ஞாயிறு, 13 ஜூன், 2010


தமுமுக ஜுபைல் கிளை நடத்திய தர்பியா முகாம்

அல்லாஹ்வின் பேரருளால் சஊதி அரேபியா தமுமுக கிழக்கு மண்டலம் - ஜுபைல் கிளை நடத்திய தர்பியா முகாம் பற்றிய செய்திகள்:

குறிப்பிட்டபடி ஜுன் 11, 2010 வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு இம்முகாம் எஸ்கேஎஸ் கேம்ப் பள்ளிவாசலில் துவங்கியது. தமுமுக சிறார் அணியைச்சேர்ந்த சகோதரர்கள் யஹ்யா மற்றும் ஸமீர் ஆகியோரின் கிராஅத்தோடு துவங்கிய இம்முகாமுக்கு வந்திருந்த அனைவரையும் கிளைச் செயலாளர் நாகூர் சுல்தான் சிராஜுதீன் அவர்கள் தனக்கே உரியபாணியில் வரவேற்று வாழ்த்துரை வழங்கினார். அடுத்ததாக அஷ்ஷேஹ். முஹம்மது ஷரீஃப் பாகவி அவர்கள் தலைமையுரையாற்றினார்கள். தர்பியாவின் அவசியத்தைப்பற்றி இவர் ஆற்றிய உரை கலந்துகொண்டோருக்கு மிகவும் பயனுள்ள தகவல்களுடன் அமைந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து 'ஆயத்துல் குர்ஸீ, ஸையதுல் இஸ்திஃபார்' ஆகியவற்றை பொருளுடன் மனனம் செய்யும் போட்டி நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களும் ஆர்வத்துடம் மனனம் செய்து இறுதிப்போட்டிக்கு தயாரானார்கள். நிறைவாக மனனப்போட்டியில் பொருளுடன் மனனம் செய்து மூன்று சகோதரர்கள் முதல் மூன்று பரிசுகளை தட்டிச்சென்றனர். தொடர்ச்சியாக அஷ்ஷேஹ் ஷரீஃப் பாகவியின் துஆ அல் இபாதா என்ற தலைப்பில் ஜும்மா பேருரை நடைபெற்றது.

மதிய உணவுக்குப்பின் இரண்டாம் அமர்வு துவங்கியது. இதன் துவக்கமாக அஷ்ஷேக் அலாவுதீன் பாகவி அவர்களின் சிறப்புரை நடைபெற்றது. தஃவாபணியும் தமுமுகவும் என்ற தலைப்பில் தமுமுகவின் எண்ணற்ற தஃவா பணிகளை ஆதாரங்களோடு தனக்கே உரிய பாணியில் எடுத்தியம்பியது, கலந்துகொண்டோரின் உள்ளங்களை கட்டிப்போட்டது.

இதன்பின் நடந்த பேச்சுப்பயிற்சிப் பட்டறையை கிழக்கு மண்டல தமுமுக-வின் தர்பியாக்குழு பொருப்பாளர்களின் ஒருவரான சகோதரர் அப்துல் ஹலீம் (அப்கைக்)அவர்கள் தலைமையேற்று நடத்தினார். இதில் ஜுபைல் கிளை சார்பாக 'உளத்தூய்மை, நேரம் குறிக்கப்பட்ட கடமை தெழுகை, நாவைப்பேணுதல் ஆகிய தலைப்புகளில் முறையே சகோதரர்கள் தமீம் அன்சாரி, அபூஸாலிஹ், நிஜாம் முஹைதீன் ஆகியோரின் பேச்சாற்றல் கலந்துகொண்டோரை மட்டுமல்லாது, பயிற்சியாளரையும் வியப்படைய வைத்தது.

அஸர் தொழுகை மற்றும் தேநீர் இடைவேளையைத் தொடர்ந்து, தமுமுக ஜுபைல் கிளையின் இணைச் செயலர்களில் ஒருரான சித்தார்கோட்டை சகோதரர் ஃபாசில்கான் அவர்கள் மூன்றாம் அமர்வை துவக்கிவைத்து தலைமையுரையாற்றினார். சுருக்கமான சொற்களால் சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது இவரது தலைமையுரை. இதன்பின் திக்ருகள், குர்ஆன் மனனப்பகுதி நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து அஷ்ஷேஹ் அக்ரம் நூரி அவர்கள் வெற்றிபெற்றோருக்கு பரிசுகள் வழங்கி, வாழ்த்துரை வழங்கினார்.

இறுதியாக கலந்துகொண்ட அனைவருக்கும் தஃவா பயான்களின் குருந்தகடுகள் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது. சகோதரர் தமீம் அன்சாரி அவர்களின் நன்றியுரையோடு இம்முஹாம் இறையருளாள் இனிதே நிறைவுபெற்றது. இந்நிகழ்ச்சி பயனுள்ளதாக இருந்ததாகவும், தொடர்ந்து இதுபோன்ற தர்பியா முஹாம்கள் நடைபெறவேண்டுமெனவும் விரும்புவதாக, கலந்துகொண்ட அனைவரும் கருத்துத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

அல்ஹம்துலில்லாஹ்....அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக