வந்தே மாதாரம் பாடலை தமிழக அரசின் பாடப்புத்தகங்களிருந்து நீக்குக தமுமுக மாணவரணி கோரிக்கை
இந்திய நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக ஜன கன மன என்ற வங்க மொழிப் பாடலும், அல்லாமா இக்பால் இயற்றிய சாரே ஜஹான்úஸ அச்சா என்ற உருது மொழிப்பாடலும் பயன்படுத்தப்பட்டு வரும் வேளையில் முஸ்லிம்களுக்கு எதிராக எழுதப்பட்ட ஆனந்த மடம் என்ற நாவல் வரும் 'வந்தே மாதரம்' என்ற பாடல் காங்கிரஸில் அன்றைக்கு இருந்த இந்து மகா சபா போன்ற சங்பரிவார அமைப்புகளின் ஆதரவாளர்களால் நயவஞ்சகமாக விடுதலை போரில் திணிக்கப்பட்டது.
1937ல் காங்கிரஸால் அமைக்கப்பட்ட முதல் இடைக்கால அரசின் போது தமிழகத்தில் (சென்னை மாகாணம்) அமைந்த ராஜாஜி தலைமையிலான முதல் அரசின் சட்டசபை கூட்டத் தொடரில் வந்தே மாதரம் பாடலை பாடி சபை நடவடிக்கைகளை துவங்கியதை அன்றைய முஸ்லிம் லீக் உட்பட முஸ்லிம் அமைப்புகளும், பெரியார் தலைமையிலான நீதிக்கட்சியும் கடுமையாக எதிர்த்ததின் விளைவாக சட்ட சபையில் அப்பாடல் பாடுவது நிறுத்தப்பட்டது.
விடுதலைப் போராட்ட காலத்திருந்தே முஸ்லிம்களால் தொடர்ச்சியாக எதிர்க்கப்பட்டு வரும் தாய் நாட்டை ஹிந்துக்கள் வணங்கும் தெய்வமாக உருவகப்படுத்தும் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாட மறுப்பது அரசியல் சாசன சட்டம் அளித்துள்ள உரிமை. உச்ச நீதிமன்றமும் வந்தே மாதரம் பாடலை பாடுவது கட்டாயமல்ல என தீர்ப்பு வழங்கியுள்ளது
இந்நிலையில் மதச்சார்பற்ற நாட்டில் ஒரு மத வழிப்பாட்டு பாடலை சிறுபான்மை மதத்தினர் மீது திணிக்க நினைப்பது அப்பட்டமான மதவெறி சூழ்ச்சியாகும். சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட வந்தே மாதரம் பாடலை தமிழுணர்வாளர்கள் மிகுந்த தமிழ்நாட்டில் தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் தமிழ்ப்பாட புத்தகங்களில் அச்சிட்டு வருவது வேதனைக்குரியது.
தமிழக அரசின் பாட புத்தகங்களில் தேச பக்தி பாடல் என்று தலைப்பிட்டு வெளியிடப்படும் வந்தே மாதரம் பாடலை உடனடியாக நீக்க வேண்டும் என்று தமுமுக மாணவரணி கோருகிறது. வரக்கூடிய கல்வி ஆண்டில் இப்பாடல் அச்சிடப்பட்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டால் மாணவர்களை திரட்டி போராட்டங்கள் நடத்த மாணவரணி தயங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக