சனி, 24 அக்டோபர், 2009

ஓச்சிரா வழக்கு: அப்துன் நாஸர் மாதனி விடுதலை



1992ல் ஐ.எஸ்.எஸ். அமைப்பின் தலைவராக அப்துன் நாஸர் மாதனி இருந்த போது அவர் மீது காவல்துறை போட்ட ஒரு வழக்கில் தற்போது அவர் விடுதலை ஆகியுள்ளார்.

1992ல் உ.பி. மாநிலம் பைசாபாத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் குண்டு வெடித்தது. இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 2, 1992ல் கேரளாவில் முழு அடைப்பிற்கு இஸ்லாமிக் சேவக் சங் (ஐ.எஸ்.எஸ்.) அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. முழு அடைப்பின் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. அடைப்பின் போது ஏற்பட்ட கலவரத்தில் பல காவலர்கள் காயமடைந்தனர். முழு அடைப்பின் போது ஒச்சராவில் உள்ள பள்ளிவாசலுக்கு வந்த அப்துன் நாஸர் மாதனி தான் வன்முறையை துண்டினார் என்று அவர் மீது காவல்துறை வழக்கு பதிவுச் செய்தது. முழு அடைப்பின் போது காவல்துறை வாகனங்களுக்கும், அரசு பேரூந்துகளுக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டன என்றும் காவல்துறை கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை கூட பயன்படுத்தவில்லை என்றும் வானத்தை நோக்கி மட்டும் சுட்;டதாகவும் காவல் தரப்பில் வாதிக்கப்பட்டது.


கொல்லம் கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது சரியான சாட்சியங்களை காவல்துறை சமர்பிக்கவில்லை என்றும் சாட்சிகளால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை அடையாளம் காட்ட இயலவில்லை என்று கூறி அப்துன் நாசர் மாதனி உட்பட அனைவரையும் நீதிபதி இ.பைஜுவிடுதலைச் செய்தார். இவ்வழக்கில் இருந்து விடுதலை ஆனது குறித்து அப்துன் நாஸர் மாதனி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக