புதன், 1 அக்டோபர், 2014

பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்காக வாரி வழங்கிடுங்கள்.....


யா அல்லாஹ் கஷ்மீர் மக்களின் துயர் துடைப்பாயாக....

பாதிக்கப்பட்ட நம் சொந்தங்களுக்காக வாரி வழங்கிடுங்கள்.....

முத்துப்பேட்டை தமுமுக மாணவரணிவியாழன், 25 செப்டம்பர், 2014

முத்துப்பேட்டை நகர தமுமுக நிர்வாக குழு கூட்டம் கூடியது, மர்கஸ் உருவாக்க தீர்மானம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பில் நேற்று 23.09.2014 காலை 10 மணியளவில் நிர்வாக குழு மற்றும் ஆலோசனை கூட்டம் தமுமுக மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா கலந்து கொண்டார்.மேலும் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1

முத்துப்பேட்டையின் தற்போதைய சூழ்நிலை கருத்தில் கொண்டு நகர நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமுமுக நகர தலைவராக செயல்பட்டு வந்த நெய்னா முகம்மது அவர்களை ம.ம.க ஒன்றிய செயலாளராக மாவட்டம் அறிவித்துள்ளதால் தமுமுக ம.ம.க நகர தலைவராக M.சம்சுதீன் அவர்களை ஏகமனதாக நியமிக்கப்பட்டது.

தீர்மானம் - 2

முத்துப்பேட்டையில் 22 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு அச்சுருத்தலையும்,பாதுகாப்பின்மையும்,பொருளாதார இழப்புகளையும் மற்றும் அப்பாவிகளின் மீதான வழக்குகளையும் முழவதுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு.மூன்று கட்டமாக போராட்டத்தினை முன்னெடுப்பது என்றும் இப்பிரச்சனைகளை பாதியில் விடாத படி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் - 3

முத்துப்பேட்டை தமுமுகவிற்கு என தனியாக ஒரு மர்கஸ் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை நகர நிர்வாகம் எடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் - 4


மேலும் நகர பொதுக்குழுவை கூட்டி இந்த தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

செவ்வாய், 23 செப்டம்பர், 2014

DIG யை சந்தித்த தமுமுக பொதுச்செயலாளர்


முத்துப்பேட்டையில் கடந்த 3 ம் தேதி காவிகளால் முஸ்லிம்கள் மீது நடந்த வன்முறை தொடர்பாக இன்று தமுமுகவின் பொது செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் தஞ்சை மண்டல DIG யை நேரில் சந்தித்து முறையிட்டு முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள்.

மமக மாநில அமைப்பு செயலளார் ராவுத்தர்ஷா,தமுமுக மாவட்ட தலைவர் முஜீபுர் ரஹ்மான,தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன்,மமக மாவட்ட செயலாளர் சீனி.ஜெகபர் சாதிக்,மாவட்ட பொருளாளர் ஹக்,தமுமுக மாவட்ட துணை தலைவர் முகமம்து அலீம், மமக நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முகம்மது,தமுமுக மாவட்ட மாணவரணி செயலாளர் முகமம்து பைசல் உடன் இருந்தார்கள்


முத்துப்பேட்டைக்கு தமுமுக பொதுச்செயலாளர் அப்துல் சமது வருகை


முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் போது காவி கலவரக்காரர்கள் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதோடு பெண்களை இழிவான முறையில் பேசியும் கலவரம் வழக்க முற்பட்டனர். 3000 க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தும் இக்கலவரகர்ர்களையும் அவர்களின் அராஜகங்களையும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததே தவிற உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க காவல்துறை முன்வரவில்லை. இதனை கண்டித்து உடனடியாக திரண்ட முஸ்லிம்களிடம் காவல்துறை சமரசம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாயலவில் மட்டுமே சொன்னது.

உடனடியாக களம் இறங்கிய தமுமுகவினரும் பாதிக்கப்பட்டோரும் காவல் நிலையம் சென்று முறையாக கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கு வழக்கு கொடுத்தனர். பின்னர் சிலரை மட்டுமே காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில் தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது, ம.ம.க மாநில அமைப்புசெயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்ட திருவாரூர், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட வீடுகளையும் கடைகளையும் பார்வையிட்டனர். பின்னர் ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசித்தனர். பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து காவல்துறையில் அலட்சிய போக்கை கண்டித்தனர்.


அதன் பின்னர் தமுமுக தலைமையின் அறிவுறுத்தலின் படி மேல் நடவடிக்கை சட்டரீதியாக எடுப்பதற்காக முத்துப்பேட்டை தமுமுகவினர் முயன்று வருகின்றனர். மாவட்ட துணை தலைவர் முத்துப்பேட்டை அலீம் தலைமையில் கடந்த வாரம் தமுமுக தலைமையகம் சென்று மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி, மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி, மாநில பொதுச்செயலாளர் அண்ணன் ப.அப்துல் சமது ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் வழிகாட்டல்படி மேல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று 23-09-2014 தமுமுக மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் முத்துப்பேட்டைக்கு வருகை தந்தனர். தமுமுக அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவிட்டு ஆசாத் நகர் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன், மாவட்ட பொருளாளர் திருவாரூர் ஹக், முன்னாள் முத்துப்பேட்டை நகர தலைவரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சம்சுதீன், முத்துப்பேட்டை ஒன்றிய ம.ம.க செயலாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட துணை தலைவர் முத்துப்பேட்டை அலீம், ம.ம.க நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முஹம்மது, முன்னாள் நகர தலைவர் முஹம்மது தாவூது, முன்னாள் நகர பொருளாளர் சதாத் அலி, நகர துணை தலைவர் முஹம்மது யாசீன், கத்தார் பொருப்பாளர் ஹாமீம்,  உள்ளிட்ட மாணவரணி மற்றும் மாணவர் இந்தியா நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தொகுப்பு – முத்துப்பேட்டை முகைதீன்ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் நியமனம்


திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், மாவட்ட பொருளாளர் திருவாரூர் ஹக் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கஷ்மீர் மக்களுக்கு தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்டம் முழுவதும் வசூல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. பின்னர் கழக செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிப்பது குறித்தும் பேசப்பட்டு இறுதியாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளராக முத்துப்பேட்டை மு.நெய்னா முஹம்மது அவர்களும், தமுமுக ஒன்றிய செயலாளராக நாச்சிக்குளம் ரஷீத் அவர்களும், திருத்துறைப்பூண்டி ம.ம.க ஒன்றிய செயலாளராக கட்டிமேடு ராவுத்தரப்பா அவர்களும், தமுமுக ஒன்றிய செயலாளராக திருத்துறைப்பூண்டி அஷாருத்தீன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பணி சிறக்க பிரார்திப்போம்...


முத்துப்பேட்டை தமுமுக சார்பில் கூட்டு குர்பானி


முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பில் கூட்டு குர்பானி வழங்கப்பட இருக்கிறது. இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளவும்

மாடு ஒரு பங்கு – 1250
ஒட்டகம் ஒரு பங்கு – 11,000

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
முத்துப்பேட்டை நகரம்

மேலும் தொடர்புக்கு

7418977919 , 9865557556


ஆம்புலன்ஸிற்காக வீடுகள் தோறு நிதி திரட்டும் தமுமுக நிர்வாகிகள்


முத்துப்பேட்டை தமுமுகவின் பழைய ஆம்புலன்ஸ் வாகனம் பழுதடைந்துவிட்டதால் தொடர்ந்து அதனை இயக்க முடியாத காரணத்தினால் தமுமுக சார்பில் புதிய ஆம்புலன்ஸ் வாங்குவதற்கு முத்துப்பேட்டை நகர நிர்வாகிகள் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர். தற்போது ஊர் முழுவதும் இல்லங்கள் தோறும் ஆம்புலன்ஸிற்கான நிதி திரட்டப்பட்டு வருகிறது.


செவ்வாய், 16 செப்டம்பர், 2014

புழு சுருண்டது! மாயைகள் உடைந்தது!

இடைத்தேர்தல் முடிவுகள்!
புழு சுருண்டது! மாயைகள் உடைந்தது!
பாஜக மத்திய ஆட்சியை கைப்பற்றிய பிறகு நடைபெற்ற நாடு தழுவிய இரண்டாவது இடைதேர்தலிலும் பா.ஜ.க பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது. குறிப்பாக நாடாளுமன்ற தேர்தலில் உ.பி.யில் 80 தொகுதிகளில் பாஜக 71 இடங்களையும், கூட்டணி கட்சியான அப்னாதளம் 1 தொகுதியிலும் வென்றனர். இந்த வெற்றிதான் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உதவியது.
உத்திர பிரதேசம்
உ.பி.யில் நடைபெற்ற இடைத்தேர்தலில் சட்டமன்றத்தில் 11 தொகுதிகளில் 8 இடங்களை சமாஜ்வாடியும், பாஜக 3 இடங்களையும் வென்றுள்ளன. அங்கு தேர்தல் நடைபெற்ற, 1 பாராளுமன்ற தொகுதியிலும் சமாஜ்வாடி வென்றுள்ளது.
உபி தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமானதாகும். நாட்டின் பெரிய மாநிலம் மட்டுமல்ல... அதிக மக்கள் தொகை கொண்ட பல சாதி, மத மக்கள் சம பலத்தோடு இருக்கும் மாநிலமுமாகும். அங்கு காவிப்படை தளபதிஅமித்ஷா களமிறங்கினார். இப்போது பெரும் வெற்றி அடுத்த சட்டமன்றத்தை கைப்பற்ற உதவும் என்றார். லவ்ஜிஹாத்என்ற பெயரில் அங்கு சிறு,சிறு கலவரங்களை சிறுபான்மையினருக்கு எதிராக நடத்திக் கொண்டிருந்தனர். கலவரங்கள் மூலம் அரசியல் அறுவடை செய்யலாம் என கருதினர் இங்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் போட்டியிடததால் அவர்களின் வாக்குகள் பாஜகவுக்கு உதவும் என்றார்கள். ஆயினும் யாதவர்கள், முஸ்லிம்கள், தலித்துகளில் ஒரு பகுதியினர் ஒன்று சேர்ந்து சிந்தாமல், சிதறாமல் சமாஜ்வாடிக்கு ஆதரவளித்து பா.ஜ.கவின் கனவை தகர்த்துள்ளனர்.
ராஜஸ்தான்
ராஜஸ்தான் மாநிலத்திலும் திருப்பங்கள் நிகழ்ந்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் அங்கு அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருந்தது இப்போது நடைபெற்ற இடைத்தேர்தலில் நான்கில் மூன்று இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக ஒரு இடத்தில் மட்டுமே குறைந்த வாக்குகளில் வென்றுள்ளது.
குஜராத்
மோடி வித்தைகள் நடைபெற்ற குஜராத்தில், மோடி ராஜினாமா செய்த வடோதரா பாராளுமன்ற தொகுதியை பாஜக தக்கவைத்துக் கொண்டது எனினும் அங்கு வெறும் 3 லட்சத்து 29 ஆயிரம் வாக்குகளில் பாஜக வென்றுள்ளது ஆனால் முன்பு 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார். இங்கு பாஜவுக்கு முன்பைவிட 2 லட்சத்து 41 ஆயிரம் வாக்குகள் குறைந்துள்ளது.
9 சட்டமன்ற தொகுதிகளில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி காவி கோட்டையை கலகலக்க செய்திருக்கிறது. குஜராத்தில் காங்கிரஸ் கட்சி நல்ல முன்னேற்றத்தை பெற்றுள்ளது. பாஜக வெற்றி பெற்ற 6 தொகுதிகளிலும் முன்பைவிட வாக்குகளை குறைவாக பெற்றுள்ளது.
அஸ்ஸாம்
அஸ்ஸாமில் தேர்தல் நடைபெற்ற மூன்று சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றில் மட்டுமே பாஜக வென்றுள்ளது. காங்கிரஸ் ஒரிடத்திலும், முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியான அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக கட்சி (AIUDF) ஒரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இங்கு கடந்த ஒன்றரை வருடங்களாக பல கலவரங்களை காவி தீவிரவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தி வந்தனர். ஆயினும் பாஜகவால் மூன்றில் 1 தொகுதியை மட்டுமே குறைந்த வாக்குகளில் வெல்ல முடிந்துள்ளது.
திரிபுரா
திரிபுராவில் காங்கிரசும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் சமமாக களம் கண்டன. தேர்தல் நடைபெற்ற ஒரே சட்டமன்ற தொகுதியையும் மார்க்ஸிஸ்ட் கைப்பற்றியுள்ளது இங்கு பாஜக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
சிக்கிம்
சிக்கிம் மாநிலத்தில் வழக்கம்போல் மாநில கட்சி அந்த ஒரு சட்டமன்ற தொகுதியை கைப்பற்றி உள்ளது. அங்கு பாஜக சுவடே தெரியவில்லை.
ஆந்திரா
ஆந்திராவில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் தெலுங்குதேசம் வென்றுள்ளது. இங்கு காங்கிரஸ் மூன்று கட்சிகளாக உடைந்ததும், ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸின் வளர்ச்சியும் தெலுங்கு தேசத்திற்கு வாழ்வை தந்துள்ளது.
தெலுங்கனா
தெலுங்கானாவில் 1 பாராளுமன்ற தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது அதை தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கைப்பற்றிவிட்டது இங்கும் பாஜக மூன்றாமிடமே பிடித்தது.
மேற்கு வங்காளம்
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் 1 தொகுதியில் வென்றுள்ளது. அங்கு மார்க்ஸிஸ்ட் கம்யூனிட்ஸ்ட் கட்சியிடமிருந்து 1 தொகுதிகளை பாஜக வென்றுள்ளது.
இம்மாநிலத்தில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குதான் பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பாஜகவுக்கு எதிராக கம்யூனிட்ஸ்டுகளுடனும் கை கோர்க்க தயார் என மம்தா கூறினார். அதை கம்யூனிஸ்டு கட்சிகள் நிராகரித்தனர். இது குறித்து மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தோழர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டையே மீட்க வந்த இரண்டாம் வல்லபாய் படேல் என தன்னை கருதிக் கொண்ட மோடியும், இந்துத்துவாவின் புதிய தளபதியாக முடிசூட்டிக்கொண்ட அமித்ஷாவும், இனி என்ன செய்யப்போகிறார்கள்? என்று தெரியவில்லை. பாராளுமன்ற வெற்றிகளுக்கு உரிமைக்கொண்டாடிய இவர்கள்தான் இத்தோல்விகளுக்கும் பொறுப்பேற்க வேண்டும். அளவுக்கு அதிகமான மதவெறி அவர்களையே வீழ்த்திவிட்டது. மக்கள் அதை ஏற்கவில்லை.
சிறுபான்மையினருக்கு எதிரான பீதியூட்டல் மூலம் இந்துத்துவ மோகத்தை உருவாக்கி, வாக்குகளை அறுவடை செய்யலாம் என செயல்பட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அரண்டு போயிருக்கிறார்கள்.
இனிதான் ஆபத்து ஏனெனில் தங்கள் அரசியலை பாதுகாக்க நாடெங்கிலும் சிறுபான்மையினருக்கு எதிராக புதிய சதிகளை அரங்கேற்றுவார்களோ என்ற ஐயத்தையும் நிராகரிக்க முடியாது.

தமிமுன் அன்சாரி 
ஆசிரியர் - மக்கள் உரிமை
பொதுச்செயலாளர் ம.ம.க


திங்கள், 15 செப்டம்பர், 2014

முத்துப்பேட்டை ஆம்புலன்ஸிற்கு உதவிடுவீர் !!


நமது ஊரான முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 2006 முதல் 8 ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களின் தேவைகளையும் ஆம்புலன்ஸ் பூர்த்தி செய்துவருகிறது. சாலை விபத்துகள் மற்றும் எதிர்பாராத பாதிப்புகளிலும், மழைகாலங்கள் போன்ற இயற்கை பாதிப்புகளிலும் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் அதன் தொண்டர்கள் செய்துவரும் களப்பணிகள் அனைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்து வருவதோடு மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு தனது சேவைகளை தொடர்ந்து செய்துவந்துள்ளது.

இந்நிலையில் 8 ஆண்டுகளை தாண்டிவிட்டதால் ஆம்புலன்ஸ் பழுதடைந்து தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மிக குறைந்த கட்டணத்திலும், பல நேரங்களில் இலவசமாகவும், இலாப நோக்கற்ற அடிப்படையில் செயல்படுத்தியதாலும் போதிய இருப்பு நிர்வாகத்தில் இல்லாமல் போய்விட்டது. எனவே இன்ஷா அல்லாஹ் மீண்டும் நமது சமுதாய மக்களின் உதவியோடும், ஒத்துழைப்போடும், பிராத்தனைகளோடும் நமது ஊருக்கான புதிய ஆம்புலன்ஸ் வாங்க முடிவெடுத்துள்ளோம். ஆகவே தாங்கள் தாராளமாக நிதியுதவி செய்து சமுதாயப்பணிகளுக்கு உதவிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

ஆம்புலன்ஸ்க்கான பொறுப்புக்குழுவை தொடர்புகொண்டு தங்களுடைய நன்கொடைகளை வாரி வழங்குங்கள்.

S.ஹூமாயூன் கபீர் – 7845416011 (முன்னாள் நகர தலைவர் தமுமுக)

M.சம்சுதீன் – 7358159830 (முன்னாள் நகர தலைவர் தமுமுக)

N.R.அலி – 9791401101 (முன்னாள் புரைதா மண்டல தலைவர் தமுமுக)

L.நிஜாம் – 9715394088 (முன்னாள் கத்தார் பொறுப்பாளர் தமுமுக)

வழக்கறிஞர் தீன் முஹம்மது – 9865557556 (நகர செயலாளர் ம.ம.க)

வளைகுடா வாழ் பொறுப்பாளர்கள் :

கத்தார் பொருப்பாளர் 

O.K.M சேக் தாவுது - 0097455369600

நசீர் அகமது - 0097466249193


துபாய் பொருப்பாளர் 

அப்துல் ரஃவூப் - 00971507765912

அசாருதீன் - 00971527149350

சித்திக் அகமது - 00971562469542


அஜ்மான் பொருப்பாளர் 

முத்துப்பேட்டை முகைதீன் 00971503864318


குவைத் பொருப்பாளர் 

கட்டுமாவடி அஜீஸ் 0096599489481


அபுதாபி பொருப்பாளர் 

அஜீஸ் ரஹ்மான் - 00971 505717076


சவூதி அரேபியா பொருப்பாளர்

ஜர்ஜீஸ் அஹமது – 00966507834238

தொண்டர்படை ரஹ்மத்துல்லாஹ் – 00966503422741


உங்கள் நண்கொடைகளை கீழ்கண்ட பேங்க் அக்கவுண்டிற்கும் அனுப்பலாம்...

TAMILNADU MUSLIM MUNNETRA KAZHAGAM
AC NO - 122602000000503
INDIAN OVERSEAS BANK
MUTHUPET BRANCH


ஒர் உயிரை வாழவைத்தவர் மனித இனத்தையை வாழ வைததவர் போன்றாவார்

உங்கள் நண்கொடைகளை எதிர்பார்த்து மக்கள் சேவையில்...


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் 
முத்துப்பேட்டை நகரம், திருவாரூர் மாவட்டம்பட்டுக்கோட்டையில் உள்ள தமுமுக ஆம்புலன்ஸ் படங்கள் மாதிரிக்கு தரப்பட்டுள்ளன. இதே போன்ற வாகனம் இறக்க உள்ளோம்.