செவ்வாய், 10 மே, 2011

முத்துப்பேட்டை மாணவி சாதனை

நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் முஸ்லிம் மாணவிகள் சிலர் சாதனை புரிந்துள்ளனர்.

தாவரவியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் இரண்டு இடங்களையும் முஸ்லிம் மாணவிகள் பெற்றுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ரஹ்மத் அறக்கட்டளை நடத்தும் ரஹ்மத் மெட்ரி்க் மேநிலைப்பள்ளியில் படித்த மாணவி அய்னுல் மர்லியா தாவரவியல் பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்று அப்பாடப்பிரிவில் மாநிலத்தில் முதல் மாணவியாக தேர்ச்சிப் பெற்றார். தமுமுக திருவரூர் மாவட்ட துணைச் செயலாளர் தீன் முஹம்மது, முத்துப்பேட்டை நகரச் செயலாளர் முஹம்மது யாசீன், நகரப் பொருளாளர் ஜாபர் சாதிக் ஆகியோர் மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரைப் பாராட்டினர். தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா தொலைப்பேசி வாயிலாக தனது பாராட்டுகளை மாணவி மர்லியாவிடம் தெரிவித்தார். மாணவி மர்லியா தான் மருத்துவம் படிக்க விரும்புவதாக அப்போது தெரிவித்தார்.