சனி, 3 டிசம்பர், 2011

திருவாரூரில் டிசம்பர் 6 ல் – கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

இழந்த உரிமையை மீட்போம்… இருக்கும் உரிமையை காப்போம்..
நாங்கள் ராமருக்கோ, ராமர் கோயில் கட்டப்படுவதற்கோ, எதிரானவர்கள் அல்லர். உண்மைக்கு மாறாக, ஆங்கிலேய வரலாற்றுப் புரட்டர்களின் பிரிவினைவாத சூழ்ச்சிகளை நம்பி பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தில்தான் ராமர் பிறந்தார் என்பதையும், அங்குதான் ராமர்கோவில் கட்டப்பட வேண்டும் என்பதையும் தான் எதிர்க்கிறோம்.



அயோத்தியில் உள்ள பிற ராமர் கோயில்களுக்கு நிலங்களை வாரி வழங்கிய பாபர், இந்துக்களின் மீது அன்பைப்பொழிந்தவர். தன் மகன், முகலாய மன்னர் ஹூமாயூனுக்க எழுதிய ஒரு கடிதத்தில், இந்துக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் மாட்டுக்கறி உண்பதைக் கைவிடு என்று கட்டளையிட்டவர். அப்படியிருக்கையில், எப்படி ராமர் கோயிலை இடித்து, மசூதி கட்ட முடியும்? தயவு செய்து சிந்தியுங்கள்.


டிசம்பர் 6ல் பாபரி மஸ்ஜிதை முன்னிறுத்தி நடத்தும் அறவழிப்ட போராட்டங்கள் சிறுபான்மையினரின் உரிமைகளுக்காக நடத்தப்படும் போராட்டம் அல்ல. வரலாற்று உண்மைகளைப் புரியவைக்க, சட்டத்தின் நீதியை நிலைநாட்ட, ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்னையைக் காக்க, இந்தியாவின் பாரம்பரிய புகழின் மீது விழுந்த களங்கத்தைத் துடைக்க, நல்லிணக்கத்தை வலிமைப்படுத்த நடக்கும் போராட்டம் என்பதை மறக்காதீர்.


அக்டோபர் 30 – 2010 அன்று 61 ஆண்டு கால இவ்வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய வினோத தீர்ப்புக்கு நாடெங்கும் கண்டனங்கள் எழுந்தது. இப்போது இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.



குற்றவாளிகளாக சித்தரிக்கப்பட்டுள்ள ஒரு சமூகம், தன்னை நிரபராதிகள் என நிரூபிக்கத் துடிக்கிறது. அறவழிப்போராட்டங்கள் மூலம் விரைவாக நீதியைப் பெற விரும்புகிறது. எனவே..


பாப்ரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் விரைந்து தீர்ப்பு வழங்கக் கோரியும், லிபர்ஹான் ஆணையப் பரிந்துரையின் அடிப்படையில் பாப்ரி மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரியும்..

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் டிசம்பர் 6ம் தேதி காலை 10 மணியளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமானது திருவாரூர் தலைமை தபால் நிலையம் எதிரில் நடைபெற உள்ளது.



ஆர்ப்பாட்டத்தின் முடிவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கான கோரிக்கை மனுவை திருவாரூர் மாவட்ட நீதிபதி அவர்களிடம் சமர்ப்பிக்கப்படும்.

நேற்று மாலை 5 மணிக்கு முத்துப்பேட்டை தமுமுக அலுவலகத்தில் திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் சம்மந்தமாக சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினை சார்ந்த சகோதரர்கள் பலர் கலந்துக்கொண்டனர்.
முத்துப்பேட்டை தமுமுக நகர தலைவர் ஜனாப். சம்சுதீன் அவர்கள் கூறுகையில், திருவாரூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமுமுகவினர் மற்றும் ஏனைய சகோதரர்கள் திரளாக கலந்துக்கொள்ள வேண்டும், அதற்கான ஏற்பாட்டினை முத்துப்பேட்டை தமுமுகவானது செய்து கொண்டு வருகிறது என்றார்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் கண்டன உரையினை தமுமுகவின் தலைமை கழக பேச்சாளர் சகோதரர் கோவை. மஜீது நிகழ்த்த உள்ளார் என்ற தகவலையும் நமது செய்தியாளரிடம் தமுமுகவின் திருவாரூர் மாவட்ட செயலாளர் முத்துப்பேட்டை. முஹம்மது மாலிக் அவர்கள் கூறினார்.


நியாயவான்களே.. பங்கேற்பீர்..

அழைக்கிறது
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். திருவாரூர் மாவட்டம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக