திங்கள், 30 ஆகஸ்ட், 2010


அஜ்மானில் சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)


இன்ஷா அல்லாஹ் வரும் 02.09.2010, வியாழன் அன்று மாலை 4 மணிக்கு அஜ்மான் சலாமத் ரெஸ்ட்டாரண்ட் அரங்கில் சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தாயகத்திலிருந்து வருகைப்புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு : 055-4464786, 050-5839972 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


அறிவமுதம் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

அஜ்மான் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

துபாய் வாழ் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம்...


செய்தி - முத்துப்பேட்டை முகைதீன்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

காவி பயங்கரவாதம்


மாலேகான், அஜ்மீர் தர்கா,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், போன்ற இடங்களிலும் நாட்டின் முக்கிய நகரங்களிலும் நடைபெற்ற அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் மிக முக்கிய மூளையாக இந்த காவிக்கும்பல்தான் ஈடுபட்டு இருகின்றது என்று நான் சொல்லவில்லை மாவீரன் கர்கரே இந்த நாட்டிற்கு அம்பலபடுத்தினார். தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் கர்கரே அவருக்குபின்னால் வந்த ஒரு சில நியாயமான அதிகாரிகளும், ஹெட்லைன்ஸ் டுடே போன்ற ஒரு சில நடுநிலையான பத்திரிக்கைகளும் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற அத்தனை குண்டுவெடிப்புகளுக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றன என்று தெள்ள தெளிவாக வீடியோ ஆதாரத்துடன் நிருபித்து கொண்டிருகின்றார்கள். போலி வேசமிட்டு கொண்டிருந்த காவி தீவிரவாதிகளின் பொய் முகத்திரை கிழிக்க பட்டு கொண்டிருக்கும் இந்த வேலையில் அதற்கு முத்தாய்ப்பாய் நமது நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கூறியிருப்பது காவி பயங்கரவாதிகளுக்கு பெரும் கலக்கத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது அவர்களின் கூக்குரலில் இருந்து வெளிப்படுகிறது.


ஆகவே எதிர்வரும் காலங்களில் இந்த காவிகும்பல்கள் எந்த அசம்பாவிதங்களிலும், தீவிரவாத செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க நமது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த காவிகும்பலின் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து இவர்களின் சூழ்ச்சிகளை தடுத்து நிறுத்தி இந்திய தேசத்தை பாது காக்க முன்வரவேண்டும். இல்லையேல் மனிதநேயமிக்க இந்திய குடிமக்கள் இவர்களுக்கு எதிராக ஒன்றுகூட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை இங்கு பதிவு செய்கிறோம்.

மத்திய அரசு விழித்து கொள்ளுமா?

ஆக்கம் - முத்துப்பேட்டை முகைதீன்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பாவத்தை கழுவும் தொழுகை

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)

உடலை அழுக்கி­ருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாச­ல் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள். தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45)


இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல்­த் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களி­ருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய் விடும்.


இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ''(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்'' என்றுபதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி


நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் ஒரு மனிதனிடத்தில் வந்து விட்டால் பாவங்கள் செய்ய அஞ்சுவான். மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது....


தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான். அல்குர்ஆன் 87:14, 15
பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்தும் வழிமுறையாக தொழுகையை இந்த வசனத்தில் இறைவன் விளக்கியிருப்பது தொழுகையின் முக்கியத்துவத்தையும் பாவத்தை இல்லாமல் ஆக்கும் அழகிய வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது.


''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160
சாதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுதால் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறதென்றால் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றினால் ஆற்றில் ஐந்து தடவை குளித்து உடலைத் தூய்மை செய்தவதைப் போல் பாவங்கள் அழியும் என்பது தெளிவாகிறது.
தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம்.


நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823)


தொழுகை பாவங்களை அழிக்கும் என்பதற்கு நிதர்சன சான்றாக இந்த ஹதீஸ் உள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் பாவத்தைச் செய்து விட்டு, அந்த நபித்தோழர் தன் கௌவரத்தைத் தூக்கியெறிந்து விட்டுத் தன் பாவத்தை வாய்விட்டுச் சொல்கிறார் என்றால் தொழுகை பாவத்திற்குப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாவத்தி­ருந்து விடுபடுவதற்கு ஒரு மனிதனை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது என்பதை அறியலாம்.பாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:


ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவி­ருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்கள் செய்யாத வரை! அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம் (394)



இவ்வாறு தொழுதால் மட்டும் தான் பாவங்கள் மன்னிக்கப்படுமா? தொழுகைக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளைச் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (421)


இவ்வாறு தொழுகைக்காகச் செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளும் நன்மையாக அமைகிறது. தொழுகை பாவப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சொர்க்கம் செல்வதற்குத் துணைச் சாதனமாகவும் உள்ளது.


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ''என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள்'' எனக் கேட்டார். அப்போது, ''நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி), நூல்: புகாரி (1396)


அல்லாஹ்வுக்கு நிகராக யாரையும் எதையும் ஆக்கக் கூடாது என்ற கட்டளைக்கு அடுத்தபடியாக, சொர்க்கம் செல்வதற்குத் தொழுகை என்ற வணக்கத்தைத் தான் நபியவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இது தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.



இவ்வாறு தொழுகையாளிகளுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் அதிகமான கூ­கள் இருக்கும் நிலையில், தொழக்கூடிய சிலர் பாவங்களி­ருந்து விடுபடாத சூழ்நிலையைக் காண்கிறோம். தொழுது கொண்டே மோசடி செய்கிறார்கள்; வட்டி வாங்குகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் தொழுகையை ஒரு சடங்காக நிறைவேற்றுவது தான்.


நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று, அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் தொழுகையை அமைத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு தொழுபவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.


தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அல்குர்ஆன் (107:4, 5)


இவர்களின் நிலைமை தான் இப்படி என்றால் குர்ஆன், ஹதீஸை விளங்கிய தவ்ஹீதைப் பேசக் கூடிய மக்களிடத்திலும் இந்தக் குறைபாடுகளைக் காண்கிறோம். குர்ஆன், ஹதீஸை மட்டும் பேசக்கூடிய பள்ளிவாயில்களில் கூட, சுப்ஹு தொழுகையில் ஒரு சில நபர்கள் மட்டும் வருவதே இதற்குச் சான்று! ஆனால் ஜும்ஆ தினங்களில் கால் வைக்கக் கூட இடமிருக்காது.
இது போன்று நடப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகüலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணித்து விட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்குப் புறப்பட்டு வராமலிருப்பவரை எரித்து விட முடிவு செய்தேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (657)


நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையே மறுமை வெற்றிக்கும் அடிப்படையாக உள்ளது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 378
தொழுகை தான் ஒருவனுடைய மறுமை வெற்றியைத் தீர்மானிப்பதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!

வியாழன், 26 ஆகஸ்ட், 2010


அஜ்மான் மண்டல முமுகவின் ஆலோசனைக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு

அஜ்மான் மண்டல முமுகவின் ஆலோசனைக்கூட்டம் 26-08-2010 அன்று அல்புத்தான் பகுதியில் உள்ள மண்டலத்தலைவர் சகோதரர் சம்சுதீன் அவர்கள் இல்லத்தில் முமுகவின் அமீரக துணைத்தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மண்டல முமுக நிர்வாகிகள் முன்னிலை வகிக்க முமுகவின் ஷார்ஜா மண்டல துணை செயலாளர் சகோதரர் பந்தல்குடி சம்சுதீன் அவர்கள் தமுமுக ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் உரைநிகழ்த்த அஜ்மான் மண்டல புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தலைவர் :- குடவாசல் செய்யது ஷஹாபுதீன்

துணை தலைவர் : - முத்துப்பேட்டை முகைதீன்

செயலாளர் :- கட்டிமேடு ஜபருல்லாஹ்

துணை செயலாளர்கள் :-

பசுபதி கோவில் முகம்மது ரபீக்

கட்டிமேடு சாகுல் ஹமீது

பொருளாளர் :- திருச்சி முகம்மது இல்யாஸ்

மக்கள் தொடர்பு :- செய்யது ஜமால் (சித்தார் கோட்டை)

செயற்குழு உறுப்பினர்கள் :-

அஜீஸ் ரஹ்மான் - திருநெல்வேலி,களக்காடு

முகம்மது ஹனிபா - திருநெல்வேலி

மக்கள் உரிமை பொறுப்பாளராக சகோ.முத்துப்பேட்டை முகைதீன்

ஆகியோர் ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வந்திருந்தோர் அனைவருக்கும் நோன்பு திறக்கும் ஏற்பாடு மண்டல நிர்வாகிகளால் செய்யபட்டு இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் 02-09-2010 வியாழன் அன்று தாயகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாய் அமீரகம் வந்திருக்கும் தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், மக்கள் உரிமை ஆசிரியரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான சகோதரர் M.தமீமுன் அன்சாரி MBA., அவர்களையும், தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சகோதரர் மவ்லவி சிவகாசி முஸ்தபா அவர்களையும் அழைத்து அஜமானில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்துவது என்றும் அதனை தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் ஏற்ப்பாடு செய்வது என்றும் ஏக மானதாக முடிவு செய்யப்பட்டது.கலந்துகொண்ட அணைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திதவர்களாக கலைந்து சென்றனர்.

செய்தி தொகுப்பு - முத்துப்பேட்டை முகைதீன்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

அல்லாஹ்வின் திருப்பெயரால்....

முத்துப்பேட்டை மூன்லைட் கிரிகெட் க்ளப் நடத்திய மாபெரும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

கடந்த - 20-08-2010 - அன்று வெள்ளிகிழமை துபாய் கிஸ்ஸசில் உள்ள அல் தவார் பார்கில் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிகெட் க்ளப் நடத்திய நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து மக்ரிப் தொழுகையும் சகோதரர் பைசல் அவர்கள் எழுச்சியான மார்க்க உரையை நிகழ்த்த வந்திருந்தோர் அனைவருக்கும் விருந்து உபசரிப்பும் நடைபெற்றது. இதில் நமது முத்துப்பேட்டையை சேர்ந்த சகோதரர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். (அல்ஹம்துலில்லாஹ்.)

நமதூர் சகோதரர்களை ஒன்றாக சந்தித்த மனதிருப்த்தியுடன் அனைத்து சகோதரர்களும் உற்சாகமாய் தங்கள் பகுதியை நோக்கி சென்றனர்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முத்துப்பேட்டை மூன்லைட் கிரிகெட் க்ளப் சகோதரர்கள் செய்திருந்தனர்.

அங்கே இருந்து சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு....








செய்தி - முத்துப்பேட்டை முகைதீன்

ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

இறைவன் நாடினால் விரைவில் துபாய் வாழ் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம்...

மேலும் விபரங்கள் கம்மிங் சூன்....
தமிழுக்கு அறக்கட்டளை நிறுவிய சிங்கப்பூர் (முத்துப்பேட்டை) முஸ்தபா!

முனைவர் மு. இளங்கோவன்

சிங்கப்பூர் சென்று வந்தவர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் முஸ்தபா. ஆம். நாணயமாற்று நிறுவனங்களில் உலக அளவில் நம்பிக்கைக்குப் பெயர் பெற்ற ஏசியன் எக்சேஞ்சு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை நடத்தும் முஸ்தபா அவர்கள் பிறந்தது திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆகும்.

இப்பொழுது தொழில் நிமித்தமகாச் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று இருக்கின்றார். பணம் மாற்று (money exchange) உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தி வருகின்றார். உலக அளவில் தரமான தங்கம் பற்றி நன்கு அறிந்தவர். தமிழகத்திலும் இவருக்குப் பல நிறுவனங்கள் உண்டு. அடிக்கடித் தமிழகத்திற்கு வந்து தமிழக உறவுகளைப் போற்றி வருகின்றார்.

சிங்கப்பூரில் பல்வேறு தொழில்களைத் தொடங்கி நடத்துவதுடன் உலகின் பல நாடுகளில் இவரின் நிறுவனங்கள் உள்ளன. உலக அளவில் அறிமுகமாகியிருக்கும் இவர் தன்னம்பிக்கைக்குப் பெயர் பெற்றவர். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் வல்லவர். சிங்கப்பூரில் நடைபெறும் தமிழ்ப் பணிகளில் முன்னிற்பவர். அயராத உழைப்பும், நிர்வாகத்திறமையும், பேச்சு வன்மையும், பழகும் பண்பும் கொண்டவர். தமிழில் பேசுவோம் என்ற தாரக மந்திரத்துடன் தமிழ்ப்பணிபுரியும் இவரின் வாழ்க்கை முன்னேறத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் எடுத்துக்காட்டானதாகும். முஸ்தபாவுடன் உரையாடியதிலிருந்து…

உங்களின் இளமை வாழ்க்கை பற்றி…

முத்துப்பேட்டையில் அப்துல்காசிம், ரஹ்மத் அம்மாள் ஆகியோர்க்கு மகனாக நான் 18.08.1949 இல் பிறந்தேன். எங்களின் முன்னோர்கள் கப்பல் வணிகத்தில் சிறந்திருந்தாலும் தந்தையார் எளிய நிலையில் வணிகம் நடத்திவந்தார். தந்தையார் அப்துல்காசிம் இலங்கை மலேசியா சிங்கப்பூர், பர்மா உள்ளிட்ட பல நாடுகளுக்கு வணிகம் செய்வதற்காகச் சென்று வந்தவர். எங்களின் குடும்பத்திற்கு ‘நகுதா குடும்பம்’ என்று பெயர் (நகுதா என்றால் பாய்மரக்கப்பல் என்று பொருள். எங்கள் முன்னோர்கள் பாய்மரக் கப்பலில் வணிகம் செய்தவர்கள் ). எங்களின் தந்தையார் 1920 அளவில் மலேசியா சென்று வணிகம் செய்தவர்.

நான் முத்துப்பேட்டையில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றேன். அதன் பிறகு அண்ணனின் அறிவுரைப்படி 1966 இல் சென்னைக்கு வணிகத்திற்கு வந்தேன். மயிலாப்பூர் பகுதியில் ‘டாலர் ஸ்டோர்’ என்ற பெயரில் ஒரு கடையை நடத்தினோம். எழுதுபொருட்கள் உள்ளிட்ட பொருள்கொண்ட பொதுவணிகக்கடை அது. வணிகம் சரியாக நடைபெறாததால் நான்கு ஆண்டுகளில் கடையை இழுத்து மூடவேண்டியநிலை. இல்லை. கடை தானே மூடிக்கொண்டது.

கடை வைத்து முன்னேறலாம் என்று நினைத்த முயற்சி தோல்வியில் முடிந்ததால் அப்துல் கறீம் என்ற பொறியாளருடன் இணைந்து ‘ஹாரிஸ் கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற பெயரில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டேன். எதிர்பார்த்த முன்னேற்றம் அதிலும் இல்லை. என் முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன. கனவுகளுடன் ஊரிலிருந்து வந்த எனக்கு எதிர்காலம் கேள்விக்குறியானது.

ஆனால் என் உடன் பிறந்தவர்கள் சிங்கப்பூர் சென்று வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். தோல்வியில் துவண்ட நான் இசுலாமிய மார்க்க நூல்களைப் படிப்பதும் இறை ஈடுபாட்டில் திளைப்பதுமாக இந்தக் காலகட்டத்தில் இருந்தேன்.

உங்கள் உடன் பிறப்புகள் பற்றி..

என் பெற்றோர்களுக்கு ஒன்பது குழந்தைகள்.முதல் இருவர் பெண்குழந்தைகள். அடுத்தவர் அண்ணன் யாகூப்.அவரையடுத்து யூசுப். பின்னர் கமால்,பக்ருதின் என்ற இரட்டையர்கள். அவர்களுக்கு அடுத்து நான். எனக்குப் பின்னர் தங்கை ஒருவர். அடுத்துத் தம்பி தமீம். தந்தையார் 1975 இல் இயற்கை எய்தினார்.

குடும்பத்தில் பாகப்பிரிவினை ஏற்பட்டது. மற்ற சகோதரர்கள் வசதியுடன் இருந்தனர். ஆனால் வேலையில்லாமல் இருந்தவன் நான். என்றாலும் பாகப்பிரிவினையால் குடும்பத்தில் அமைதி குலையக்கூடாது என்று பெருந்தன்மையாகத் என் பங்கின் சில பகுதிகளை உடன்பிறப்புகளுக்கு விட்டுத் தந்து அமைதியாகப் பாகப்பிரிவினையை முடித்தேன்.

தங்கள் இல்லறவாழ்க்கை பற்றி…

1976 இல் எனக்குத் திருமணம் கதீஜா நாச்சியா என்னும் அம்மையாரை மணந்துகொண்டேன். எங்களுக்கு ஆண் குழந்தைகள் இருவரும் பெண் குழந்தைகள் மூவரும் பிறந்தனர். ஆண்மக்கள் என் வழியில் வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிங்கப்பூர் வாழ்க்கை பற்றி…

1978 அளவில் நான் சிங்கப்பூர் சென்று பணமாற்றுத்தொழிலில் உடன்பிறந்தாருடன் ஈடுபட்டேன். அண்ணன் யாகூப் அவர்கள் பல்பொருள் அங்காடிக் கடையைக் கவனிக்கத், தம்பியுடன் இணைந்து பணமாற்றுத் தொழிலில் ஈடுபட்டேன். பணமாற்று இன்று வானுயர் கட்டடங்களில் மிகப்பெரியத் தொழிலாக நடந்தாலும் அன்று சிங்கப்பூர் கடற்கரைக்கு அருகில் கப்பலில் வரும் பயணிகள், மாலுமிகளுக்கு உரியப் பணமாற்று இடமாக ‘சேஞ்ச் அலி’ என்னும் இடம் விளங்கியது.

அங்குதான் நானும்-தம்பி தமீமும் இணைந்து பணமாற்று வணிகத்தைத் தொடங்கினோம். 1980 இல் என் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனை ஏற்பட்டது. பணமழை பெய்யத் தொடங்கியது. மிகப்பெரிய அளவில் வணிகம் சூடுபிடித்தது. அடுக்கடுக்காகத் தொழிலில் இலாபம் ஈட்டினேன். பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றேன்.
நான் சம்பாதித்த பணத்தை உரியவகையில் செலவிடும் எண்ணம் ஏற்பட்டது. மொழிப்பணிக்கும், சமயப்பணிக்கும், கல்விப்பணிக்கும் என் பொருளை மகிழ்ச்சியுடன் செலவிட முடிவெடுத்தேன்.


தங்களின் அறக்கட்டளை பற்றி சொல்லுங்களேன்.

சிங்கப்பூருக்கும் தமிழகத்துக்கும் இலக்கியப் பாலம் அமைக்கும் விருப்பம் கொண்டு “முஸ்தபா தமிழ் அறக்கட்டளை” என்ற அமைப்பை 2001 இல் ஏற்படுத்தினேன். பல்வேறு செயல்திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றேன்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், சிங்கப்பூர் தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் பெயரில் ஓர் ஆய்விருக்கை உருவாக்கினேன். அந்த ஆய்விருக்கையில் தொடர்ந்து சிறப்பாக ஆய்வு நடைபெற இருபது இலட்சம் உரூவாவினுக்குத் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பங்குகளை வாங்கித் தந்துள்ளேன். அத்தொகை வழியாகக் கிடைக்கும் பணத்தைக் கொண்டு சிங்கப்பூர்-மலேசிய இலக்கிய ஆய்வு தொடர்ந்து நடைபெற வாய்ப்பு உண்டு.

மேலும் சிங்கப்பூர், மலேசியாவில் வாழும் தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் அனைத்தையும் திரட்டித் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தனியாக வைக்க ஏற்பாடு செய்துள்ளேன். தமிழ் இலக்கியங்களைப் பரப்பும் முயற்சிகளை மேற்கொள்ளுதல், தமிழறிஞர்களுக்கு உதவி செய்தல், ஆய்வு மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது இந்த அறக்கட்டளையின் பணிகளில் குறிப்பிடத்தகுந்தது.

சிங்கப்பூர், மலேசியத் தமிழர்களின் வாழ்க்கை பற்றியும் அங்குள்ள தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் குறித்தும் ஆய்வு செய்யும் பணிகளை ஊக்கப்படுத்துவதற்குப் பல திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வருகின்றேன். சிங்கப்பூரில் நடக்கும் பல்வேறு இலக்கிய நிகழ்வுகளுக்கு இயன்ற வகையில் பொருளுதவி செய்துவருகின்றேன். மேலும் சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களின் சிறந்த படைப்பை ஆண்டுதோறும் தேர்வு செய்து கரிகாலச் சோழன் தங்கப் பதக்க விருது வழங்கிப் பாராட்டுவதையும் முஸ்தபா அறக்கட்டளை கடமையாகக் கொண்டுள்ளது. தி சிராங்கூன் டைம்ஸ்(The serangoon Times) என்ற தமிழ் மாத இதழையும் நடத்தி வருகின்றோம்.

தங்களின் சமயப்பணி பற்றி…

இசுலாமிய நெறிகளைத் தமிழில் எடுத்துரைக்கும்வகையில் தமிழில் நூல்கள் இல்லாத குறை உண்டு. எனவே இசுலாமியத் தமிழ்நூல்களை வெளியிடச் சென்னையில் ரஹ்மத் அறக்கட்டளையை நிறுவியுள்ளேன். இவ்வறக்கட்டளையின் சார்பில் இயங்கும் பதிப்பகம் திருக்குர்ஆன் நூலினை அரபி மூலத்துடன் வெளியிட்டுள்ளது. மேலும் முகமது நபிகளின் பொன்மொழிகளை வெளியிடும் முயற்சியிலும் முன்னிற்கின்றது. நபிகள் நாயகத்தின் வரலாற்றைத் தமிழில் வெளியிடும் பணியிலும் ஈடுபட்டுள்ளது. இசுலாமிய நூல்கள் விற்பனை செய்யும் தரமான விறபனை மையத்தையும் இந்த அறக்கட்டளை நடத்த உள்ளது.

தங்களுக்குக் கல்விப்பணியில் எவ்வாறு ஈடுபாடு ஏற்பட்டது?

எதிர்காலத்தை நான் திட்டமிட்டுச் செயல்படுவது வழக்கம். எனவே என் பிறந்த ஊரில் வரும்பொழுது தங்குவதற்குப் பெரியவளமனைகளைக் (பங்களா) கட்டுவதை விரும்பாமல் பள்ளிக்கூடம் கட்டும் பணியில் ஈடுபட்டேன். ஊரில் முசுலிம்பெண்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட இனப் பெண்களும் படிப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் இருந்தனர். இதனையறிந்து ஒரு பள்ளியை நிறுவினேன். என் தாயர் ரஹ்மத் அவர்களின் பெயரில் பத்து ஏக்கர் நிலப்பரப்பில் 1996 முதல் பள்ளி செயல்பட்டு வருகின்றது.
இயற்கை எழிலுடன் விளங்கும் பள்ளியில் தோப்புகளும்,தேக்குமரங்களும் அழகுடன் காட்சி தருகின்றன. மா, கொய்யா, வாழை,தென்னை உள்ளிட்ட மரங்களின் காய், பழங்களைப் பறிக்காமல் அதனை இயற்கையாகப் பறவைகள், விலங்குகள் உண்ணுவதற்கு வழிகண்டுள்ளேன்.


எங்கள் பள்ளியில் ஆயிரம் மாணவிகள் படிக்கின்றனர். இந்தப் பள்ளியில் 150 மாணவிகள் விடுதியில் தங்கிப் படிக்கின்றனர். இசுலாமியப் பெருமக்கள் தங்கள் பெண்குழந்தைகளை வெளியில் சென்று படிக்க அனுமதிப்பதில்லை. அதுபோல் கிராமப்புறம் சார்ந்த பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை வெளியில் சென்று படிக்க அனுமதிப்பதில்லை.
இதனை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாக இந்தப் பள்ளியை உலகத் தரத்திற்கு நடத்துகின்றேன். இந்தப் பள்ளியில் மாணவிகள் அதிக அளவில் முசுலீம்களாக இருந்தாலும் பணியாற்றும் ஆசிரியர்கள் பெரும்பான்மையானவர்கள் இந்து, கிறித்தவர்களே ஆவர். இந்து, கிறித்தவ சமயம் சார்ந்த மாணவிகளும் படிக்கின்றனர்.அனைத்து மத்தினரும் கைகோர்த்துக் கல்வி பயிலும் இத்தகு பள்ளி தமிழகத்தில் வேறு இல்லை எனலாம்.


பெண்கள்,மாணவிகள் மட்டும் தொழுகை நடத்த ஒரு பள்ளி வாசலும் பள்ளியில் உண்டு. மதத்திணிப்புக்கு இங்கு வழியில்லை.விரும்பியவர்கள் விரும்பிய வகையில் வழிபாடு நடத்தலாம். பள்ளிக்கட்டணம் யாவும் மற்ற இடங்களை நோக்கக் குறைவாகவே உள்ளது. காற்றோட்டமான அறைகள், போக்குவரத்து வசதிகள், பணியாளர்களுக்குப் பணிப்பாதுகாப்பு யாவும் செய்துள்ளேன்.

தங்களின் தமிழ் ஆர்வம் பற்றியும் சமய ஈடுபாடு பற்றியும் கூறவும்…

எந்த வகையான மதமாச்சரியத்துக்கும் நான் இடம் தருவதில்லை. மதச்சின்னங்களும் அணியாமல் வாழ்ந்து வருகிறேன். தமிழ்க் கவிஞர்களிடத்து எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. கவிஞர்கள் வைரமுத்து, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா உள்ளிட்டவர்களுடன் நெருங்கிப் பழகுவதை இயல்பாகக் கொண்டுள்ளேன். அதுபோல் சிங்கப்பூருக்கு வரும் தமிழறிஞர்களைக் கௌரவிப்பதிலும் நான் முன்னிற்பது உண்டு.
இசுலாமிய நெறியை வாய்ப்பேச்சாக்கிக் கொள்ளாமல் நடைமுறைப்படுத்தி வருகின்றேன். தமிழை விளம்பரப் பொருளாக்காமல் வாழ்க்கையில் அனைத்து இடங்களிலும் பின்பற்றுகிறேன். என் பிள்ளைகள் வீட்டில் தமிழில் பேசுவதையே விரும்புகிறேன். வீட்டில் தமிழ் பேசினால்தான் நாட்டில் தமிழ் வாழும். தமிழர்களாக வாழமுடியும். மொழியை இழந்தால் பண்பாட்டை இழப்போம்.


தமிழை இழந்தால் அந்த இடத்தில் ஆங்கிலம் வந்து அமர்ந்துகொள்ளும். ஆங்கிலப்பண்பாடு நடைமுறைக்கு வரும். ஆங்கிலப் பண்பாட்டைப் பின்பற்றினால் வேரை மறந்தவர்களாக மாறிவிடுவோம். ஆங்கிலம் மூக்குக் கண்ணாடி போன்றது. தேவையென்றால் கழற்றி வைத்துக் கொள்ளலாம். தமிழ் கண் போன்றது. கழற்றி வைக்கக்கூடாது.

நன்றி - முத்துப்பேட்டை.ஒஆர்ஜி

இங்கு முத்துப்பேட்டையின் செய்தியை தாங்கி வருவதால் இங்கு பதிவு செய்கிறோம்.
ராசல் கைமாவில் ஏகத்துவ எழுச்சி மாநாடு

ஐக்கிய அரபு அமீரகம் முஸ்லிம் முன்னேற்றக் கழக ராசல் கைமா மண்டலம் கடந்த 20.08.2010 அன்று இரவு ராசல் கைமா - அல் நக்கில் வீணஸ் ரெஸ்டாரெண்ட் அரங்கத்தில் ஏகத்துவ எழுச்சி மாநாட்டை நடத்தியது".

மாநாட்டு அரங்கத்தில் மாலை 9.30 மணிக்கு சகோ.அப்துல் ஹன்னான் அவர்கள் இறைவசனம் ஓத நிகழ்ச்சிகள் ஆரம்பம்மானது. மாநாட்டிற்க்கு ராசல் கைமா மண்டல தலைவர் சகோ. குடந்தை ஜாப்பர், மண்டல துணை தலைவர் கடியாச்சேரி ஹாஜா முகைதீன், பொருளாலர் செங்கோட்டை அப்துல் ஹமிது, மண்டல ஆலோசகர் தோப்புத்துரை ஆதம்.ஆரிபின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராசல் கைமா மண்டல செயளாலர் பொதக்குடி ஷாஜஹான் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார் பின்னர் அமீரக தலைவர் சகோ. அப்துல் ஹாதி அவர்கள் மாநாட்டுக்கு தலைமை ஏற்று சிறப்புரை நிகழ்த்தினார்.

அவர்களைத் தொடர்ந்து மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளர்களாகவும் பேச்சாளர்களாவும் நமது தாயகத்திலிருந்து வருகைத் தந்திருக்கும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமை கழக பேச்சாளர் சகோ. மவுலவி சிவகாசி முஸ்தபா அவர்கள் "ஏகத்துவத்துவத்தின் அவசியம்" என்ற தலைப்பிலே தனது உரைவீச்சை நிகழ்த்தினார்.

அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் தனது சமுதாயத்தை தட்டுயெழுப்பும் பானியில் இந்தியா விடுதலைக்காக பங்காற்றிய வஹாபிக்களை(ஏகத்துவ வாதிகள்) பற்றிய வரலாற்றுச் சான்றுகளையும் தமிழக முஸ்லிம்களிடய ஏற்ப்பட்டுள்ள ஒற்றுமையின்மையும், பின்னர் தமிழக அரசியலில் மனிதநேய மக்கள் கட்சியின் பங்களிப்பையும் மிக விவரமாக விளக்கினார். தமிழக முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டுள்ள சாதக, பாதக விடயங்களை விவரமாக தொகுத்து கூறினார். இறுதியாக தனது உரையின் முடிவில் நம்முடைய சகோதரர்கள் மற்றும் பொதுமக்களும் கேட்ட வினாக்களுக்கு விடையளித்தார்.

அமீரக துணை தலைவர் சகோ.ஹூசைன் பாஷா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தி துஆவுடன் இம்மாநாடு அல்லாஹ் பேரருளால் இனிதே நிறைவுற்றது.
மாநாட்டில் திரளானோர் கலந்துக்கொண்டு பயன்பெற்றனர், பின்னர் சிற்றுண்டியுடன் தேநீரும் வழங்கப்பட்டது.
இம்மாநாட்டுக்கு ராசல் கைமா மண்டல நிர்வாகிகள் சில இன்னல்களிடைய வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தது அனைவரையும் திகைக்க வைத்தது.


ஏக இறைவனை போற்றி புகழ்ந்தவனாக...!

துபாயில் பல்வேறு கிளைகள் மற்றும் மாவட்ட தமுமுகவின் நோன்பு திறக்கும் நிகழ்சிகளின் தொகுப்பு

துபாயில் தஞ்சை மாவட்ட தமுமுக சகோதரர்களின் இப்தார் நிகழ்...

இறைவனின் கிருபையால், ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் தஞ்சை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்வு துபாய் - தேரா முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் நடைப்பெற்றது. நிகழ்விற்கு துபை மண்டல தலைவர் சகோ. மதுக்கூர் அப்துல் காதர் அவர்கள் தலைமைத் தாங்கினர்.

சரியாக மாலை 5.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தாயகத்திலிருந்து வருகைத் தந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் சகோ. சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் இளைஞர் எழுச்சியின் அவசியம் பற்றியும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் நகர்வுகளையும், தற்கால தமிழக முஸ்லிம் அரசியல் நிலவரம் குறித்தும் ஆராய்ச்சி பூர்வமான அனுகுமுறையோடு தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்.

இறுதியில் கழக அடலேறுகள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்தார். வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் இப்தார் விருந்து மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

எல்லாப் புகழும் இறைவனுக்கே...

துபாய் வாழ் லால்பேட்டை தமுமுக சகோதர்களின் இப்தார் விருந்து...

இறைவனின் கிருபையால், ஐக்கிய அரபு அமீரகம் துபாயில் வாழும் லால்பேட்டை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக சகோதரர்களின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி மற்றும் இப்தார் நிகழ்வு துபாய் - தேரா முஸ்லிம் முன்னேற்றக் கழக மர்கஸில் நடைப்பெற்றது. நிகழ்விற்கு துபை மண்டல தலைவர் சகோ. அப்துல் காதர் மற்றும் துனைத் தலைவர் சகோ. மொய்தின் அவர்கள் தலைமைத் தாங்கினர்.

சரியாக மாலை 5.00 மணிக்கு நிகழ்வு ஆரம்பமானது. தாயகத்திலிருந்து வருகைத் தந்துள்ள தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைமைக் கழக பேச்சாளர் சகோ. சிவகாசி முஸ்தபா அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சியின் மாநில துனைப் பொதுச் செயலாளர் சகோ. தமீமுன் அன்சாரி அவர்கள் இளைஞர் எழுச்சியின் அவசியம் பற்றியும் மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் நகர்வுகளையும், தற்கால தமிழக முஸ்லிம் அரசியல் நிலவரம் குறித்தும் ஆராய்ச்சி பூர்வமான அனுகுமுறையோடு தனது சொற்பொழிவை நிகழ்த்தினார்

இறுதியில் கழக அடலேறுகள் எழுப்பிய வினாக்களுக்கு விளக்கமளித்தார். வந்திருந்த சகோதரர்கள் அனைவருக்கும் துபை வாழ் லால்பேட்டை சகோதர்களால் இப்தார் விருந்து மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டது.

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஷார்ஜா மண்டலம் சார்பில் ரமலான் சிறப்பு மாநாடு

முஸ்லிம் முன்னேற்ற கழகம் ஷார்ஜா மண்டலம் சார்பில் ரமலான் சிறப்பு மாநாடு ஷார்ஜா (- 13-08-2010 - ) பிலிப்பெய்னி ஸ்கூல் ஆடிடோரியத்தில் முமுக வின் அமீரக துணை பொது செயலாளர் சகோதரர். ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையில் ஷார்ஜா மண்டல செயலாளர் சகோ.தோப்புத்துறை இப்ராஹீம் அவர்கள் கிராத் ஓதி துவங்கிவைக்க அதனை தொடர்ந்து மக்கள் தொடர்பாளர் சகோ.திருப்பூண்டி ஒ.எஸ்.இப்ராஹீம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

மண்டல தலைவர் சகோ.நெல்லிக்குப்பம் இக்பால் அவர்களும், மண்டல பொருளாளர் சகோ.தோப்புத்துறை அபுல்ஹசன் அவர்களும் மண்டல துணை தலைவர் சகோ.பூலாங்கால் சிராஜ் அவர்களும் முன்னிலை வகிக்க முமுக ஆலோசனை குழு உறுப்பினர் சகோ.நாசர் அலிகான் அவர்கள் சிறிது நேரம் உரைநிகழ்த்தினார். அதனை தொடர்ந்து முமுக அமீரக தலைவர் சகோ.அதிரை அப்துல் ஹாதி அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் தலைமை கழக பேச்சாளர் சகோ.சிவகாசி முஸ்தபா அவர்கள் இறை அச்சம் என்ற தலைப்பில் அருமையான ஓர் உரையை நிகழ்த்த அதன் தொடர்ச்சியாக தமுமுக வின் மாநில செயற்குழு உறுப்பினரும்,மக்கள் உரிமை ஆசிரியரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான அண்ணன் எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் தாயகமும் மமக சந்தித்துவரும் சவால்களும் என்ற தலைப்பில் எழுச்சியுரை நிகழ்த்தி அதனை தொடர்ந்து பாரவையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் தனக்கே உரியபாணியில் அருமையாக பதில் அளித்தார்கள்.

இறுதியாக மண்டல துணை செயலாளர் சகோ.பந்தல்குடி சம்சுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த துவாவுடன் இனிதே நிறைவுற்றது. இந்த ரமலான் சிறப்பு மாநாட்டில் ஏராளமான சகோதர்கள் கலந்துகொண்டு இந்த புனித ரமலான் மாதத்தில் தங்களது நேரங்களை சரியான பாதையை நோக்கி செலவலித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

வருகைதந்த அத்துணை சகோதரர்களுக்கும் நோன்பு திறக்கும் நிகழ்சி ஏற்பாடு செய்யபட்டு இருந்தது.

--- முத்துப்பேட்டை முகைதீன் ---





















வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

தமுமுக - அதிமுக கூட்டணி குமுதம் ரிப்போர்டரில் வெளிவந்த செ.ஹைதர் அலி யின் பேட்டி

தமுமுக - அதிமுக கூட்டணி நக்கீரனில் வெளிவந்த டாக்டர் ஜவாஹிருல்லாஹ் வின் பேட்டி


திங்கள், 9 ஆகஸ்ட், 2010

ரமலானை வரவேற்போம்


அதிமுகவுடன் கூட்டணி- தமுமுக அறிவிப்பு

தமுமுக இயக்கத்தின் அரசியல் கட்சியான மமக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது.இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தமுமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 5ம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் தமுமுகவினர் சந்தித்தனர். மாலை 3 மணிக்கு நடந்த இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீண்டது.

இந்த சந்திப்பில் தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச்செயலாளர் ஹைதர் அலி உட்பட 5 பேர் கொண்ட குழு பங்கேற்றது.

இதையடுத்து தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர்அலி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோர் இன்று தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், ‘’பாளையில் நடந்த புளியங்குடி அப்துல் ரஷீது கொலை வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்த பிறகும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.


நெல்லை எஸ்.பி.யை கண்டித்து செப்டம்பர் 25ம் தேதி பாளையில் தமுமுக சார்பில் பேரணி நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்கள்.

அவர்கள் மேலும், ‘’வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருக்கிறோம்’’என்று தெரிவித்தனர்.

-- நக்கீரனில் வெளிவந்த செய்தி--

ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

துபாய் மண்டல தமுமுகவின் மாதாந்திர செயற்குழு


எல்லாம் வல்ல அல்லாஹ்வின் வற்றாத கருணையால்,கடல் கடந்தும் சேவை செய்யும் தமுமுகவின் கிளையான முஸ்லீம் முன்னேற்றக் கழகம் துபை மண்டலத்தின் மாதாந்திர செயற்க்குழு 05-08-2010 அன்று வியாழன் இரவு 10:30 மணிக்கு மண்டலத்தின் தலைவர் சகோ.மதுக்கூர் அப்துல் காதர் தலைமையில் நடைப்பெற்றது.

தாயகத்தில் இருந்து வருகை தந்துள்ள தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் சகோ.சிவகாசி முஸ்தஃபா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செயல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை நாடி செய்ய வேண்டும் என்று உரை நிகள்த்தினார்கள். மேலும் தலைமைக் கழக செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்கள். இச்செயர்க் குழுவில் வரக்கூடிய ரமளான் மாதத்தில் முமுகவின் மார்க்கப் பணி மற்றும் சமுதாயப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அஇஅதிமுக பொதுச் செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் இன்று சந்தித்துப் பேசினர்.

அஇஅதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களை சந்திக்க வருமாறு அஇஅதிமுகவின் தலைமை நிலையம் சார்பில் முன்னாள் அமைச்சர் கே. செங்கோட்டையன் தமுமுகவின் தலைவரும் மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜுலை 30 அன்று மனிதநேய மக்கள் கட்சியின் உயர்நிலை குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் அஇஅதிமுகவின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்திப்பது என்று தீர்மாணிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வரும் அஇஅதிமுக பொதுச் செயலாளருமாக ஜெயலலிதா அவர்களை மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் சந்தித்த போது எடுத்த படம்.

இன்று ஆகஸ்ட் 5 அன்று மாலை 3 மணிக்கு போயஸ் தோட்டத்தில் உள்ள முன்னாள் முதல்வரின் இல்லத்தில் எதிர்கட்சி தலைவருமான அஇஅதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதாவை மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் தமுமுக பொதுச் செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக பொருளாளர் ஒ.யூ.ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருன் ரஷீத் ஆகியோர் சந்தித்தனர்.

அரை மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து கருத்து பறிமாறிக் கொண்டனர். அனைத்திந்திய அளவில் சிறுபான்மை மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க பரிந்துரைத்துள்ள நீதயரசர் ரங்கநாத் மி்ஸ்ரா ஆணையத்தின் அறிக்கையை உடனடியாக செயல்படுத்த மத்திய அரசை அஇஅதிமுக வலியுறுத்த வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அஇஅதிமுக பொதுச் செயலாளரிடம் கோரி்க்கை விடுத்தனர்.
செந்தூர் வண்டி தினசரி சேவை கோரி தொடர்வண்டி மறியல்: ம.ம.க.வினர் உட்பட 110 பேர் கைது!

திருச்செந்தூர்-சென்னை இடையில் இயங்கும் வாராந்திர செந்தூர் விரைவுத் தொடர்வண்டியை தினசரி இயக்க வலியுறுத்தி நேற்று புதன்கிழமை மாலை தொடர்வண்டியை மறிக்க முயன்ற மனித நேய மக்கள் கட்சியினர் உள்பட 110 பேரை போலீஸார் கைது செய்தனர்.

செந்தூர் விரைவுத் தொடர்வண்டியை தினசரி இயக்கவும், முன்பு சென்று கொண்டிருந்த அதே கார்டு லைன் வழித்தடத்தில் இயக்கவும் வலியுறுத்தி புதன்கிழமை மாலை காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்வண்டி மறியல் நடத்தப்போவதாக மனித நேய மக்கள் கட்சியினர் அறிவித்திருந்தனர்.

அதன்பட்டி காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையத்திற்கு முன்பாக காயல்பட்டினம் - ஆறுமுகனேரி நெடுஞ்சாலையில் மனித நேய மக்கள் கட்சியினர் மாலை 4 மணியளவில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மனித நேய மக்கள் கட்சி மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி தலைமை வகித்தார்.





மாவட்ட செயலாளர் எச்.பீரப்பா, பொருளாளர் ஏ.வி.எஸ்.ஹாஜா மெய்தீன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட தலைவர் எஸ்.எம்.பி.முஹம்மது நெய்னா, செயலாளர் ஆஸாத், நகர தலைவர் ஜாஹீர், மாவட்ட துணைச் செயலாளர் ஜே.அப்துல் சமது, துணைத் தலைவர் நவாஸ், மனித நேய மக்கள் கட்சி நகர செயலாளர் எம்.அப்துல்லாஹ், மூலக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் ஐ.குமரேசன், திருச்செந்தூர் நகர அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் வெ.தியாகராஜன், செயலாளர் அ.துரைசிங், பொருளாளர் செ.சுடலை, யாதவ வியாபாரிகள் சங்கத் தலைவர் கணேசன், செயலாளர் வள்ளி நாயகம், பொருளாளர் நட்டார், நாடார் வியாபாரிகள் சங்க தலைவர் காமராஜ் வழக்கறிஞர் கண்ணன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிந்து தொடர்வண்டி நிலையத்திற்கு தொடர்வண்டி மறியல் செய்ய புறப்பட்ட அவர்களை திருச்செந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அப்பாத்துரை கைது செய்தார். தொடர்வண்டி மறியல் போராட்டத்தினையொட்டி காயல்பட்டினம் தொடர்வண்டி நிலையம் முழுவதும் பலத்த காவல் போடப்பட்டிருநதது.
ஆய்வாளர்கள் பார்த்தீபன் (ஆறுமுகனேரி), ஜெயப்பிரகாஷ் (திருச்செந்தூர்), ராஜாமணி (அனைத்து மகளிர்), உதவி ஆய்வாளர்கள் வில்சன், சபீதா, சங்கரேஸ்வரி, வைகுண்டம் மற்றும் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
திருச்செந்தூர் - திருநெல்வேலி பாஸஞ்சர் தொடர்வண்டி சென்ற பின் 110 பேரை கைது செய்து அருகிலுள்ள ரத்னா திருமண மண்டபத்தில் அடைத்தனர்.