ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

உயிர் காக்கும் உன்னத சேவைகள்

அவசர கால மருத்துவ சேவையினை எந்த விதமான மத இன சாதி பாகுபாடின்றி பற்பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இயக்கங்கள், அரசியல் கட்சிகள் செம்மையாக செய்து வருகின்றன என்பதினை நாம் அறிவோம் அந்த வரிசையில் முத்துப்பேட்டையில், அவசர கால மருத்துவ சேவையினை பல ஆண்டுகளாக செய்து வருகிறது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம்.



அவர்களது சார்பில் இயங்கும் அவசர கால ஊர்தியானது (ஆம்புலன்ஸ்) எந்த விதமான பாகுபாடின்றி அனைத்து மக்களுக்காக வேண்டி தன்னார்வ சேவையினை செய்து வருகிறது. ஏழை எளியோர்களுக்கு இலவச சேவையினையும், அதுபோல் சாலை விபத்துகளில் அடிபட்டவர்களை இலவசமாக மருத்துவ மனைக்கு எடுத்து செல்லுவதற்கும் இந்த அவசர கால ஊர்தியானது செயல்படுகிறது.


தற்போது முத்துப்பேட்டையில் உள்ள அவசர கால ஊர்தியின் ஓட்டுனராக ஜனாப். பஷீர் அஹமது (எ) செல்லக்கனி என்பவர் செயல்படுகிறார். ஏதேனும் அவசர நிலை ஏற்படும் போது இவருக்கு உதவியாக இஸ்லாமிய சகோதரர்களும் உறு துணையாகவும் உதவியாகவும் இருக்கிறார்கள். விபத்துக்கள், இரத்த தான சேவைகள், மருத்துவ சேவைகள், அவசர கால சேவைகள் போன்ற பல சேவைகளையும் இவர்கள் செம்மையாக செய்து வருகிறார்கள். இவர்களின் சேவைகள் சிலவற்றை உங்களின் பார்வைக்கு.. கடந்த இரண்டு மாதங்களாக முத்துப்பேட்டையில் நடந்தவைகள்: பாமணி ஆற்று பாலத்தில் நடத்த விபத்து ஒன்றில் கணவன் மனைவி இருவரும் சம்பவ இடத்தில் மரணித்தார்கள், மற்றொரு சம்பவம் ஆலங்காட்டில், வீட்டில் நான்கு நாட்களாக இறந்து கிடந்த சடலத்தினையும் நமது சகோதரர்களின் உதவியால் சடலங்களை திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்சென்றார்கள்.


அவசர கால ஊர்தியின் 24 மணி நேர மனித நேய மிக்க தன்னார்வ சேவையானது மேன்மேலும் வளர வேண்டி நம்முடைய இணையத்தளம் அவர்களை பாராட்டுகிறதுமுத்துப்பேட்டையில் இவர்கள் செய்து வரும் சேவையானது வெளி உலகிற்கு தெரிவதில்லை என்பது மிகவும் வருத்தக்குரியது தான்உங்களின் அவசர தேவைக்கு அணுகவும் : 9942716666 (செல்லக்கனி)


செய்தி : அபு ஆஃப்ரின்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக