சனி, 9 நவம்பர், 2013

முத்துப்பேட்டை நகர மமக ஆலோசனை கூட்டம் !


முத்துப்பேட்டை நகர மமக ஆலோசனை கூட்டம் ! 


திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஆசாத் நகர் தமுமுக அலுவலகத்தில் நகர மமக ஆலோசனை கூட்டம் முன்னாள் மாவட்ட செயலாளர் மமக S.முகம்மது மாலிக் அவர்கள் தலைமையில் 09.11.2013 அன்று மாலை 6.30 மணியளவில் நடைப்பெற்றது. இதில் மமக நகர செயலாளர் வழக்கறிஞர் L.தீன் முகம்மது அவர்கள் முன்னிலை வகித்தார். 







இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் 1:


இலங்கையில் நடைபெரும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க்க கூடாது என்பதை முன்னிறுத்தி முத்துப்பேட்டை அனைத்து அரசியல் கட்சிகள் நடத்தும் கடையடைப்பில் மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு 



தீர்மானம் 2:

முத்துப்பேட்டையில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை தடுக்காத பேரூராட்சி நிர்வாகத்தை இக்கூட்டம் வன்மையாக கண்டிபத்தோடு , மீண்டும் நினையூட்டல் கடிதம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு நகர மனிதநேய மக்கள் கட்சி சார்பகா கொடுப்பதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



தீர்மானம் 3:

முத்துப்பேட்டை பிரதான சாலைகளின் மாடுகளின் தொல்லை அதிகமாக இருக்கிறது என்று இரண்டு மாதத்திற்க்கு முன்பு தமுமுக சார்பகா பேரூராட்சி நிர்வாகத்திற்க்கு கடிதம் கொடுத்தும். இது வரையும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதேபோல் தெருக்களில் நாய்களின் தொல்லையும் அதிகமாக இருந்து வருகிறது.பேரூராட்சி நிர்வாகம் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது. 



தீர்மானம் 4:

பொதக்குடி தமுமுக தொண்டர் அணி செயலாளர் அவர்கள் சாலை விபத்தில் இறந்துவிட்டதால் அவரது குடும்பத்திற்க்கு முத்துப்பேட்டை நகர தமுமுக சார்பகா நிதியுதவி செய்வதென தீர்மானிக்கபட்டது. 



இந்த கூட்டத்தில் ஜெகபர் சாதிக் ஒன்றிய செயலாளர் தமுமுக, முகமம்து பைசல் நகர செயலாளர் தமுமுக , தாவுதுஷா நகர பொருளாளர் தமுமுக, முகம்மது யாசீன் நகர துணைத்தலைவர் தமுமுக,முகமம்து நபீல் நகர துணை செயலாளர் மமக, மாணவர் அணி நிர்வாகிகள் கலந்துகொண்டார்கள்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக