புதன், 5 அக்டோபர், 2011

செவ்வாய், 4 அக்டோபர், 2011

முத்துப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சகோ.எஸ்.முஹம்மது மாலிக் அவர்களுக்கு பேரூந்து சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைப்பீர்...


முத்துப்பேட்டை பேரூராட்சியில் வது வார்டுக்கு போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சகோவழக்கறிஞர் தீன் முஹம்மது அவர்களுக்கு தென்னை மரம் சின்னத்தில் வாக்களிப்பீர்... வெற்றி பெற செய்வீர்...
முத்துப்பேட்டை பேரூராட்சியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கப்பட்டுள்ள சின்னங்கள்



முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவருக்கு போட்டியிடும் ம.ம.க வேட்பாளர் சகோ.முஹம்மது மாலிக் அவர்களுக்கு பஸ் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...




முத்துப்பேட்டையில் போட்டியிடும் ம.ம.க வேட்பாளர்கள் 3 வது வார்டு வேட்பாளர் சகோ.வழக்கறிஞர்.L.தீன் முஹம்மது அவர்களுக்கும் 13 வது வார்டு வேட்பாளர் சகோ.எம் நெய்னா முஹம்மது அவர்களுக்கும் 7 வது வார்டு வேட்பாளர் சகோ.எஸ் ஜெஹபர் சாதிக் அவர்களுக்கும் 'தென்னை மரம்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...


ம.ம.க வேட்பாளர்களுக்கு வாக்களிப்பீர் வெற்றி பெற செய்வீர்..


-- என்றும் அன்புடன் முத்துப்பேட்டை முகைதீன்


துபாய் அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள் பேரூராட்சி தேர்தலில் ம.ம.க வுக்கு ஆதரவு


ஒப்பற்ற இறைவனின் திருப்பெயரால்...


ஷார்ஜா மு.மு.க மர்கஸில் முத்துப்பேட்டை பேரூராட்சி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற தலைப்பில் முத்தப்பேட்டை சகோதரர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் மேலே உள்ள தலைப்பின் கீழ் அணைத்து சகோதரர்களிடமும் கருத்துக்கேட்கப்பட்டு விவாதம் நடைபெற்றது. இதில் சமீபகாலமாக அரசியலில் எழுச்சிபெற்று வரும் மனிதநேய மக்கள் கட்சியின் சமுதாய பணிகளையும், கடந்த கால சமூக பணி மற்றும் சமுதாய சேவைகளையும் கருத்தில் கொண்டதோடும், அதன் பேரூராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் சகோ.முஹம்மது மாலிக் அவர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவரும் தன்னலமற்ற சமுதாய சேவைகளை பற்றியும் அலசி ஆராய்ந்து எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் நமது முத்துப்பேட்டை சகோதரர்கள் ம.ம.க வேட்பாளர் சகோ.முஹம்மது மாலிக் அவர்களை ஆதரிப்பது என்று ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதனை கருத்தில் கொண்டு முத்துப்பேட்டை சகோதரர்கள் அணைவரும் நமது வேட்பாளர் சகோ.மாலிக் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறவைப்போம்.


- இவண். அமீரக வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள்.


குறிப்பு – அமீரகத்தில் வாழும் நமது ஊர் சகோதரர்களை தொடர்புகொண்டும், நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டாலும் சகோ.மாலிக் அவர்களுக்கு வாக்கு சேகரிப்பது என்று ஏகமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.


சகோதரர் மாலிக் அவர்கள் இறைவனின் மாபெரும் உதவியால் வெற்றி பெற எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்திப்போம்.


-- அமீரகத்திலிருந்து முத்துப்பேட்டை முகைதீன்



முத்துப்பேட்டை சகோதரர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்


அதிகமான முஸ்லிம்களை உள்ளடக்கிய முத்துப்பேட்டை, பேரூராட்சி என்ற அந்தஸ்த்தோடு இந்த 2011 உள்ளாட்சி மன்றத் தேர்தலையும் சந்திக்க இருக்கின்றது. முத்துப்பேட்டையில் பேரூராட்சி மன்றத் தலைவர்களுக்கு வெற்றி பெற்று வந்தவர்கள் அரசியல் கட்சியை சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். திமுக அதிமுக என மாறி பேரூராட்சி தலைவராக இருந்தாலும் ஊரின் நலனில் போதுமான கவனம் செலுத்தாமலேயே தங்கள் பதவி காலத்தை கழித்துள்ளனர் என்பது யாவரும் அறிந்த ஒன்றுதான். கடந்த காலங்களில் நடந்த தேர்தல்களில் போட்டியிட்டு வென்று பேரூராட்சி மன்றத் தலைவர்களாய் பவணிவந்தவர்களெல்லாம் ஒரு சிலரை தவிற தன்னை வழர்த்துக்கொண்ட அளவிற்கு முத்துப்பேட்டையின் நலனில் அக்கறை செலுத்தவில்லை. ஆகவேதான் நகராட்சி அந்தஸ்து பெரும் தகுதி முத்துப்பேட்டைக்கு இருந்தும் இன்று வரை பேரூராட்சியாகவே இயங்கி வருகின்றது. நகரிலும் சொல்லத்தக்க அளவில் எந்த முன்னேற்றமும் முத்துப்பேட்டை அடையவில்லை. காரணம் எந்த பேரூராட்சி தலைவரும் ஊரின் நலனை பற்றி சிந்திக்கவில்லை என்பதே மக்களின் கருத்து. அதையே தொன்றுத்தொட்டு தற்பொழுதும் திமுக அதிமுக என்பன போன்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளனர்.



அந்த வரிசையில் 16 ஆண்டு காலம் மக்கள் சேவையாற்றி வந்த த.மு.மு.க அதன் அரசியல் பிரிவான மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர்களை முத்துப்பேட்டையில் களம் இறக்குகின்றது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாய நலனுக்காகவும் ஊரின் நலனுக்காகவும் த.மு.மு.க வில் தன்னை அர்பணித்துக்கொண்டு பல்வேறு மக்கள் சேவைகளை களத்தில் இறங்கி செய்தும் தனது செம்மையான பணிகளின் மூலம் ஊரின் பலதரப்பட்ட மக்களிடமும் நற் பெயர் பெற்றுள்ள ம.ம.க வின் திருவாரூர் மாவட்ட செயலாளர் சகோ. சகோ.S.முஹம்மது மாலிக்.MA.,(POLITICAL) அவர்கள் அரசியல் களத்தில் உள்ளாட்சி அவைகளின் மூலமும் எந்த சுயநலமற்று மக்கள் பணியாற்ற ஆயத்தமாகி பேரூராட்சி மன்ற தலைவருக்கு களம் இறக்கப்பட்டுள்ளார். அரசியலில் முதுநிலை பட்டம் பெற்ற ஒரு இளைஞரை (சகோ.எஸ்.முஹம்மது மாலிக்) ம.ம.க வேட்பாளராக அறிவித்துள்ளது அல்ஹம்துலில்லாஹ்...



ஆற்றல் மிக்க தொண்டர்களும். தொலைநோக்கு பார்வை கொண்ட நல் சிந்தனையாளர்களும், மனிதநேய பண்பாளர்களும், மக்களுக்காக தினம் தினம் உழைக்கக்கூடியவர்களும் மனிதநேய மக்கள் கட்சியின் மூலம் களம் இறங்கி உள்ளனர்.



சமுதாயத்திற்காக சிறை சென்றும் தியாகம் செய்த ஒரு இளைய போராளியான சகோ.S.முஹம்மது மாலிக்.MA.,(POLITICAL) அவர்களுக்கு உங்களுடைய வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்வீர்...!



சுயநலம் இல்லா மக்கள் பணியாற்ற, ஊழல் இல்லா உள்ளாட்சி அமைந்திட, ஒரு மாற்றத்தை எதிர்நோக்கி நமது பேரூராட்சி வளர்ச்சியை நோக்கி பயணிக்க வாக்களியுங்கள்…! ம.ம.க வேட்பாளர்களை வெற்றி பெறச்செய்யுங்கள்...!!



எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில் மக்களுக்காகவே உழைக்கும் ஆற்றல் உடையவர்களை உங்களுடைய வாக்குகள் மூலம் தேர்ந்தெடுங்கள். முத்துப்பேட்டை முன்னேற்றம்கான நாமே அடையாளம் கண்டு நல்லவர்களை தேர்ந்தெடுப்போம் இன்ஷா அல்லாஹ். எதிர்வரும் 5 வருடத்தை ஊழல்வாதிகளிடமும், ஊரை அடித்து தன் உழையில் போட நினைக்கும் போலி அரசியல்வாதிகளிடமும் முத்துப்பேட்டையை ஒப்படைத்துவிட வேண்டாம். மக்களே சிந்திப்பீர்…! செயல்படுவீர்...!! நல்லவர்களை தேர்ந்தெடுப்பீர்...



மனிதநேய மக்கள் கட்சியின் முத்துப்பேட்டை வேட்பாளர்கள்.


பேரூராட்சி தலைவர் – சகோ.S.முஹம்மது மாலிக்.MA.,(POLITICAL)


3 வது வார்டு – சகோ.வழக்கறிஞர்.L.தீன் முஹம்மது.BSc.,BL.,


13 வது வார்டு – சகோ.M.நெய்னா முஹம்மது


7 வது வார்டு – சகோ.S.ஜெஹபர் சாதிக்



ரத்ததானம், ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவ சேவைகள், கல்வி உதவிகள், வட்டியில்லா கடனுதவிகள் என எங்கேயும் எப்போதும் எல்லா சேவைகளையும் செய்து வரும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வீர்...



ஊழலை எதிர்ப்பதில் உறுதி, திறமையான நிர்வாகம், முடிவெடுப்பதில் வேகம், எளிமையான அணுகுமுறை, அடிக்கடி மக்கள் சந்திப்பு, மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள், வாய்ப்பு தாருங்கள்.


என்றும் அன்புடன் முத்துப்பேட்டை முகைதீன்

வெள்ளி, 30 செப்டம்பர், 2011



அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்


ரத்த தானம், ஆம்புலன்ஸ் சேவைகள், மருத்துவ சேவைகள், கல்வி உதவிகள், வட்டியில்லா கடனுதவிகள் என எங்கேயும் எப்போதும் எல்லா சேவைகளையும் செய்து வரும்


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சி க்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்வீர்...


ஊழலை எதிர்ப்பதில் உறுதி திறமையான நிர்வாகம் முடிவெடுப்பதில் வேகம் எளிமையான அணுகுமுறை அடிக்கடி மக்கள் சந்திப்பு மனிதநேய மக்கள் கட்சிக்கு வாக்களியுங்கள் வாய்ப்பு தாருங்கள்.


பேரூராட்சி தலைவருக்கு - சகோ.எஸ்.முஹம்மது மாலிக்


மூன்றாவது வார்டுக்கு - சகோ.வழக்கறிஞர்.எல். தீன் முஹம்மது


13 மூன்றாவது வார்டுக்கு - சகோ - எம்.நெய்னா முஹம்மது


7 வது வார்டுக்கு - சகோ.எஸ். ஜெஹபர் சாதிக்


16 வது வார்டுக்கு - சகோ. எம். முஹம்மது யூசுப்


வாக்களிப்போம் வெற்றி பெற செய்வோம்... எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே... வெற்றி மமக வேட்பாளர்களுக்கே...


-- முத்துப்பேட்டை முகைதீன்