செவ்வாய், 27 செப்டம்பர், 2011

முத்துப்பேட்டை பேரூராட்சி

அதிகமான முஸ்லிம்களை உள்ளடக்கிய முத்துப்பேட்டை, பேரூராட்சி என்ற அந்தஸ்த்தோடு இந்த 2011 உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கின்றது. கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வென்று பேரூராட்சி மன்றத் தலைவர்களாய் பவணிவந்தவர்களெல்லாம் ஒரு சிலரை தவிற தன்னை வழர்த்துக்கொண்ட அளவிற்கு முத்துப்பேட்டையின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. ஆகவேதான் நகராட்சி அந்தஸ்து பெரும் தகுதி முத்துப்பேட்டைக்கு இருந்தும் இன்று வரை பேரூராட்சியாகவே இயங்கி வருகின்றது. நகரிலும் சொல்லத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் முத்துப்பேட்டை அடையவில்லை. காரணம் எந்த பேரூராட்சி தலைவரும் ஊரின் நலனை பற்றி சிந்திக்கவில்லை என்பதை மக்களின் கருத்து.

அந்த அடிப்படையில் எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்காகவே உழைக்கும் ஆற்றல் உடையவர்களை உங்களுடைய வாக்குகள் மூலம் தேர்ந்தெடுங்கள். முத்துப்பேட்டை முன்னற்றம்கான நாமே அடையாளம் கண்டு நல்லவர்களை தேர்ந்தெடுப்போம் இன்ஷா அல்லாஹ். எதிர்வரும் 5 வருடத்தை ஊழல்வாதிகளிடமும், ஊரை அடித்து தன் உழையில் போடு நினைக்கும் வர்கத்திடமும் முத்துப்பேட்டையை ஒப்படைத்துவிட வேண்டாம். மக்களே சிந்திப்பீர்…! செயல்படுவீர்...!! நல்லவர்களை தேர்ந்தெடுப்பீர்......

மனிதநேய மக்கள் கட்சியும் முத்துப்பேட்டையில் தனது வேட்பாளர்களை களம் இறக்குகின்றது. ஆற்றல் மிக்க தொண்டர்களும். தொலைநோக்கு பார்வை கொண்ட நல் சிந்தனையாளர்களும், மனிதநேய பண்பாளர்களும், மக்களுக்காக தினம் தினம் உழைக்கக்கூடியவர்களும் மனிதநேய மக்கள் கட்சியின் மூலம் களம் இறங்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-- முத்துப்பேட்டை முகைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக