ஞாயிறு, 21 செப்டம்பர், 2014

முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர்கள் நியமனம்


திருவாரூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருவாரூரில் மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், மாவட்ட பொருளாளர் திருவாரூர் ஹக் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் கடும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட கஷ்மீர் மக்களுக்கு தலைமையின் வேண்டுகோளுக்கிணங்க மாவட்டம் முழுவதும் வசூல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. பின்னர் கழக செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் நியமிப்பது குறித்தும் பேசப்பட்டு இறுதியாக கீழ்கண்டவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளராக முத்துப்பேட்டை மு.நெய்னா முஹம்மது அவர்களும், தமுமுக ஒன்றிய செயலாளராக நாச்சிக்குளம் ரஷீத் அவர்களும், திருத்துறைப்பூண்டி ம.ம.க ஒன்றிய செயலாளராக கட்டிமேடு ராவுத்தரப்பா அவர்களும், தமுமுக ஒன்றிய செயலாளராக திருத்துறைப்பூண்டி அஷாருத்தீன் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் பணி சிறக்க பிரார்திப்போம்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக