ராமநாதபுரம் மாவட்ட த.மு.மு.க. சார்பாக பாம்பனில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கைஅமல்படுத்தக் கோரி சமூக ஒற்றுமை பொதுக்கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு த.மு. மு.க. மாவட்ட தலைவர் சாதிக் பாட்ஷா தலைமை தாங்கினார். பாம்பன் முஸ்லிம் ஜமாத் தலைவர் ஹமித்துல்லா, அகமுடையார் சங்க தலைவர் ராஜாஜி, நடார் சங்கதலைவர் அனுபந்தன், விவேகானந்தா குடில் தலைவர் பிரண வனந்தா, பாம்பன் அருள் தந்தை சாமிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் பேராசிரியர் டாக்டர் ஜவாகிருல்லாக்,மாநில துணை செயலாளர் கோவை செய்யது, ம.ம.க. மாவட்ட செயலாளர் சலிமுல்லாகான் ஆகியோர் பேசினர். பேராசிரியர் ஜவாருல்லா பேசியதாவது:-
6 கோடி மக்களில்டாஸ் மாக் வருகைக்கு பின்பு 21/2 கோடிமக்கள் குடிபழக்கதிற்கு அடிமையாகி உள்ளார்கள். குறிப்பாகமாண வர்கள் மதுவுக்குஅடிமை யாக்கி இருப்பது தமிழர் களின் எதிர்காலத்தைகேள் விகுறியாக்கும் முதல்-அமைச் சர் செம்மொழி மாநாட்டில் முதல் தீர்மானமாக டாஸ் மாக் கடைகளை அகற்றி தீர்மானம் நிறைவேற்றி தமிழர்களின் எதிர்கால வாழ்க் கையை சீர்படுத்த வேண்டும். மீனவர்களின் நீண்டகால கோரிக்கையான கடல் அட்டை, அரியவகை சங்குகல் தடையை நீக்க வேண்டும். இவ்வாறுஅவர் பேசி னார்.
கூட்டத்தில் உயர் நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளி யாக்க வேண்டும். பாம்பன் போலீஸ் நிலையத்தில் போதிய போலீசாரை நிய மிக்க வேண்டும். ராமேசுவரம் தீவு பகுதியை இணைக்க மேலும் ஒரு ரோடு பாலம் அமைக்கவேண்டும். தனுஷ் கோடியில் ஆபாச குளியலுக்கு தடைவிதிக்கவேண்டும். டாக்டர் அப்துல்கலாம்பெய ரில் தீவுபகுதியில் அரசு தொழில் நுட்பகல்லூரி அமைக்க வேண்டும் என் பது உள்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட் டன. த.மு.மு.க.மாவட்ட துணைசெயலாளர் அன்வர் அலி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர்கலந்துகொண்டனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக