வியாழன், 25 செப்டம்பர், 2014

முத்துப்பேட்டை நகர தமுமுக நிர்வாக குழு கூட்டம் கூடியது, மர்கஸ் உருவாக்க தீர்மானம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பில் நேற்று 23.09.2014 காலை 10 மணியளவில் நிர்வாக குழு மற்றும் ஆலோசனை கூட்டம் தமுமுக மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. இதில் மாவட்ட, நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தார்கள். இக்கூட்டத்தில் மமக மாநில அமைப்பு செயலாளர் ராவுத்தர்ஷா கலந்து கொண்டார்.மேலும் கிழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1

முத்துப்பேட்டையின் தற்போதைய சூழ்நிலை கருத்தில் கொண்டு நகர நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமுமுக நகர தலைவராக செயல்பட்டு வந்த நெய்னா முகம்மது அவர்களை ம.ம.க ஒன்றிய செயலாளராக மாவட்டம் அறிவித்துள்ளதால் தமுமுக ம.ம.க நகர தலைவராக M.சம்சுதீன் அவர்களை ஏகமனதாக நியமிக்கப்பட்டது.

தீர்மானம் - 2

முத்துப்பேட்டையில் 22 ஆண்டுகளாக விநாயகர் ஊர்வலம் என்ற பெயரில் முஸ்லிம்களுக்கு அச்சுருத்தலையும்,பாதுகாப்பின்மையும்,பொருளாதார இழப்புகளையும் மற்றும் அப்பாவிகளின் மீதான வழக்குகளையும் முழவதுமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு.மூன்று கட்டமாக போராட்டத்தினை முன்னெடுப்பது என்றும் இப்பிரச்சனைகளை பாதியில் விடாத படி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து செய்வது என்று முடிவு செய்யப்பட்டது.

தீர்மானம் - 3

முத்துப்பேட்டை தமுமுகவிற்கு என தனியாக ஒரு மர்கஸ் ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகளை நகர நிர்வாகம் எடுக்கும் என்று தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் - 4


மேலும் நகர பொதுக்குழுவை கூட்டி இந்த தீர்மானங்களை நிறைவேற்றி செயல்படுத்துவது என இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக