ஞாயிறு, 11 டிசம்பர், 2011

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

முத்துப்பேட்டையில் அணைத்து ஜமாத்துகளும் ஒன்றிணைந்து ‘முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாத்’(MUMJ) என்ற பெயரில் பொது ஜமாத்தாக சில காலம் செயல்பட்டு வந்தது ஏதோ காரணமாக அது முடக்கப்பட்டு கிடப்பில் கிடந்து வந்தது. முத்துப்பேட்டை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் முடங்கியதிலிருந்து ஊர் கேட்பாரற்று கிடந்ததோடு அவரவர்கள் நாட்டாமை போல செயல்பட்டுவந்தார்கள். ஊரின் நலனுக்காக பாடுபட ஓர் தலைமையின் கீழ் பொது ஜமாத் இல்லாமல் இருந்த இந்த தருணத்தில் அமீரகத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் முத்துப்பேட்டை இஸ்லாமிய நல சங்கத்தின் முன் முயற்சியுடன் மீண்டும் அணைத்து ஜமாத்துகளும் ஒன்றிணைந்து “முத்துப்பேட்டை முஸ்லிம் ஜமாத்” (MMJ) என உருவாகியுள்ளது. கடந்த காலங்களைப்போல தலைவர். செயலாளர். பொருளாளர் என்று இல்லாமல் அணைத்து முஹல்லாவில் இருந்தும் தலா 1 நபர் வீதம் 10 நபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த 10 நபர்களையும் கொண்டு அமைப்புக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்குழு தான் எதிர்வரும் காலங்களில் ஊரின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் இறைவன் நாடினால். இந்த அமைப்புக்குழுவில் ம.ம.க வின் மாவட்டச் செயலாளர் சகோ.எஸ்.முஹம்மது மாலிக்.M.A., அவர்களும், தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் சகோ.வழக்கறிஞர்.எல்.தீன் முஹம்மது.BSc.,BL., அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்...


இந்த அணைத்து முஹல்லா கூட்டத்திற்கு முறையான அழைப்பு கொடுக்கப்பட்டும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் நூர் பள்ளியும், ஜாக் அமைப்பின் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகமும் பங்கெடுக்கவில்லை. தலைமையின் கட்டுபாடோ????



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக