செவ்வாய், 13 செப்டம்பர், 2011

அதிரையில் 95வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் அதிரை கிளை சார்பில் 11.09.2011 அன்று மாபெரும் சமய நல்லிணக்க பெருவிழா மற்றும் அவசர கால ஊர்தி(ஆம்புலன்ஸ்) அர்பணிப்பு விழா நடைபெற்றது. நகர த.மு.மு.க தலைவர் உமர் தம்பி தலைமைஏற்க சகோதரர் யி.கலந்தர் (முன்னாள் மாவட்ட செயலாளர் ம.ம.க) தொகுத்து வழங்கினார்.


இவ்விழாவில் த.மு.மு.க பொதுச்செயலாளர் ஷி.ஹைதர் அலி, ம.ம.க துணை பொதுச்செயலாளர் வி.தமிமுன் அன்சாரி, த.மு.மு.க மாநிலச் செயலாளர் பேரா. யி.ஹாஜா கனி, ஆகியோர் சிறப்புரையாற்றினர். அத்துடன் அவசரகால ஊர்தி (ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. இறுதியாக, த.மு.மு.க நகர செயலாளர் வி.பி.தையூப் நன்றி கூறினார். இந்நிகழ்வில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.




செப்டம்பர்'11 (2011) அதிரையின் நிகழ்வு துளிகள்.


1. காலை 07:00 மணிக்கு ஆரம்பித்த திருமண வைபவங்கள் மாலை 06:00 மணி வரையிலும் நீடித்தது, அதிரையில் நேற்று மட்டும் சுமார் 10 திருமணங்களுக்கு மேலாக நடைப்பெற்றது.



2. பகல் 01:00 மணிக்கு கல்யாண வீடுகளிள் விருந்து உபசரிப்புகள் நடந்தது.



3. காலையில் கடுமையான வெயில் சுட்டெரித்தது, மாலை 05.00 மணியளவில் திடீரென்று அழகான மழைப்பொழிவு இருந்தது. இது மக்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. அரை மணி நேரத்திற்கு குறையாமல் பெய்த இந்த திடீர் மழை மேலும் நீடித்து த.மு.மு.க. வின் விழாவிற்கு இடையூறு ஏற்படுத்துமோ என்ற அச்சம் மக்களிடையே இருந்தது. அல்ஹம்துல்லில்லாஹ், அவ்வாறு இல்லாமல் அல்லாஹ் பாதுக்காத்தான்.



4. அவ்வப்பொழுது த.மு.மு.க. வின் விழாவை பற்றிய அறிவிப்பு வாகனம் ஊரில் உலா வந்த வண்ணம் இருந்தது.



5. மாலை 06:00 மணிக்குள் ஊரின் அனைத்து திருமண வைபவங்களும் முடிந்து, த.மு.மு.க. வின் விழாவிற்காக அனைவரும் எதிர்பார்த்து இருந்தார்கள்.



6. மாலை 06.29 மஹ்ரிப் தொழுகைக்கான பாங்கோசை ஒலித்தது, அல்-அமீன் பள்ளியில் (பஸ்ஸ்டாண்ட் பள்ளி) மஹ்ரிப் தொழுகையை நிறைவேற்ற பெரும்பாலனோர் திரண்டமையால் பள்ளி நிறைந்து வழிந்தது. இப்பள்ளி தக்க இடத்தில் அமைந்த முக்கியத்துவத்தை பலரும் பெசிக்கொண்டதையும் கேட்க முடிந்தது.



7. த.மு.மு.க வின் விழா அரங்கம் பஸ்-ஸ்டாண்டின் மையப்பகுதியில்(அல் அமீன் பள்ளி அருகே) வட-தெற்கு திசை நோக்கி அமைக்கப்பட்டு இருந்தது. கல்வி தந்தை M.K.N காதிர் முகைதீன் அப்பா நினைவரங்கம் என, விழா அரங்கம் பெயர் சூட்டப்பட்டு இருந்தது.



8. மஹ்ரிப் தொழுகைக்குப்பிறகு அவசர கால ஊர்தி விழா மேடைக்கு அருகே கொண்டு வரப்பட்டது.



9. விழாவினை நேரலைச்செய்வதற்கான பணிகளில் அதிரை பிபிசி மற்றும் மீடியா மேஜிக் தொழில்நுட்ப நிபுணர்கள் த.மு.மு.க வின் ஒளிப்பதிவாளருடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருந்தார்கள்.



10. மாலை 07:00 மணிமுதல் விழாவிற்காக அழைக்கப்பட்ட கிராம தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், மாற்றுமத நண்பர்கள், பிற கட்சிகளின் நிர்வாகிகள், மருத்துவர்கள் அனைவர்களும் விழா மேடைக்கு வந்த வண்ணம் இருந்தார்கள், அவர்களை முறையாக வரவேற்று இருக்கைகளில் அமர்த்தும் பணியில் த.மு.மு.க நிர்வாகிகள் ஈடுபட்டனர்.



11. மாலை 07:15 மணிக்கெல்லாம் போடப்பட்டிருந்த அனைத்து இருக்கைகளும் பொதுமக்களால் நிரப்பப்பட்டு இருந்தன.



12. பாதுகாப்பு பணியை அதிராம்பட்டினம் காவல்துறை சிறப்பாக மேற்கொண்டது.



13. போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் காவல்துறையும் த.மு.மு.க தொண்டர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டர்ர்கள்.



14. பிரைட் எலக்ட்ரிகல்ஸ் ஜனாப் மீரா முகைதீன் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்திய பாதுகாப்புத்துறை மாதிரி கப்பல் அரங்கின் வலது புறத்தில் காட்சிக்கு வைக்கபட்டிருந்தது வருகை தந்த விருந்தினர்கள் அனைவரையும் கவர்ந்தது.



15. சரியாக மாலை 07:22 மணிக்கு மவ்லவி A.H அப்துர் ரசீது ரஹ்மானி அவர்கள் கிராத் ஓத, அதிரை நகர த.மு.மு.க தலைவர் ஜனாப் B. உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் தலைமையில் விழா துவங்கியது.முன்னதாக கிழக்கு கடற்கரைச்சாலை (அண்ணா சிலை அருகே) யில் த.மு.மு.க வின் கொடியை மனித நேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சகோதரர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.



வரவேற்புரை M.O. செய்யது முகம்மது புஹாரி (நகர பொருளாளர் த.மு.மு.க) நிகழ்த்தினார்கள்.இவ்விழாவில் த.மு.மு.க வின் தலைமை கழக நிர்வாகிகள் பேராசிரியர் M.H. ஜவாஹிருல்லாஹ்(தலைவர் த.மு.மு.க, மற்றும் ம.ம.க), சகோதரர் S.ஹைதர் அலி(மாநில பொதுச்செயலாளர் த.மு.மு.க), சகோதரர் M.தமிமுன் அன்சாரி(மாநில துணை பொதுச்செயலாளர் ம.ம.க), சகோதரர் J.ஹாஜா கனி(மாநில செயலாளர் த.மு.மு.க) ஆகியோர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி அவசரகால ஊர்தியை(ஆம்புலன்ஸ்) அனைத்து சமுதாய மக்களுக்காகவும் அர்பணிப்பு செய்தார்கள். இவ்விழாவினை சகோதரர் J.கலந்தர்(முன்னால் மாவட்ட செயலாளர் ம.ம.க)அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.இறுதியாக நன்றியுரை M.H. தையூப்(நகர செயலாளர் த.மு.மு.க) அவர்கள் நவிழ விழா இனிதே நிறைவுற்றது,



அல்ஹம்துலில்லாஹ்.இந்நிகழ்சிகள் அனைத்தும் அதிரைபிபிசியிலும்(http://adiraibbc.blogspot.com), த.மு.மு.க வின் அதிகாரப்பூர்வ இணைய தளமான http://tmmk.in லும் http://adiraitmmk.blogspot.com/ நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக