கடந்த திங்கள் (ஏப்ரல் 5) அன்று மதுரை ரயில் நிலையத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை வழி அனுப்பி விட்டு நெல்லை திரும்பிய தமுமுக மற்றும் மமக மாவட்ட நிர்வாகிகள் பயணம் செய்த கார் விபத்திற்குள்ளாகியது. இதில் பயணம் செய்த ஏழு சகோதரர்களில் ஒருவரான பாளையங்கோட்டை சாந்தி நகர் கிளைச் செயலாளர் நவாஸ் கான் (வயது 21) தலையில் பலத்த அடியுடன் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று (ஏப்ரல் 9) அதிகாலை 4 மணி அளவில் மரணமடைந்தார். (இன்னாலில்லாஹி...).
அவரது ஜனாசா சாந்தி நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சாந்தி நகர் ஜும்ஆ பள்ளிவாசலில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு ஜனாசா தொழுகை நடைபெற்றது. பிறகு சாந்தி நகர் அடக்கவிடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சகோதரர் நவாஸ் கானின் ஜனாசாவில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் மவ்லவி ஜே.எஸ். ரிபாயி, மனிதநேய மக்கள் கட்சியின் பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரஷீத் மற்றும் தமுமுக, மமகவின் நெல்லை, தூத்துக்குடி, குமரி மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பங்குக் கொண்டார்கள். நவாஸ் கானின் சகோதரர் ஜனாசா தொழுகையை நடத்தினார். நல்லடக்கத்திற்கு பிறகு கூடியிருந்த மக்களிடையே மவ்லவி ஜே.எஸ். ரிபாயி மரண சிந்தனை என்ற தலைப்பில் உரையாற்றினார். அனைவரும் கண்ணீர் மல்க உரையை கேட்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக