வெள்ளி, 3 செப்டம்பர், 2010

அஜ்மான் மண்டல முமுக நடத்திய சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒரு அங்கமான அஜ்மானில் முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக 02-09-2010 வியாழன் அன்று மாலை 5 மணிக்கு சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அமீரக துணை தலைவர் சகோ.ஹுசைன் பாஷா அவர்கள் தலைமை வகிக்க ஷார்ஜா மண்டலத்தின் துணை செயலாளர் சகோ.பந்தல் குடி சம்சுதீன் அவர்கள் அண்ணலார் நபிகள் நாயகத்தின் பண்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த மண்டல நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் சாரம்சமாக தாயகத்தில் இருந்து வருகை தந்திருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளர் சகோ.எம்.தமீமுன் அன்சாரி அவர்கள் தாயகத்தில் தமுமுக செய்துவரும் சமுதாய பணிகளையும், தமுமுக வின் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சி அரசியல் அரங்கில் ஏற்படுத்திவரும் மாற்றங்களையும், மனிதநேய மக்கள் கட்சி உருவாகிய வரலாற்று நிகழ்வுகளையும் தனக்கே உரிய பாணியில் எழுச்சி உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான சகோதரர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அல்ஹம்துலில்லாஹ்...

இதில் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நோன்பு திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். மக்ரிப் தொழுகைக்கு பின் வருகைதந்த அத்தனை சகோதர்களும் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகபடித்திகொண்டு மமகவின் அரசியல் சம்மந்தமான முடிவுகள் மற்றும் கூட்டணி பற்றிய கருத்துகளை தாங்கி தங்களது கேள்விகளை சகோதரர் அன்சாரி அவர்களிடம் கேட்க மிக தெளிவாகவும், சிந்தனைகளை தூண்டும் விதமாகவும் தமிழக அரசியல் களம் பற்றி சகோதர்களால் கேட்க பற்ற அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்தார்கள்.
இறுதியாக அஜ்மான் மண்டல தலைவர் சகோதரர்.குடவாசல் செய்யது ஷஹாபுதீன் அவர்கள் நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திதந்த ஏக இறைவனுக்கும் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் நன்றி கூறினார்.
வந்திருந்த அனைத்து சகோதரர்களும் சமுதாய அரசியல் எழுச்சிக்காக போராடும் மமக அரசியல் அரங்கில் வெற்றிபெற ஏக இறைவனிடம் பிரார்தித்தவர்களாக கலைந்து சென்றனர். எல்லா புகழும் ஏக இறைவனுக்கே!





களத்தொகுப்பு - முத்துப்பேட்டை முகைதீன்
புகைப்படங்கள் - ஹுசைன் பாஷா

புதன், 1 செப்டம்பர், 2010


காவி பயங்கரவாதமும் அதனை தொடர்ந்து கொக்கரிக்கும் ஹிந்துத்துவவாதமும்!!

நமது நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அண்மையில் காவல்துறையின் உயர்அதிகாரிகளின் மாநாட்டில் உரைநிகழ்த்தும் போது ஒரு உண்மையை இவ்வுலகிற்கு உரத்து சொல்லிவிட்டார். அதுதான் காவி தீவிரவாதம் அவர் சொன்னதும் போதும் ஒட்டுமொத்த ஹிந்துத்துவவாதிகளும் அவர் மீது படை எடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

காவி தீவிரவாதம் என்று ப.சிதம்பரம் ஒரு இடத்தில் கூறியதற்காக ஒட்டுமொத்த ஹிந்துத்துவவாதிகளும் கொக்கரிக்கின்றீர்களே மான நஷ்ட வழக்கு போடும் நிலைக்கு உங்கள் மனம் துடிக்கின்றதே, காலம் காலமாய் எங்கு குண்டு வெடிப்பு நிகழ்ந்தாலும் உடனடியாக ஹிந்துத்துவவாதிகளாகிய நீங்களும், சில இல்லை பல அரசு அதிகாரிகளும், ஒட்டுமொத்த மீடியாக்களும் முஸ்லிம்களை புண்படும்படி முஸ்லிம் பயங்கரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றெல்லாம் இட்டுக்கட்டி குண்டுவெடிப்பு சம்பவங்களோடு தொடர்பு படுத்தி பேசுனீர்களே அதற்கு நாங்கள் எந்த கோர்டில் போய் வழக்கு போடுவது? அப்படியே வழக்கு போட்டாலும் எங்களுக்கு நீதி கிடைக்குமா? நீதி வழங்கும் இடங்களிலும் உங்களால் மூளை சலவை செய்யப்பட்ட பார்பினியவாதிகள் தானே இருகின்றார்கள்!

இவ்வாறு நீங்கள் தொடர்ந்து மீடியாக்களாலும்,உங்கள் பேச்சுக்களாலும் எங்கள் மனதை ரொம்பவே காயப்படுத்தினீர்கள் ஆனால் நாங்களோ பொங்கி எழுந்து அரசு அதிகாரிகளை உங்களை போல் மிரட்டவில்லை,உங்களை போல் மத்திய அரசை பணிய வைக்கக்கூடிய அதிகாரம் எங்களுக்கு இல்லை ஆனால் எல்லா அதிகாரத்தையும் ஒருமணே வைத்திருக்கின்ற ஏக இறைவனிடம் நாங்கள் கையேந்தினோம். அந்த இறைவன் தான் இன்று எந்த மீடியாக்களை வைத்து எங்களை தீவிரவாதிகள் முத்திரை குத்தினீர்களோ அதே மீடியாக்கள் இன்று உங்களை பார்த்து தீவிரவாதிகள் என்று சொல்லும் காலத்தை எங்களை படைத்த இறைவன் உருவாக்கிவிட்டான். எல்லா புகழும் இறைவனுக்கே!

காவி தீவிரவாதிகள் என்று சொல்லியதற்காக இன்று ஒட்டுமொத்த ஹிந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டார் ப.சிதம்பரம் என சொல்லும் நீங்கள் முஸ்லிம்கள் வெளியில் தலைகாட்டமுடியாத அளவிற்கு படிக்காத பாமரனும் எங்களை பார்த்து நீங்கள் தீவிரவாதிகளா என்று சொல்லும் அளவிற்கு முஸ்லிம் தீவிரவாதிகள், இஸ்லாமிய பயங்கரவாதிகள் என்று நாடுமுழுவதும் பரப்புனீர்களே அப்பொழுது உங்களுக்கு தெரியவில்லையா ஒட்டுமொத்த முஸ்லிம்களின் மனதும் புண்படுமே என்று! அடுத்தவனுக்கு என்றால் ஒரு நியாயம்!உங்களுக்கு என்றால் ஒரு நியாயமா? குத்துதே குடையுதே... என்று கிராம புறங்களிலே கூறும் ஒரு பழமொழியை இங்கு கூறினால் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

உங்களையாவது வார்த்தைகளால் தான் சொன்னார்கள் காவி தீவிரவாதிகள் என்று எங்கள் சமுதாயத்தை சந்தேக கண்ணோட்டத்தோடு இந்திய காவல்துறையினரும் உளவுத்துறையினரும் சல்லடை போட்டு சலித்தார்களே, தீவிரவாதிகளை தேடுகிறோம் என்ற போர்வையில் அப்பாவி இளைஜர்களையும், பள்ளி,கல்லூரி மாணவர்களையும் சித்திரவதைக்கு உள்ளாக்கியதோடு மட்டுமில்லாமல் என்கவுண்டர் என்ற புனித(!) பணியை முஸ்லிம்கள்மீது திட்டமிட்டு தினித்தீர்களே அதையெல்லாம் எங்கே கொண்டு சொல்வது. அதெற்கெல்லாம் காரணம் நீங்கள் எங்கள் சமுதாயத்தை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தியதுதானே.

இப்பொழுது உங்களுக்கு என்றவுடன் உங்களின் உண்மை (தீவிரவாத) முகத்தை வீடியோ ஆதாரத்தோடு செய்திவெளியிட்ட ஹெட்லைன்ஸ் டுடே அலுவலகத்தை தாக்குகின்றீர்கள்,கோர்ட்டிலே வழக்கு போடுகின்றீர்கள், நஷ்டஈடு கோருகின்றீர்கள், ஹிந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக கூக்குரலிடுகின்றீர்கள் என்ன நியாயமிது?

இருகின்றோம் இன்னும் பொறுமையாக இருந்து எங்களை படைத்த இறைவனிடம் கையேந்துகின்றோம் இன்ஷா அல்லாஹ் கர்கரே போன்ற நியாயமிக்க அதிகாரிகள் மீண்டும் வருவார்கள் உங்கள் கொட்டத்தை அடக்க என்ற சிந்தனையோடு!

-- ஆக்கம் முத்துப்பேட்டை முகைதீன் --

திங்கள், 30 ஆகஸ்ட், 2010


அஜ்மானில் சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..)


இன்ஷா அல்லாஹ் வரும் 02.09.2010, வியாழன் அன்று மாலை 4 மணிக்கு அஜ்மான் சலாமத் ரெஸ்ட்டாரண்ட் அரங்கில் சமுதாய ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தாயகத்திலிருந்து வருகைப்புரிந்துள்ள மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி மற்றும் தமுமுகவின் தலைமைக் கழகப் பேச்சாளர் மௌலவி சிவகாசி முஸ்தபா ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள். நிகழ்ச்சியில் கலந்துக் கொள்பவர்களுக்கு நோன்பு துறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு : 055-4464786, 050-5839972 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


அறிவமுதம் பெற அனைவரையும் அன்புடன் அழைக்கிறது

அஜ்மான் மண்டல முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

துபாய் வாழ் முத்துப்பேட்டை தமுமுக சகோதரர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம்...


செய்தி - முத்துப்பேட்டை முகைதீன்

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

காவி பயங்கரவாதம்


மாலேகான், அஜ்மீர் தர்கா,ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், போன்ற இடங்களிலும் நாட்டின் முக்கிய நகரங்களிலும் நடைபெற்ற அத்தனை குண்டு வெடிப்புகளுக்கும் மிக முக்கிய மூளையாக இந்த காவிக்கும்பல்தான் ஈடுபட்டு இருகின்றது என்று நான் சொல்லவில்லை மாவீரன் கர்கரே இந்த நாட்டிற்கு அம்பலபடுத்தினார். தீவிரவாத தடுப்பு படையின் தலைவர் கர்கரே அவருக்குபின்னால் வந்த ஒரு சில நியாயமான அதிகாரிகளும், ஹெட்லைன்ஸ் டுடே போன்ற ஒரு சில நடுநிலையான பத்திரிக்கைகளும் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற அத்தனை குண்டுவெடிப்புகளுக்கும் காவி பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருக்கின்றன என்று தெள்ள தெளிவாக வீடியோ ஆதாரத்துடன் நிருபித்து கொண்டிருகின்றார்கள். போலி வேசமிட்டு கொண்டிருந்த காவி தீவிரவாதிகளின் பொய் முகத்திரை கிழிக்க பட்டு கொண்டிருக்கும் இந்த வேலையில் அதற்கு முத்தாய்ப்பாய் நமது நாட்டின் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் போலீஸ் உயர் அதிகாரிகளின் மாநாட்டில் கூறியிருப்பது காவி பயங்கரவாதிகளுக்கு பெரும் கலக்கத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது அவர்களின் கூக்குரலில் இருந்து வெளிப்படுகிறது.


ஆகவே எதிர்வரும் காலங்களில் இந்த காவிகும்பல்கள் எந்த அசம்பாவிதங்களிலும், தீவிரவாத செயல்களிலும் ஈடுபடாமல் இருக்க நமது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு இந்த காவிகும்பலின் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து இவர்களின் சூழ்ச்சிகளை தடுத்து நிறுத்தி இந்திய தேசத்தை பாது காக்க முன்வரவேண்டும். இல்லையேல் மனிதநேயமிக்க இந்திய குடிமக்கள் இவர்களுக்கு எதிராக ஒன்றுகூட வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்பதை இங்கு பதிவு செய்கிறோம்.

மத்திய அரசு விழித்து கொள்ளுமா?

ஆக்கம் - முத்துப்பேட்டை முகைதீன்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பாவத்தை கழுவும் தொழுகை

''உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உட­லுள்ள) அழுக்குகüல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்?'' என்று கேட்டார்கள். ''அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது'' என்று மக்கள் பதிலளித்தார்கள். ''இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)

உடலை அழுக்கி­ருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாச­ல் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள். தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். (அல்குர்ஆன் 29:45)


இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல்­த் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களி­ருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய் விடும்.


இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, ''(தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும்'' என்றுபதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி


நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் ஒரு மனிதனிடத்தில் வந்து விட்டால் பாவங்கள் செய்ய அஞ்சுவான். மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது....


தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான். அல்குர்ஆன் 87:14, 15
பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்தும் வழிமுறையாக தொழுகையை இந்த வசனத்தில் இறைவன் விளக்கியிருப்பது தொழுகையின் முக்கியத்துவத்தையும் பாவத்தை இல்லாமல் ஆக்கும் அழகிய வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது.


''யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ர­) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160
சாதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுதால் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறதென்றால் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றினால் ஆற்றில் ஐந்து தடவை குளித்து உடலைத் தூய்மை செய்தவதைப் போல் பாவங்கள் அழியும் என்பது தெளிவாகிறது.
தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம்.


நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள்'' என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, ''அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா?'' என்று கேட்டார்கள். அவர், ''ஆம்!'' என்றார். நபி (ஸல்) அவர்கள், ''அவ்வாறாயின் அல்லாஹ் 'உமது பாவத்தை' அல்லது 'உமக்குரிய தண்டனையை' மன்னித்து விட்டான்'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823)


தொழுகை பாவங்களை அழிக்கும் என்பதற்கு நிதர்சன சான்றாக இந்த ஹதீஸ் உள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் பாவத்தைச் செய்து விட்டு, அந்த நபித்தோழர் தன் கௌவரத்தைத் தூக்கியெறிந்து விட்டுத் தன் பாவத்தை வாய்விட்டுச் சொல்கிறார் என்றால் தொழுகை பாவத்திற்குப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாவத்தி­ருந்து விடுபடுவதற்கு ஒரு மனிதனை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது என்பதை அறியலாம்.பாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:


ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவி­ருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்கள் செய்யாத வரை! அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம் (394)



இவ்வாறு தொழுதால் மட்டும் தான் பாவங்கள் மன்னிக்கப்படுமா? தொழுகைக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளைச் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், ''ஆம்! அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (421)


இவ்வாறு தொழுகைக்காகச் செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளும் நன்மையாக அமைகிறது. தொழுகை பாவப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சொர்க்கம் செல்வதற்குத் துணைச் சாதனமாகவும் உள்ளது.


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, ''என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள்'' எனக் கேட்டார். அப்போது, ''நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி), நூல்: புகாரி (1396)


அல்லாஹ்வுக்கு நிகராக யாரையும் எதையும் ஆக்கக் கூடாது என்ற கட்டளைக்கு அடுத்தபடியாக, சொர்க்கம் செல்வதற்குத் தொழுகை என்ற வணக்கத்தைத் தான் நபியவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இது தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.



இவ்வாறு தொழுகையாளிகளுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் அதிகமான கூ­கள் இருக்கும் நிலையில், தொழக்கூடிய சிலர் பாவங்களி­ருந்து விடுபடாத சூழ்நிலையைக் காண்கிறோம். தொழுது கொண்டே மோசடி செய்கிறார்கள்; வட்டி வாங்குகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் தொழுகையை ஒரு சடங்காக நிறைவேற்றுவது தான்.


நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று, அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் தொழுகையை அமைத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு தொழுபவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.


தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அல்குர்ஆன் (107:4, 5)


இவர்களின் நிலைமை தான் இப்படி என்றால் குர்ஆன், ஹதீஸை விளங்கிய தவ்ஹீதைப் பேசக் கூடிய மக்களிடத்திலும் இந்தக் குறைபாடுகளைக் காண்கிறோம். குர்ஆன், ஹதீஸை மட்டும் பேசக்கூடிய பள்ளிவாயில்களில் கூட, சுப்ஹு தொழுகையில் ஒரு சில நபர்கள் மட்டும் வருவதே இதற்குச் சான்று! ஆனால் ஜும்ஆ தினங்களில் கால் வைக்கக் கூட இடமிருக்காது.
இது போன்று நடப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்.


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகüலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணித்து விட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்குப் புறப்பட்டு வராமலிருப்பவரை எரித்து விட முடிவு செய்தேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (657)


நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையே மறுமை வெற்றிக்கும் அடிப்படையாக உள்ளது.


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 378
தொழுகை தான் ஒருவனுடைய மறுமை வெற்றியைத் தீர்மானிப்பதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!

வியாழன், 26 ஆகஸ்ட், 2010


அஜ்மான் மண்டல முமுகவின் ஆலோசனைக்கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு

அஜ்மான் மண்டல முமுகவின் ஆலோசனைக்கூட்டம் 26-08-2010 அன்று அல்புத்தான் பகுதியில் உள்ள மண்டலத்தலைவர் சகோதரர் சம்சுதீன் அவர்கள் இல்லத்தில் முமுகவின் அமீரக துணைத்தலைவர் சகோதரர் ஹுசைன் பாஷா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மண்டல முமுக நிர்வாகிகள் முன்னிலை வகிக்க முமுகவின் ஷார்ஜா மண்டல துணை செயலாளர் சகோதரர் பந்தல்குடி சம்சுதீன் அவர்கள் தமுமுக ஏன்? எதற்கு? என்ற தலைப்பில் உரைநிகழ்த்த அஜ்மான் மண்டல புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

தலைவர் :- குடவாசல் செய்யது ஷஹாபுதீன்

துணை தலைவர் : - முத்துப்பேட்டை முகைதீன்

செயலாளர் :- கட்டிமேடு ஜபருல்லாஹ்

துணை செயலாளர்கள் :-

பசுபதி கோவில் முகம்மது ரபீக்

கட்டிமேடு சாகுல் ஹமீது

பொருளாளர் :- திருச்சி முகம்மது இல்யாஸ்

மக்கள் தொடர்பு :- செய்யது ஜமால் (சித்தார் கோட்டை)

செயற்குழு உறுப்பினர்கள் :-

அஜீஸ் ரஹ்மான் - திருநெல்வேலி,களக்காடு

முகம்மது ஹனிபா - திருநெல்வேலி

மக்கள் உரிமை பொறுப்பாளராக சகோ.முத்துப்பேட்டை முகைதீன்

ஆகியோர் ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வந்திருந்தோர் அனைவருக்கும் நோன்பு திறக்கும் ஏற்பாடு மண்டல நிர்வாகிகளால் செய்யபட்டு இருந்தது. அல்ஹம்துலில்லாஹ்...

இந்த ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரும் 02-09-2010 வியாழன் அன்று தாயகத்தில் இருந்து சிறப்பு அழைப்பாளர்களாய் அமீரகம் வந்திருக்கும் தமுமுகவின் மாநில செயற்குழு உறுப்பினரும், மக்கள் உரிமை ஆசிரியரும், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணை பொது செயலாளருமான சகோதரர் M.தமீமுன் அன்சாரி MBA., அவர்களையும், தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சகோதரர் மவ்லவி சிவகாசி முஸ்தபா அவர்களையும் அழைத்து அஜமானில் ஒரு மாபெரும் மாநாட்டை நடத்துவது என்றும் அதனை தொடர்ந்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் ஏற்ப்பாடு செய்வது என்றும் ஏக மானதாக முடிவு செய்யப்பட்டது.கலந்துகொண்ட அணைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பணிகள் சிறக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திதவர்களாக கலைந்து சென்றனர்.

செய்தி தொகுப்பு - முத்துப்பேட்டை முகைதீன்