ஞாயிறு, 29 ஜனவரி, 2012

சமுதாய பேரியியக்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு

த.மு.முக மற்றும் ம.ம.க வின் மாநில செயற்குழுவும், பொதுக்குழுவும் கடந்த 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்று முடிந்துள்ளது. தாம்பரத்தில் 27 ம் தேதி காலை 10 மணிக்கு நிர்வாகக்குழுவும் அதனை தொடர்ந்து 11 மணிக்கு மாநில செயற்குழுவும் நடைபெற்று பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. அடுத்த நாள் 28 ம் தேதி தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் காயிதே மில்லத் கலைக்கல்லூரியில் த.மு.மு.க மற்றும் ம.ம.க வின் மாநில பொதுக்குழு கூடியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த கழக மற்றும் கட்சியின் பல்வேறு மட்ட நிர்வாகிகள் சங்கமத்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.


1995ல் சமுதாய உரிமைகளை மீட்டெடுக்க உருவெடுத்த தமுமுக என்ற பேரியக்கம் பல சோதனைகளுக்கு மத்தியில் இறைவனின் மாபெரும் கிருபையால் ஓயாத கடல் அலைகள் போல அதிகார வர்க்கத்திற்கு அடிபணியாமல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாய் வறியவர்க்கு உதவி, மாணவ செல்வங்களுக்கு உதவி, இரத்தம் தேவைப்படுவர்களுக்கு இரத்த உதவி, மற்றும் அவசர உதவி என விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் உழைத்துக்கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிவோம். பொதுக்குழுவில் பல விவாதங்கள் நடைப்பெற்றாலும் புதிய நிர்வாகிகள் தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.


ஏனெனில் சமுதாயத்தின் ஒப்பற்ற தலைவர் பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ்வும், அதிகாரவர்க்கத்தை அதிரவைக்கும் அண்ணன் S.ஹைதர் அலி சாஹிப் அவர்களும் சீரிய வழிநடத்தலால் இயக்கத்தை சிலர் கூறுப்போட முயற்சித்தபோதும் கடுமையான சோதனையை இயக்கம் சந்திதப்போதும் மனம் தளராமல், பயப்படாமல் இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு சென்ற உன்னத தலைவர்கள். தமுமுக வின் சட்டவிதிகளின் படி ஒருவர் குறைந்தபட்சம் மூன்று முறை பதவி வகிக்கலாம். அதற்கு மேல் பதவி வகிக்க முடியாது என்ற விதிகளின் பேரா.டாக்டர்.M.H.ஜவாஹிருல்லாஹ், அண்ணன் S.ஹைதர் அலி ஆகிய இருவருமே பதவியில் தொடர முடியாது என்பதால் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வியோடு இந்த பொதுக்குழு மேலும் முக்கியத்துவம் பெற்றது.



புறம் பேசுபவர்களும் வாழ்நாள் முழுவதும் பதவியை பிடித்துக்கொண்டே வாழ வேண்டும் என்ற சுயநோக்கு கொண்டவர்களும் அதிகம் பொதுக்குழு முடிவை எதிர்பார்த்து காத்திருந்தனர் . பலர் அவர்களே மீண்டும் பதவிக்கு வரும் வகையில் சட்டவிதி மற்ற இயக்கங்கள் போல் மாற்றப்படும் என எதிர்பார்த்தனர். இவர்கள் அனைவருக்கும் சம்மட்டியடி கொடுக்கும் வகையில் தமுமுக வின் பொதுக்குழு முடிவுகள் அமைந்துள்ளன. தமுமுக மாநில நிர்வாகிகள் பதவி மோகம் பிடித்தவர்கள் இல்லை என்பதையும் பொதுக்குழு உறுப்பினர்கள் தனிநபர் துதிப்பாடிகள் இல்லை என்பதையும் இவ்வுலக மக்களுக்கு தெளிவாக்கப்பட்டிருக்கிறது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே.


தொடரட்டும் தமுமுகவின் பயணம் ....


மலரட்டும் சமுதாய மறுமலர்ச்சி .....


என்ற முழக்கத்தோடு இறைவனிடம் அனைவரும் இரு கை ஏந்தி பிரார்த்திப்போம்.















பொதுக்குழு உறுப்பினர்களின் அல்லாஹ் அக்பர் என்ற முழக்கத்தோடு கீழ்கண்ட சகோதரர்கள் த.மு.மு.க மற்றும் ம.ம.க வின் புதிய மாநில நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ்....


தலைவர் – த.மு.மு.க மற்றும் ம.ம.க
மவ்லவி. J.S.ரிஃபாயி ரஷாதி



பொதுச்செயலாளர் - த.மு.மு.க
சகோ.பி.அப்துல் சமது



பொருளாளர் - த.மு.மு.க மற்றும் ம.ம.க
சகோ.O.U.ரஹ்மத்துல்லாஹ்



பொதுச்செயலாளர் - ம.ம.க
அண்ணன் M.தமிமுன் அன்சாரி




--முத்துப்பேட்டை முகைதீன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக