாக…
இந்தியாவிலிருந்து வரும் ஹாஜிகளுக்காக (அரசு மூலமும், தனியார் குழுக்கள் மூலமும்) மருத்துவக் குழு (Indian Medical Mission) மக்காவிலும், மதீனாவிலும் செயல்படும். நீங்கள் தங்கியுள்ள பகுதிகளில் மருத்துவ மையமும், மருத்துவமனையும் அமைந்திருக்கும்.

இந்திய மருத்துவர்களால் நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும் இல்லை. எனவே கவலைப்படாமல் இம்மையங்களை அணுகுங்கள்! தனியார் குழுக்களில் பல மருத்துவர்களை அழைத்து வருவதால் பிரச்சினை இல்லை. இதைத் தவிர சவூதி அரசினால் நடத்தப்படும் மருத்துவமனைகளும் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைகளை அளிக் கின்றன. எனவே ஹாஜிகள் கவலைப்படத் தேவையில்லை.

ஆக, ஹஜ்ஜிற்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களே! உங்களுடைய ஹஜ் ஆரோக்கியமாக அமைய வேண்டுமெனில் நீங்கள் முன்னெச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும். உங்கள் பயணத்தில் நீங்கள் சில முக்கிய மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.

1.வலி நிவாரணக் களிம்புகள் (Ointment)

2.முகமூடிகள் (Face Mask)

3.சாதாரண காய்ச்சலுக்குண்டான மாத்திரைகள்

4.நீங்கள் ரத்த அழுத்தம் அல்லது நீரழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவரானால் அவற்றுக்குரிய மருந்துகளை உங்கள் பயண காலத்திற்குக் கணக்கிட்டு மொத்தமாக வாங்கி எடுத்துச் செல்லுங்கள்.

5.இருமல் சளிக்கான மருந்துகளை (Syrup) பிளாஸ்டிக் குப்பிகளில் எடுத்துச் செல்லுங்கள்.

6.தூக்க மாத்திரைகளும், வலி நிவாரணத்திற்குப் பயன்படுத்தும் சில மாத்திரைகளும் சவூதி அரசில் தடை செய்யப்பட்டவையாகும். என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கொஞ்சம் பஞ்சினை (Cotton) மருந்துடன் வைத்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் காதுகளை அடைத்துக் கொள்ள உதவும்.
நோயுள்ளவர்கள் தங்களுடைய மருத்துவச் சீட்டினை ( Medical Records ) அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.
ஜம் ஜம் தண்ணீரை அதிகம் பருகுங்கள். அது நோய் தீர்க்கும் அரு மருந்தாகும்.

எனவே ஹாஜிகளே! உங்கள் ஹஜ்ஜை ஆரோக்கியமாக நிறைவேற்றுங்கள். சுறுசுறுப்பாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுங்கள்! உங்களுடைய ஹஜ்ஜை ஒப்புக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக இறைவன் ஆக்கியருள் புரிவானாக!

நன்றி : Dr. ஜெ. முகைதீன் அப்துல் காதர் MBBS, MS

( சென்ற ஆண்டு இந்திய மருத்துவக் குழுவில் ஹஜ் பயணம் மேற்கொண்ட மருத்துவர் )

வியாழன், 5 நவம்பர், 2009

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 3 நாள் இஸ்லாமிய மாநாடு
தியோபந்த் (உத்தரப் பிரதேசம்):வந்தே மாதரம் பாடல் இஸ்லாத்துக்கு எதிரானது என்று ஜமாயத் உலாமா இ ஹிந்த் அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் 3 நாள் மாநாடு உத்தரப் பிரதேச மாநிலம் தியோபந்தில் நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் இருந்தும் 10,000 மேற்பட்ட மார்க்க அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். யோகா குரு பாபா ராம்தேவ் யோகக் கலை குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: வந்தே மாதரம் இஸ்லாத்துக்கு எதிரானது என தாருல் உலூம் மதரஷா 2006ம் ஆண்டு தடை பிறப்பித்தது. அதைப் பாடக் கூடாது என்று முஸ்லீம்களுக்கு பத்வா பிறப்பித்தது.
அந்தத் தடை சரியானதே. நாங்கள் தாயை நேசிக்கிறோம், அன்பு செலுத்துகிறோம். நாட்டையும் நேசிக்கிறோம், மதிக்கிறோம். ஆனால், தாயையும் நாட்டையும் வழிபட முடியாது. இஸ்லாத்தில் வழிபாடு என்பது இறைவன் ஒருவனை நோக்கி்த்தான். இறைவன் ஒருவனைத் தவிர வேறு யாரையம் வணங்குவது எங்கள் மார்கத்துக்கு எதிரானது.
மேலும் வந்தே மாதரம் பாடித்தான் தேசப்பற்றை நாங்கள் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை.ஒரே கடவுள் என்ற இஸ்லாத்தின் நம்பிக்கைக்கு விரோதமாக வந்தே மாதரம் பாடல் அமைந்துள்ளது. இதனால் அதைப் பாட முடியாது. வந்தே மாதரத்தை பாட வேண்டும் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என உச்ச நீதிமன்றமும் தெளிவுபடுத்தியுள்ளது.
மதரஸாக்களை ஒழுங்குபடுத்துவதாகக் கூறி மத்திய மதரஸா வாரியம் அமைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். மதரஸாக்களை நாங்களே ஒழுங்குபடுத்திக் கொள்வோம்

புதன், 4 நவம்பர், 2009

இரத்ததானம் செய்வீர்! மனிதஉயிர் காப்பீர்!!

துபாய் தமுமுக நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்


கொஞ்சம் கொடுங்கள், பல நெஞ்சங்கள் வாழ்த்தும்
இல்லை லவ் ஜிஹாத்: மத்திய உளவுத்துறை மறுப்பு!
லவ் ஜிஹாத் என்பது அறவே கிடை யாது கட்டாய மதமாற்றத்தைப் பரப்பும் லவ் ஜிஹாத் அல்லது ரோமியோ ஜிஹாத் என்ற அமைப்பு கேரளாவில் அறவே கிடையாது என மத்திய உளவுத்துறையான ஐ.பி. உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லி­ம் இளைஞர் களைக் குறிவைத்து சமூக அளவில் அவர்களுக்கு எதிரான சந்தேகத்தை உருவாக்கி அதன்மூலம் ஒட்டுமொத்த முஸ்லி­ம் சமுதாயத்தையும் தனிமைப்படுத்தி நாட்டை வன்முறைக் காடாக்கத் துணிந்த சக்தி முகத்தில் மத்திய உளவுத் துறையின் அறிக்கை அழுத்தமான அடுப்புக்கரியைப் பூசியுள்ளது.
லவ் ஜிஹாத் என்பது அறவே கிடை யாது கட்டாய மதமாற்றத்தைப் பரப்பும் லவ் ஜிஹாத் அல்லது ரோமியோ ஜிஹாத் என்ற அமைப்பு கேரளாவில் அறவே கிடையாது என மத்திய உளவுத்துறையான ஐ.பி. உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்­ம் இளைஞர் களைக் குறிவைத்து சமூக அளவில் அவர்களுக்கு எதிரான சந்தேகத்தை உருவாக்கி அதன்மூலம் ஒட்டுமொத்த முஸ்லி­ம் சமுதாயத்தையும் தனிமைப்படுத்தி நாட்டை வன்முறைக் காடாக்கத் துணிந்த சக்தி முகத்தில் மத்திய உளவுத் துறையின் அறிக்கை அழுத்தமான அடுப்புக்கரியைப் பூசியுள்ளது.கேரளாவில் லவ் ஜிஹாத் சர்ச்சை குறித்து முழுமையான அறிக்கையினை தாக்கல் செய்ய வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத் தரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து கேரளாவில் லவ் ஜிஹாத் என்ற பெயரில் எந்த ஒரு அமைப்பும் கிடையாது என கேரள காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.கேரள டிஜிபியின் அறிவிப்பைத் தொடர்ந்து மத்திய உளவுத்துறையான ஐ.பி.யும் லவ் ஜிஹாத் என்ற அமைப்பு கிடையாது என அறிவித்தது.லவ் ஜிஹாத் என்ற அமைப்பு இருந்த தற்கான எவ்வித ஆதாரமும் இல்லை என இந்திய உளவுத்துறை சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஆஜரான அசிஸ்டன்ட் சொ­சிட்டர் ஜெனரல் டி.பி.எம். இப்ராஹிம்கான் தெரிவித்தார்.மத்திய அரசு லவ் ஜிஹாத் குறித்த விசாரணைக்காக கூடுதல் நேரம் எடுத்து முழுமையான விசாரணை அறிக்கை யைத் தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
லவ் ஜிஹாத் என்ற அமைப்போ, கட்டாய மத மாற்றமோ கேரளாவில் இல்லை என்ற அறிக்கை தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என கேரள டி.ஜி.பி. ஜேக்கப் பன்னோசின் கருத்து தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்றும் முழுமையான அறிக்கை சமர்ப் பிக்க விடவில்லை என்றும் நீதிபதி கே.பி.சங்கரன் அளித்த தீர்ப்பினால் லவ் ஜிஹாத் சர்ச்சை மீண்டும் இறக்கை கட்டி பறக்கத் தொடங்கியுள்ளது.கேரள காவல்துறை டி.ஜி.பி.யின் அறிக்கையில் லவ் ஜிஹாத் என்ற ஒன்றுக்கு ஆதாரம் இல்லை என்பதோடு முற்றுப்புள்ளி வைத்துவிடாமல் அது குறித்து மேலும் தீவிரமான விசாரணை மேற்கொண்டு வருவதாக தனது அறிக் கையில் குறிப்பிட்டுள்ளதால் மாநில அளவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறை தலைவர் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடாமல் கொஞ்சம் சொதப்பலாக அறிக்கையை வெளியிட்டிருந்தது சமூகநல ஆர்வலர் கள் மற்றும் முன்னணி முஸ்லி­ம் பிரமுகர் களிடையே கடும் ஆத்திரத்தை ஏற் படுத்தியுள்ளது. கேரள அரசின் லவ் ஜிஹாத் குறித்த அறிக்கை கடும் கண்ட னத்துக்குரியது. மனம் விரும்பி மதம் மாறுவது, காதல் செய்வது, அதற்காக மதம் மாறுவது இயல்பான ஒன்று. அதனைக்கொச்சைப்படுத்துவதோடு வெளிநாட்டு நிதிஉதவியோடு மதமாற்றம் நிகழ்வதாக பரப்பப்படும் கருத்து சமூக அளவில் தேவையற்ற விபரீதத்தை விதைக்கும் என சமூகநல ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
கேரள மாநில முஸ்லி­ம் லீக் தலைவர் ஹைதர் அ­லி ஷிஹாப் தங்கள், பொதுச்செயலாளர் பி.கே. குன்சா­ குட்டி, சமஸ்தா கேரளாவின் ஜம்மியத்துல் உலமாவின் முக்கியப் பிரமுகர் பேரா. அ­க்குட்டி முஸ்­யார், அகில இந்திய ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அபூபக்கர் முஸ்லி­யார், ஜமாத்தே இஸ்லாமி ஹிந்தின் கேரள அமீர் டி. ஆரிஃப்அலி­, நத்வத்துல் முஜாஹித்தீன் அமைப்பின் தலைவர் டாக்டர் அப்துல் அஜீஸ், கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மவ்லவி அப்துன் நாசர் மதானி ஆகியோர் தங்கள் கண்டனக் கணைகளை தெரி வித்துள்ளனர்.கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதி யைச் சேர்ந்த ஷாஹின்ஷா, சிராஜுதீன் என்ற இரண்டு எம்.பி.ஏ. மாணவர்கள் இருவரும் ஹிந்து மதத்தைச் சேர்ந்த மாணவிகளைக் காதலி­த்து மண முடித் தனர். ஹிந்து மாணவிகள் இருவரும் முழு சம்மதத்துடன் இஸ்லாமிய நெறி யினை ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள் அனைத்தும் நாளேடுகளில் முக்கிய செய்தியானது.அதனைத் தொடர்ந்து மதவாத சக்திகள் லவ் ஜிஹாத் என்ற புளுகுக் கதைகள் புறப்படத் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே லவ் ஜிஹாத் குறித்த விரிவான அறிக்கையினை தாக்கல் செய்ய கர்நாடக மாநில புலனாய்வுத்துறைக்கு உத்தரவிட்டிருப்பதாக கர்நாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்திருக்கிறார்.கர்நாடகத்தின் மைசூரைச் சேர்ந்த பெண் ஒருவர் கேரளாவின் கண்ணூரைச் சேர்ந்த முஸ்லிம் வா­லிபரை நேசித்து மணம் புரிந்தார். மைசூர் பெண் இஸ்லாமிய நெறியினை ஏற்றுக் கொண்டார். மகளை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி பெண்ணின் பெற் றோர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டனர். இதனைத் தொடர்ந்து கண்ணூர் இளைஞனும், மைசூர் பெண் ணும் நீதிமன்றத்தில் நேர்நின்றனர். திருமணம் ஆன மேஜர் பெண்ணை கணவருடன் அனுப்புவது சாதாரண கிராமத்து போலீஸ் ஸ்டேஷனிலும் கூட அன்றாடம் நடைபெறும் ஒன்று என்றாலும், மாநிலத்தின் உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி பெற்றோருடன் அந்தப் பெண் அனுப்பி வைக்கப்பட்டார்.
இதனிடையே கர்நாடக நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனித உரிமைக்கான மக்கள் கூட்டமைப்பு உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. சிலி­ஜா ராஜ் என்ற 23 வயது பொறியியல் பட்டதாரிப் பெண் அஸ்கர் என்ற முஸ்லிம் இளைஞனை காத­லித்ததோடு மனம் மாறி இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறார். இந்நிலையில் சிறப்பு திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்வதற்காக தனது காதலன் அஸ்கருடன் காத்துக்கொண்டிருக்கும் போது கர்நாடக உயர்நீதிமன்றம் தலையிட்டு சி­ஜாவை பெற்றோருடன் செல்லுமாறு கூறியது. இதற்கு உயர்நீதிமன்றம் விநோதமான சப்பைக்கட்டு ஒன்றையும் கட்டியது.அதாவது, லவ் ஜிஹாத் குறித்து நவம்பர் 13ஆம் தேதிக்குள் கர்நாடக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமாம். அதுவரை சி­லிஜா, பெற்றோருடன் இருக்க வேண்டுமாம்.இதில் வேடிக்கை என்னவெனில், காதல் ஜோடி அஷ்கர்லிசி­லிஜாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 9ஆம் தேதி பதிவுத் திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. மேஜரானா சிலி­ஜாவை கண வருடன் செல்ல அனுமதிக்காமல், பெற் றோருடன் அனுப்பியது ஏன்? என்ற முக்கிய கேள்வி உட்பட கிடுக்கிப்பிடி வினாக்களுடன் உச்சநீதிமன்றத்தின் படிக்கட்டில் ஏறி யிருக்கிறது பி.யு.சி.எல். மனித உரிமை அமைப்பு.
லவ் ஜிஹாத் சர்ச்சை தற்கா­லிகமாக அடங்கியிருப்பதாகத் தோன்றினாலும் கேரளாவில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் தேதியும், கர்நாடகாவில் நவம்பர் 23ஆம் தேதியும் மீண்டும் பரபரப்பு பற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-அபுசாலிஹ்
thanks for .tmmk.in

ஞாயிறு, 1 நவம்பர், 2009

Sujatha on Mohammed the Prophet

வணக்கம் இறைவா..!

சுஜாதா

இறைத்தூதர் என்றும் நபிகள் நாயகம் என்றும் அழைக்கப்படும் முஹம்மது நபிகள், அரேபியாவில் துவங்கி இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் இஸ்லாமிய மார்க்கத்தை முழுமையாக்க வந்தார். மனிதர்கள், பல்வேறு கடவுள்களை வழிபட்டு வந்த சூழ்நிலையில் ‘இறைவன் ஒருவனே’ என்பதை நிலைநாட்டுவதும் அந்த ஒரே கடவுளின் கட்டளைகளுக்கு முழுமையான கீழ்ப்படிதலைக் கற்பிப்பதுமே அவரது குறிக்கோள். ‘இஸ்லாம்’ என்ற வார்த்தைக்கு ‘அமைதி’ மற்றும் ‘அடிபணிதல்’ என்பது பொருள். முஸ்லிம்கள் என்றால், ஏக இறைவனுக்கு அடிபணிபவர்கள்.

இஸ்லாமிய வேதமான திருக்குர்ஆனை, முஸ்லிம்கள் கடவுளின் தவறில்லாத வார்த்தைகளாக மதிக்கிறார்கள். எட்டாம் நூற்றாண்டில் இப்னு இஸ்ஹாக் எழுதிய வரலாற்றிலிருந்து நபிகளின் வாழ்க்கையை நாம் பெரும்பாலும் அறிகிறோம். அவர், ஏறத்தாழ 570 கி.பி\யில் குறைஷி இனத்தில் மக்காவுக்கு அருகில் பிறந்தவர். குழந்தைப் பருவத்தில் ஏழ்மை நிலையில் வளர்ப்புப் பெற்றோரிடம் வளர்ந்தார். நபிகளுக்கு ஆறு வயதானபோது, அவரின் சொந்தத் தாயார் இறந்துபோனார். இரண்டு ஆண்டுகள் தாத்தாவுடன் இருந்தார். பின், பெரியப்பா அபுதாலிப் உடன் தன் இளம் வயதுவரை வாழ்ந்தார். நபிகள் இளைஞராக இருக்கும்போது, கதீஜா என்னும் செல்வந்தரான விதவைப் பெண்மணியின் வியாபாரத்தைப் பார்த்துக் கொண்டார். பிறகு அவரையே மணந்தார். நடுவயது வரை அவர் இறைத்தூதர் ஆகவில்லை. ஆனால், அதற்கான அடையாளங்கள் சின்ன வயதிலேயே இருந்தனவாம். கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவர் நபிகளை ஆசீர்வதித்தது அந்த நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்காவுக்கு அருகில் உள்ள ÔஹிராÕ எனும் மலைக் குகையில் நபிகள் அடிக்கடி சென்று, இறைவனைத் தியானித்து வருவார். அவருடைய நாற்பதாவது வயதில், ஹிரா குகையில் தியானத்தில் இருந்தபோது, வானவர் ஜிப்ரீல் தோன்றி, இறைவசனங்களை (வஹீ) ஓதச் செய்தார். குர்ஆனில் 96\வது அத்தியாயத்தில் வரும் முதல் ஐந்து வசனங்களை அவர் முதலில் போதித்தாராம். நபிகளுக்கு அருளப்பட்ட முதல் ஐந்து வசனங்கள்: ‘‘ஓதுவீராக! (நபியே) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான். மேலும் உம் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில், அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்& மனிதனுக்கு; அவன் அறியாதிருந்தவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.’’_ (அத்தியாயம் 96 : 1&5) அடுத்த பத்து வருஷங்களில் அவருக்கு குர்ஆனின் பல்வேறு வசனங்கள், கடவுளிட மிருந்து ஜிப்ரீல் மூலம் சொல்லப்பட்டன. அதிலிருந்து தன் ஒரே கடவுள் தத்துவத்தை, தன் குடும்பத்தாரிடமும் குழுவினரிடமும் மக்காவுக்கு வரும் பயணிகளிடமும் போதிக்கத் துவங்கினார். இறைவனிடமிருந்து தனக்கு அருளப்பட்ட வசனங்களை, மற்றவருக்கு போதிக்கத் துவங்கினார். அவருடைய இவ்வகையி லான தூய பணியினால் பரவத் தொடங்கிய இஸ்லாம், இன்று உலகின் மிகவும் சக்தி வாய்ந்த வாழ்க்கை முறையாகவும் மார்க்கமாகவும் விரிவடைந்துள்ளது.

நபிகளின் வெற்றியைப் புரிந்துகொள்ள அவர் வாழ்ந்த சூழ்நிலையைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும். மிகப் பெரிய அரேபிய நாடு, அவர் காலத்தில் பெரும்பாலும் பாலைவனமாகவும் அதன் மக்கள் நாடோடிகளாகவும் இருந்தனர். அவர்களை ஒருங்கிணைக்க வலுவான ஒரு சக்தியோ, நம்பிக்கையோ இல்லாததால், அரேபிய நாட்டைக் குறித்து மேலை, அண்டை நாடுகள் அச்சம் கொள்ளவில்லை. எப்போதாவது சின்னச் சின்ன அரேபியத் தாக்குதல் களை அண்டை நாட்டினர் சமாளித்து வந்தார்கள். அதன் மக்கள், பல கடவுள்களை வழிபட்டுக் கொண்டிருக்கும்போது ஒரே கடவுளை நம்பும் யூத கிறிஸ்தவ தாக்கங்கள் அரேபிய நாட்டை ஆக்கிரமித் திருக்க முடியும் என்பதுதான் சம்பிரதாயமான சரித்திரச் சிந்தனை. ஆனால், நடந்தது வேறு. முஹம்மது நபிகளின் பாட்டனார் பெயர் ஹாஷிம். அவர் மக்காவுக்கு வரும் யாத்ரீகர்களுக்குப் பாதுகாப்பு அளித்து வந்தார். அவ்வாறு பாதுகாப்பு அளிப்பது அவரது குடும்பத் தொழில். ஆகையால், நபிகளும் அதே பாதுகாப்புச் செயலைத் தொடர்ந்து செய்தார். அரேபியர்கள் மற்றும் யாத்ரீகர்களின் கடவுள் தத்துவத்தைப் பற்றி ஹாஷிம் கவலைப்படவில்லை. ஆனால், நபிகள் நாயகம் கவலைப்பட்டார். ‘‘எதற்காகப் பல கடவுள்களைத் தொழுகிறீர்கள்? இறைவன் ஒருவனே!’’ என்று போதித்தார்.

இதனால் மக்கா நகர மக்களிடையே சச்சரவுகள் துவங்கின. ‘என்ன இது... புதுசாக ஏதோ சொல்கிறாரே! இறைத்தூதர் என்கிறார். இவர் சொல்வதில் உண்மையிருப்பது போல் தெரிகிறது. இவரை அனுமதித்தால் ஆபத்து!’ என்ற சச்சரவுகள் எழுந்தன. ஆயினும், நபிகளும் அவரை ஏற்றுக் கொண்டவர்களும் தொடர்ந்து பிரசாரப் பணியில் ஈடுபட்டனர். அதனால் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாயினர். எனவே, தம் தோழர்களில் சிலரை எத்தியோப்பியாவுக்கு அனுப்பிய நபிகள் நாயகம், மக்காவில் இருந்து கொண்டு தன் கொள்கைகளைப் பரப்பினார். கி.பி.622\ல் அவர் மக்காவிலிருந்து யத்ரிபுக்குச் சென்றார். பிற்பாடு இந்த இடம் மதினா என்று அழைக்கப்பட்டது. அவர் பயணம் செய்த அந்த வருடம்தான் இஸ்லாமிய காலண்டரின் முதல் ஆண்டு. இதை Ôஹிஜ்ரிÕ என்பார்கள். அடுத்த பத்து ஆண்டுகளில் நபிகள், தமக்கு ஜிப்ரீல் மூலம் அருளப்பட்ட வேத வசனங்களின் அடிப்படையில் தம் பணிகளை விரிவுபடுத்தினார். தினசரித் தொழுகை முறைகள், நோன்புகள், அந்தரங்க சுத்தி, தர்மம், யாத்திரை போன்ற நடைமுறைகளை நிர்ணயித்தார். மக்காவை அவர் மறுபடியும் கைப்பற்றிய போது, ஏக இறை ஆலயத்தில் (கஅபா) இருந்த பல கடவுள்கள் நீக்கப்பட்டு, முழுவதும் இஸ்லாம் பரவியது. எட்டாம் நூற்றாண்டில் இஸ்லாம் மத்திய ஆசியா மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளிலும் பரவியது. பதினோராம் நூற்றாண்டில் துருக்கி, தெற்கு ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளிலும் பரவியது.

இன்று உலகெங்கும் பரவியுள்ளது. நபிகள் காலத்துக்குப் பின் குர்ஆன் வசனங்களை மூன்றாவது கலீஃபா உஸ்மான் காலத்தில் (கி.பி.644656) தொகுக்கப்பட்டது. ஆரம்ப அத்தியாயங்கள் கடவுளின் மகிமை, மகத்துவம், அவரது சக்தி பற்றிக் கூறுகின்றன. பிந்தைய அத்தியாயங்கள், வாழ்க்கை முறை பற்றி விரிவான கோட்பாடுகளைச் சொல்கின்றன. குர்ஆனின் அதிகாரம் பரிபூர்ணமானது. அதை மனப்பாடம் செய்வது முஸ்லிம்களின் ஒரு புனிதக் கடமை. இஸ்லாம் கூறும் கடவுள், எல்லாம் வல்லவன். எல்லாம் அறிந்தவன். எங்கும் நிறைந்தவன். அவனுக்கு இணைதுணை கிடையாது. பாகம் பிரிக்க முடியாது. இதனால் மற்ற கடவுள்களையும் தேவகுமாரர்களையும் இஸ்லாம் நிராகரிக்கிறது. வானுலகம் மற்றும் பூவுலகின் உள்ளடக்கமும் அவன்தான். அவற்றைப் படைத்தவனும் அவன்தான். எதையேனும் அவன் படைக்கும்போது, ÔஆகுÕ என்ற ஒரு சொல் போதும்; அது ஆகிவிடும். குர்ஆன் காட்டும் இறைவன் அல்லாஹ், வார்த்தைகளுக்கும் வடிவங்களுக்கும் அகப்படாதவன். அடியார்களுக்கு மிக அருகில் இருப்பவன். உலகின் தேவைகள் எதுவுமில்லாதவன். சிருஷ்டியின் ஒவ்வொரு நுட்பத்தையும் ஒவ்வோர் உயிரையும் அறிந்தவன். நபிகள் நாயகம் இறைத்தூதர்; தத்துவஞானி அல்ல. ஆனால், அவருக்கு அருளப்பட்ட குர்ஆன் வசனங்களை மற்றவர் அலசிப் பார்க்கும்போதும் அதன் மதிப்பை எடை போடும்போதும் இஸ்லாமிய தத்துவ ஞானங்கள் எழுந்து விரிவடைந்தன.

நன்றி nidurseasons.blogspot.com