செவ்வாய், 23 செப்டம்பர், 2014

முத்துப்பேட்டைக்கு தமுமுக பொதுச்செயலாளர் அப்துல் சமது வருகை


முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலத்தின் போது காவி கலவரக்காரர்கள் முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகளை கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதோடு பெண்களை இழிவான முறையில் பேசியும் கலவரம் வழக்க முற்பட்டனர். 3000 க்கும் அதிகமான காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்தும் இக்கலவரகர்ர்களையும் அவர்களின் அராஜகங்களையும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்ததே தவிற உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்க காவல்துறை முன்வரவில்லை. இதனை கண்டித்து உடனடியாக திரண்ட முஸ்லிம்களிடம் காவல்துறை சமரசம் பேசி நடவடிக்கை எடுப்பதாக வாயலவில் மட்டுமே சொன்னது.

உடனடியாக களம் இறங்கிய தமுமுகவினரும் பாதிக்கப்பட்டோரும் காவல் நிலையம் சென்று முறையாக கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கு வழக்கு கொடுத்தனர். பின்னர் சிலரை மட்டுமே காவல்துறை கைது செய்தனர். இந்நிலையில் தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது, ம.ம.க மாநில அமைப்புசெயலாளர் ராவுத்தர் ஷா உள்ளிட்ட திருவாரூர், தஞ்சை மாவட்ட நிர்வாகிகள் முத்துப்பேட்டைக்கு வருகை தந்து பாதிக்கப்பட்ட வீடுகளையும் கடைகளையும் பார்வையிட்டனர். பின்னர் ஜமாத் நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசித்தனர். பத்திரிக்கையாளர்களையும் சந்தித்து காவல்துறையில் அலட்சிய போக்கை கண்டித்தனர்.


அதன் பின்னர் தமுமுக தலைமையின் அறிவுறுத்தலின் படி மேல் நடவடிக்கை சட்டரீதியாக எடுப்பதற்காக முத்துப்பேட்டை தமுமுகவினர் முயன்று வருகின்றனர். மாவட்ட துணை தலைவர் முத்துப்பேட்டை அலீம் தலைமையில் கடந்த வாரம் தமுமுக தலைமையகம் சென்று மூத்த தலைவர் அண்ணன் செ.ஹைதர் அலி, மாநில தலைவர் மவ்லவி ஜே.எஸ்.ரிபாயி, மாநில பொதுச்செயலாளர் அண்ணன் ப.அப்துல் சமது ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி அவர்களின் வழிகாட்டல்படி மேல் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் இன்று 23-09-2014 தமுமுக மாநில பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது அவர்கள் முத்துப்பேட்டைக்கு வருகை தந்தனர். தமுமுக அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்திவிட்டு ஆசாத் நகர் ஜமாத் நிர்வாகிகளை சந்தித்து சட்டரீதியிலான நடவடிக்கைகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

மாவட்ட தலைவர் முஜிபுர் ரஹ்மான், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சீனி ஜெஹபர் சாதிக், தமுமுக மாவட்ட செயலாளர் குத்துபுதீன், மாவட்ட பொருளாளர் திருவாரூர் ஹக், முன்னாள் முத்துப்பேட்டை நகர தலைவரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான சம்சுதீன், முத்துப்பேட்டை ஒன்றிய ம.ம.க செயலாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட துணை தலைவர் முத்துப்பேட்டை அலீம், ம.ம.க நகர செயலாளர் வழக்கறிஞர் தீன் முஹம்மது, முன்னாள் நகர தலைவர் முஹம்மது தாவூது, முன்னாள் நகர பொருளாளர் சதாத் அலி, நகர துணை தலைவர் முஹம்மது யாசீன், கத்தார் பொருப்பாளர் ஹாமீம்,  உள்ளிட்ட மாணவரணி மற்றும் மாணவர் இந்தியா நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தொகுப்பு – முத்துப்பேட்டை முகைதீன்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக