புதன், 30 ஜூன், 2010

பெட்ரோல் - டீசல் விலையை கண்டித்து நாகையில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல் - டீசல் விலையை கண்டித்து நாகையில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


அத்தியாவசியான எரிபொருள்களான பெட்ரோல் - டீசல் கியாஸ் சிலிண்டர் அகியவற்றின் விலையை உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மனிதநேய மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகையிலும் மனிதநேய மக்கள் கட்சியின் நாகை தெற்கு மாவட்ட குழுவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை புதிய பஸ் நிலையத்தின் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் செயது முபாரக் தலைமை தாங்கினார். பொருளாளர் முகம்மது சுலைமான், துணை செயலாளர்கள் முஜிபுர்ரஹ்மான், சாகுல்ஹமீது, வர்த்தகரணி செயலாளர் முகம்மது ரபீக், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜபருல்லாஹ், பரகத் அலி, சதக்கத்துல்லாஹ், பஜ்லு முகம்மது, ஹமீது ஜெகபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கண்டன உரையை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.யூசுப் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியை சார்ந்த பொறுப்பாளர்கள் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர். முடிவில் நாகை நகர செயலாளர் முகம்மது ரபீக் நன்றி கூறினார்.





நன்றி - தினத்தந்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக