செவ்வாய், 11 அக்டோபர், 2011

முத்துப்பேட்டை - மனிதநேய மக்கள் கட்சியின் உள்ளாட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு.

இறைவனின் திருப்பெயரால்...

முத்துப்பேட்டை – நகர கிளை மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் 2011 உள்ளாட்சி தேர்தல் அறிக்கையானது 11.10.2011 இன்று காலை 11.30 மணிக்கு முத்துப்பேட்டை – பெரிய கடைத்தெருவில் உள்ள மனித நேய மக்கள் கட்சியின் நகர கிளை அலுவலகத்தில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தொண்டர்கள் முன்னிலையில் பேரூராட்சி தலைவர் பதவிக்கு ”பஸ்” சின்னத்தில் போட்டியிடும் முஹம்மது மாலிக் அவர்கள் வெளியிட்டார்கள்.

இந்நிகழ்ச்சியில் நகரத்தலைவர். எம்.சம்சுதீன், துணைத்தலைவர். முஹம்மது யூசுப், தமுமுக நகர துணைசெயலாளர் எம். சித்திக் அஹமது, தமுமுக மாவட்ட துணை செயலாளர் வக்கீல் தீன் முஹம்மது, தமுமுக முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் எஸ். ஹீமாயூன் கபீர், தமுமுக நகர செயலாளர் எஸ். தாவூது, தமுமுக நகர பொருளாளர் ஜெகபர் சாதிக், தமுமுக நகர ஒன்றிய செயலாளர் எம். நெய்னா முஹம்மது, மனித நேய மக்கள் கட்சியின் நகர செயலாளர் கே.முஹம்மது யாசீன் மற்றும் கழக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

முத்துப்பேட்டையில் உள்ள பொது மக்கள் எதிர்பார்க்கும் 30 க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய தொகுப்பானது தேர்தல்; அறிக்கையாக வெளியிடப்பட்டது.




1. தினமும் காலை, மாலை சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு டேங்கர் லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும்

2. கொசுத்தொல்லை முற்றிலுமாக ஒழிக்கப்படும் (கொசுவினால் ஏற்படும் தொல்லைகள் முற்றிலும் தடுக்கப்படும்)

3. சுகாதார மேம்பாட்டிற்கு நிரந்தர பயன் அளிக்கும் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

4. தெருவிளக்குகள் இல்லாத பகுதிகளுக்கு உடனடியாக தெருவிளக்கு அமைத்து தரப்படும்.

5. சொத்து வரிவிதிப்பில் உள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு 20% வரி குறைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

6. பழுதடைந்த சாலைகள் உடனடியாக மேம்படுத்தப்படும்.

7. மக்கள் உடல்நலம் மற்றும் நோய்தடுப்புக்கு விரைந்து செயாலாற்றப்படும்.

8. முத்துப்பேட்டையில் உள்ள அணைத்து குளங்களும் தூய்மை படுத்தப்பட்டு சுகாதார குளங்களாக மாற்றப்படும்.

9. பேரூராட்சி அலுவலக பணிகள் விரைந்து நடக்க முழுமையாக கணினி மையமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

10. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் 24 மணி நேரத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

11. பொதுசுகாதாரம், துப்புரவு கழிவுநீர் அகற்றல் கழிப்பறை வசதி, திடக்கழிவு மேலாண்மை ஆகிய பணிகள் நவீனப்படுத்தப்படும்.

12. 17 வது மற்றும் 18 வது வார்டுகளில் (தெற்குக்காடு,மருந்தங்காவளி) நிலவும் குடிநீர் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வுகான மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைக்கப்படும்.

13. இரயில்வே நிலையம் அருகில் நவீன கழிப்பறை அமைத்து தரப்படும்.

14. நகரின் மையப்பகுதியில் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கு நவீன பூங்கா அமைத்து தர முயற்சி எடுக்கப்படும்.

15. தெற்குகாட்டில் மழைக்காலங்களில் நீர்தேக்கம் ஏற்பட்டு மக்கள் வெளியேறும் அளவுக்கு அவல நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க உடனடியாக வடிகால் வசதி அமைத்து தரப்படும்.

16. 10 வது வார்டில் நவீன கழிப்பறை வசதி, சாலை வசதி மற்றும் சுடுகாடு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

17. பழைய பேரூந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டை நவீனப்படுத்தி தர முயற்சி எடுக்கப்படும்.

18. புதிதாக உருவான குடியிருப்பு பகுதிகளான ரஹ்மத் நகர், பரக்கத் நகர், மன்சூர் நகர், கொய்யா தோப்பு, MMD காசிம் நகர், திமிலத்தெரு, இமாம் புஹாரி நகர், மற்றும் S.P.K.M, அகாஸ் தோட்டவளாகம் ஆகிய பகுதிகளுக்கு சாலைவசதி, குடிநீர் இணைப்பு, தெருவிளக்கு ஆகியவைகள் உடனடியாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

19. புதிய பேரூந்து நிலையத்தில் உள்ள ஆட்டோ,கார்,வேன் ஸ்டாண்டை நிரந்தரமாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

20. பழைய பேரூந்து நிலையத்தில் புதிய வணிக வளாகம் கட்டித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

21. துப்புறவு பணியாளர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதி செய்து தரப்படும்.

22. குண்டாகுளத்தெருவிலிருந்து கொய்யா தோப்பிற்கு செல்ல சாலை அமைத்துத்தரப்படும்.

23. மீனவர்கள் நலன் கருதி ஆசாத் நகர் முதல் பீடி துறை வரை கோரை ஆற்றில் தூர் வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

24. பேட்டை செக்போஸ்டிலிருந்து பாமனி ஆறுவரை தரமான சாலை அமைத்து தரப்படும்

25. மாதாகோவில் தெரு (புதுக்குடியிருப்பு) பகுதியில் நவீன கழிப்பறை வசதி செய்து தரப்படும்

26. ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாக மாற்ற முயற்சி எடுப்பேன்

27. நவீன வசதியுடன் கூடிய மீன் பிடித்துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

28. முத்துப்பேட்டையில் மீன்வளத்துறை அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

29. மின் விநியோகத்தில் ஏற்படும் குளறுபடிகளை தவிரக்க துணை மின் நிலையம் (110 மெகாவாட்) அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்

30. அரசு தொழிற்பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்

31. அரசு அறிவிக்கும் அணைத்து நலத்திட்டங்கள் அணைவருக்கும் கிடைக்க முயற்சி செய்வேன்.

“விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் தமுமுக மற்றும் ம.ம.க வின் மக்கள் சேவைபணிகள் என்றென்றும் தொடரும்....”


ஊழலை எதிர்ப்பதில் உறுதி
திறமையான நிர்வாகம்
முடிவெடுப்பதில் வேகம்
எளிமையான அனுகுமுறை
அடிக்கடி மக்கள் சந்திப்பு


வாக்களிப்பீர்... பேரூந்தி சின்னத்திற்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக