திங்கள், 9 ஆகஸ்ட், 2010


அதிமுகவுடன் கூட்டணி- தமுமுக அறிவிப்பு

தமுமுக இயக்கத்தின் அரசியல் கட்சியான மமக கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டது.இந்நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தமுமுக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

கடந்த 5ம் தேதி, அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலிதாவை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் தமுமுகவினர் சந்தித்தனர். மாலை 3 மணிக்கு நடந்த இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீண்டது.

இந்த சந்திப்பில் தமுமுக தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், பொதுச்செயலாளர் ஹைதர் அலி உட்பட 5 பேர் கொண்ட குழு பங்கேற்றது.

இதையடுத்து தமுமுக பொதுச்செயலாளர் ஹைதர்அலி மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது ஆகியோர் இன்று தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள், ‘’பாளையில் நடந்த புளியங்குடி அப்துல் ரஷீது கொலை வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்த பிறகும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.


நெல்லை எஸ்.பி.யை கண்டித்து செப்டம்பர் 25ம் தேதி பாளையில் தமுமுக சார்பில் பேரணி நடத்தப்படும்’’ என்று தெரிவித்தார்கள்.

அவர்கள் மேலும், ‘’வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்திருக்கிறோம்’’என்று தெரிவித்தனர்.

-- நக்கீரனில் வெளிவந்த செய்தி--

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக